Category: நஸாயி

Nasaayi-2031

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2031. அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்; வீட்டில் இருக்கும் எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்!”என்று கூறினார்கள்…


قَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «لَا تَدَعَنَّ قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ، وَلَا صُورَةً فِي بَيْتٍ إِلَّا طَمَسْتَهَا»


Nasaayi-3096

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3096. இணைவைப்போருடன் உங்களுடைய பொருட்களாலும் உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் ஜிஹாத் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ وَأَيْدِيكُمْ وَأَلْسِنَتِكُمْ»


Nasaayi-3192

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3192. உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«جَاهِدُوا بِأَيْدِيكُمْ وَأَلْسِنَتِكُمْ وَأَمْوَالِكُمْ»


Nasaayi-4209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4209. ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)


أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»


Nasaayi-2553

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2553. (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். ( இப்படி மூன்று முறை செய்தார்கள்)

பிறகு, ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

(அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்)  அவர்கள் கூறியதாவது:

(நபியவர்கள் நரகத்தைப் பற்றி) மூன்று முறை கூறி, மூன்று முறை அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி மூன்று முறை தம் முகத்தை திருப்பிக்கொண்டார்கள்)


ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّارَ فَأَشَاحَ بِوَجْهِهِ وَتَعَوَّذَ مِنْهَا – ذَكَرَ شُعْبَةُ أَنَّهُ فَعَلَهُ ثَلَاثَ مَرَّاتٍ – ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ، وَلَوْ بِشِقِّ التَّمْرَةِ، فَإِنْ لَمْ تَجِدُوا، فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ»


Nasaayi-2552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2552. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)


«اتَّقُوا النَّارَ، وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»


Nasaayi-1138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1138. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் தங்கிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு உளூச் செய்ய தண்ணீர் மற்றும் தேவையானவற்றைக் கொண்டு வந்தேன். அப்போது அவர்கள், “நீ என்னிடம் (தேவையானதைக்) கேள்” என்று கூறினார்கள். “நான் உங்களுடன் சுவனத்தில் இருப்பதையே கேட்கின்றேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “இதைத் தவிர வேறு ஒன்றுமில்லையா?” என்று கேட்டார்கள். “அது மட்டும் தான்” என்று கூறினேன். “அப்படியானால் நீ அதிகமாகத் தொழுவதன் மூலம் உனக்கு அது கிடைப்பதற்கு என்னுடன் ஒத்துழைப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமி (ரலி)


كُنْتُ آتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضُوئِهِ وَبِحَاجَتِهِ، فَقَالَ: «سَلْنِي»، قُلْتُ: مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ، قَالَ: «أَوَ غَيْرَ ذَلِكَ»، قُلْتُ: هُوَ ذَاكَ، قَالَ: «فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ»


Nasaayi-467

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

467. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும்.

அவனது தொழுகையில் குறை இருந்தால், “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள் என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


أَوَّلُ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ صَلَاتُهُ، فَإِنْ كَانَ أَكْمَلَهَا وَإِلَّا قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: انْظُرُوا لِعَبْدِي مِنْ تَطَوُّعٍ، فَإِنْ وُجِدَ لَهُ تَطَوُّعٌ. قَالَ: أَكْمِلُوا بِهِ الْفَرِيضَةَ


Nasaayi-2753

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2753. என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி)


جَاءَنِي جِبْرِيلُ فَقَالَ لِي: يَا مُحَمَّدُ مُرْ أَصْحَابَكَ أَنْ يَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالتَّلْبِيَةِ


Nasaayi-3011

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3011. நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)


قَالَ أُسَامَةُ بْنُ زَيْدٍ: «كُنْتُ رَدِيفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَاتٍ، فَرَفَعَ يَدَيْهِ يَدْعُو، فَمَالَتْ بِهِ نَاقَتُهُ، فَسَقَطَ خِطَامُهَا فَتَنَاوَلَ الْخِطَامَ بِإِحْدَى يَدَيْهِ، وَهُوَ رَافِعٌ يَدَهُ الْأُخْرَى»


Next Page » « Previous Page