Category: நஸாயி

Nasaayi-4238

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4238. மைமூனா (ரலி) அவர்களுக்கு சொந்தமான ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ لِمَيْمُونَةَ مَيِّتَةٍ فَقَالَ: «أَلَّا أَخَذْتُمْ إِهَابَهَا فَدَبَغْتُمْ فَانْتَفَعْتُمْ»


Nasaayi-4236

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4236. மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீங்கள் அதன் தோலை உறித்தெடுத்து, பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் ‘இது தானாகச் செத்ததாயிற்றே’ என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அதை உண்பது தான் ஹராம்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் :  இப்னு அப்பாஸ் (ரலி)


أَبْصَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةً مَيِّتَةً لِمَوْلَاةٍ لِمَيْمُونَةَ، وَكَانَتْ مِنَ الصَّدَقَةِ، فَقَالَ: «لَوْ نَزَعُوا جِلْدَهَا فَانْتَفَعُوا بِهِ» قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ قَالَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا»


Nasaayi-4235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4235. மைமூனா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு ஒரு ஆடு தர்மமாக கொடுக்கப்பட்டது. அந்த ஆடு செத்துவிட்டது. அந்த ஆட்டைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘அதன் தோலை நீங்கள் எடுத்துப் பாடம் செய்து பயன்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார்கள்.

அதற்கு நபித்தோழர்கள் ‘இது தானாகச் செத்ததாயிற்றே’ என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ‘அதை உண்பது தான் ஹராம்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் :  இப்னு அப்பாஸ் (ரலி)


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَيِّتَةٍ كَانَ أَعْطَاهَا مَوْلَاةً لِمَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «هَلَّا انْتَفَعْتُمْ بِجِلْدِهَا؟» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا حُرِّمَ أَكْلُهَا»


Nasaayi-5409

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5409. அப்பாத் பின் ஷுரஹ்பீல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பஞ்சம் ஏற்பட்ட ஒரு நேரத்தில்) நான் எனது தந்தையின் சகோதரர்களுடன் மதீனாவுக்கு வந்தேன். அப்போது நான் அங்கிருந்த ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த கதிர்களைத் தேய்த்து (விதை எடுத்து) உண்டேன். அப்போது தோட்டத்தின் உரிமையாளர் வந்து, எனது மேலாடையைப் பறித்துக் கொண்டு என்னை அடித்தார்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து முறையிட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். அவர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! அவர் எனது தோட்டத்திற்குள் நுழைந்து கதிர்களைத் தேய்த்துப் பாழாக்கினார்” என்றார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த உரிமையாளரை நோக்கி), “அவர் அறியாதவராக இருந்தபோது அவருக்கு நீ கற்றுக் கொடுக்கவில்லையே! அவர் பசியோடு இருந்தபோது அவருக்கு நீ உணவளிக்கவில்லையே!” என்று கூறிவிட்டு, “அவரது ஆடையைத் திருப்பிக் கொடுத்துவிடு” என்று கட்டளையிட்டார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஒரு ‘வஸ்க்’ அல்லது அரை ‘வஸ்க்’ (உணவு தானியம்) வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.


قَدِمْتُ مَعَ عُمُومَتِي الْمَدِينَةَ فَدَخَلْتُ حَائِطًا مِنْ حِيطَانِهَا، فَفَرَكْتُ مِنْ سُنْبُلِهِ، فَجَاءَ صَاحِبُ الْحَائِطِ فَأَخَذَ كِسَائِي وَضَرَبَنِي، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَعْدِي عَلَيْهِ، فَأَرْسَلَ إِلَى الرَّجُلِ، فَجَاءُوا بِهِ فَقَالَ: «مَا حَمَلَكَ عَلَى هَذَا؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ دَخَلَ حَائِطِي، فَأَخَذَ مِنْ سُنْبُلِهِ فَفَرَكَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا عَلَّمْتَهُ إِذْ كَانَ جَاهِلًا، وَلَا أَطْعَمْتَهُ إِذْ كَانَ جَائِعًا، ارْدُدْ عَلَيْهِ كِسَاءَهُ»، وَأَمَرَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَسْقٍ أَوْ نِصْفِ وَسْقٍ


Nasaayi-3340

ஹதீஸின் தரம்: More Info

3340. உம்மு சுலைம் (ரலி) அவர்கள் முன்னரே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவரை அபூதல்ஹா மணந்து கொள்ள விரும்பினார். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நான் இஸ்லாத்தை ஏற்றவள். நீரும் இஸ்லாத்தை எற்றுக் கொண்டால் உம்மை மணந்து கொள்கிறேன் என்றார்கள். அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.


تَزَوَّجَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ، فَكَانَ صِدَاقُ مَا بَيْنَهُمَا الْإِسْلَامَ، أَسْلَمَتْ أُمُّ سُلَيْمٍ قَبْلَ أَبِي طَلْحَةَ، فَخَطَبَهَا، فَقَالَتْ: إِنِّي قَدْ أَسْلَمْتُ، فَإِنْ أَسْلَمْتَ نَكَحْتُكَ، فَأَسْلَمَ فَكَانَ صِدَاقَ مَا بَيْنَهُمَا


Nasaayi-5236

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5236. நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தபோது தலைவிரி கோலத்துடன் ஒரு மனிதரை கண்டார்கள். அப்போது, “இவர் தமது முடியைப் படிய வைக்கும் ஒரு பொருளைப் பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


أَتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا ثَائِرَ الرَّأْسِ فَقَالَ: «أَمَا يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ»


Nasaayi-5066

ஹதீஸின் தரம்: More Info

5066. நான் நீண்ட முடியுடையவனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான் சென்று என் முடியைக் கத்தரித்து விட்டுச் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் உன்னைச் சொல்லவில்லை என்றாலும் இது (முன்பை விட) அழகாக உள்ளது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِي جُمَّةٌ، قَالَ ذُبَابٌ: وَظَنَنْتُ أَنَّهُ يَعْنِينِي، فَانْطَلَقْتُ فَأَخَذْتُ مِنْ شَعْرِي، فَقَالَ: «إِنِّي لَمْ أَعْنِكَ وَهَذَا أَحْسَنُ»


Nasaayi-5052

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5052. நான் நீண்ட முடியுடையவனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது ஆட்சேபணை செய்வது போன்ற ஒரு சொல்லைக் கூறினார்கள். உடனே நான் சென்று என் முடியைக் கத்தரித்து விட்டுச் சென்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் உன்னைச் சொல்லவில்லை என்றாலும் இது (முன்பை விட) அழகாக உள்ளது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِي شَعْرٌ، فَقَالَ ذُبَابٌ:، فَظَنَنْتُ أَنَّهُ يَعْنِينِي، فَأَخَذْتُ مِنْ شَعْرِي، ثُمَّ أَتَيْتُهُ، فَقَالَ لِي: «لَمْ أَعْنِكَ وَهَذَا أَحْسَنُ»


Nasaayi-5314

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5314. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலையை வாரி இரண்டு சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்களை விட அழகான ஒருவரை அதற்கு முன்பும் பின்பும் நான் பார்த்ததில்லை.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆஸிப் (ரலி)


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ مُتَرَجِّلًا لَمْ أَرَ قَبْلَهُ، وَلَا بَعْدَهُ أَحَدًا هُوَ أَجْمَلُ مِنْهُ»


Nasaayi-2802

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2802. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது., நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும் வரை முறையோடு அதில் ஏறிச் செல்க என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ் (ரஹ்)


«ارْكَبْهَا بِالْمَعْرُوفِ إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا حَتَّى تَجِدَ ظَهْرًا»


Next Page » « Previous Page