Category: நஸாயி

Nasa’i

Nasaayi-240

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மாவு பிசையும் பாத்திரத்தில் குளிப்பது.

240. உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மைமூனா (ரலி) அவர்களும், மாவுப் பிசையும் அடையாளம் இருந்த ஒரு பாத்திரத்திலிருந்து (ஒரே நீரைப் பயன்படுத்தி) குளித்தார்கள்.

 


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَ هُوَ وَمَيْمُونَةُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ»


Nasaayi-661

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தவறவிட்ட தொழுகைகளுக்காக பாங்கு சொல்வது.

661. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப்போர் சமயத்தில் நாங்கள் லுஹர் தொழுகையைத் தொழ முடியாதவாறு இணைவைப்பாளர்கள் எங்களை போரில் ஈடுபட செய்துவிட்டனர். போர் சூரியன் மறையும் வரை நீடித்தது. போர் குறித்த (கடுமையான) கட்டளைகள் இறங்குவதற்கு முன்பு இது நடந்தது.

பிறகு, “நம்பிக்கை கொண்டோருக்காக போரிட அல்லாஹ் போதுமானவன்” (அல்குர்ஆன்: 33:25) எனும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்.

எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களுக்கு (தவறவிட்ட தொழுகைக்காக இகாமத் கூறுமாறு) கட்டளையிட்டார்கள். பிலால் (ரலி) அவர்கள் லுஹர் தொழுகைக்கு இகாமத் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை அதன் நேரத்தில் தொழுவது போலவே தொழுதார்கள். பின்னர் அஸர் தொழுகைக்கு இகாமத் சொன்னார்கள். அதையும் அதன் நேரத்தில் தொழுவது போலவே தொழுதார்கள். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்கு பாங்கு சொன்னார்கள். அதையும் அதன் நேரத்தில் தொழுவது போலவே தொழுதார்கள்.


شَغَلَنَا الْمُشْرِكُونَ يَوْمَ الْخَنْدَقِ عَنْ صَلَاةِ الظُّهْرِ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، وَذَلِكَ قَبْلَ أَنْ يَنْزِلَ فِي الْقِتَالِ مَا نَزَلَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَكَفَى اللَّهُ الْمُؤْمِنِينَ الْقِتَالَ} [الأحزاب: 25] «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا فَأَقَامَ لِصَلَاةِ الظُّهْرِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا لِوَقْتِهَا، ثُمَّ أَقَامَ لِلْعَصْرِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا، ثُمَّ أَذَّنَ لِلْمَغْرِبِ فَصَلَّاهَا كَمَا كَانَ يُصَلِّيهَا فِي وَقْتِهَا»


Nasaayi-680

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

680.


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ. آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ الْمَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ إِلَّا حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ


Nasaayi-677

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

677. அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஆவியா (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவருடைய முஅத்தின் (பாங்கு சொல்பவர்) பாங்கு கூறினார். பாங்கு சொல்பவர் கூறியவாறே முஆவியா (ரலி) அவர்களும் கூறி வந்தார்கள்.

பாங்கு சொல்பவர் “ஹய்ய அலஸ்ஸலாஹ்” (தொழுகையின்பால் வாருங்கள்) என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியின்றி எந்த சக்தியும் இல்லை, எந்த வல்லமையும் இல்லை) என்று குறிப்பிட்டார்கள்.

பிறகு பாங்கு சொல்பவர் “ஹய்ய அலல் ஃபலாஹ்” (வெற்றியின்பால் வாருங்கள்) என்று கூறியபோது, முஆவியா (ரலி) அவர்களும், “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று குறிப்பிட்டார்கள்.

அதன் பிறகு பாங்கு சொல்பவர் கூறியதை அப்படியே முஆவியா (ரலி) அவர்களும் கூறினார்கள்.

பிறகு முஆவியா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்வதை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.


إِنِّي عِنْدَ مُعَاوِيَةَ إِذْ أَذَّنَ مُؤَذِّنُهُ، فَقَالَ مُعَاوِيَةُ كَمَا قَالَ الْمُؤَذِّنُ حَتَّى إِذَا قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». فَلَمَّا قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ. قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». وَقَالَ بَعْدَ ذَلِكَ مَا قَالَ الْمُؤَذِّنُ، ثُمَّ قَالَ: «سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مِثْلَ ذَلِكَ»


Nasaayi-678

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

678. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

 


«إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ وَصَلُّوا عَلَيَّ؛ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ؛ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ أَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ»


Nasaayi-922

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இமாம் பின்பற்றப்படுவதற்காகவே (முன்னிறுத்தப்பட்டுள்ளார்). எனவே, அவர் தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் (குர்ஆனை) ஓதினால், நீங்கள் மௌனமாக செவிமடுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


அபூஅப்துர் ரஹ்மான்-நஸாயீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் ஸஃத் அல்அன்சாரீ பலமானவர் என்று முஃகர்ரமி (ரஹ்) அவர்கள் (அடிக்கடி) கூறுவார்.


«إِنَّمَا الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا»


Nasaayi-1740

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1740.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا فَرَغَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثًا


Nasaayi-1735

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1735.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»،


Nasaayi-1751

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1751.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَيَقُولُ بَعْدَ مَا يُسَلِّمُ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ يَرْفَعُ بِهَا صَوْتَهُ،


Next Page » « Previous Page