12.
الْفِطْرَةُ: قَصُّ الْأَظْفَارِ، وَأَخْذُ الشَّارِبِ، وَحَلْقُ الْعَانَةِ
12.
الْفِطْرَةُ: قَصُّ الْأَظْفَارِ، وَأَخْذُ الشَّارِبِ، وَحَلْقُ الْعَانَةِ
பாடம்: 2
இரவில் எழுந்ததும் பல் துலக்குதல்.
2 . ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எழும்போது, பல்துலக்கும் குச்சியால் தம் பற்களை நன்கு தேய்த்துத் துலக்குவார்கள்.
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا قَامَ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ»
பாடம்: 3
பல்துலக்குவது எவ்வாறு?
3 . அபூமூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தபோது சென்றேன். அப்போது பல்துலக்கும் குச்சியின் ஒரு பகுதி அவர்கள் நாவில் இருக்க, ‘அவ், அவ்’ என்று சப்தமிட்டார்கள்.
دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَسْتَنُّ وَطَرَفُ السِّوَاكِ عَلَى لِسَانِهِ وَهُوَ يَقُولُ: عَأْ عَأْ
பாடம்: 4
தலைவர், தமது குடிமக்கள் முன்னிலையில் பல்துலக்கலாமா?
4 . நான் நபி (ஸல்) அவர்களிடம் (எனது) ‘அஷ்அரீ’ குலத்தைச் சார்ந்த இருவரோடு வந்தேன். ஒருவர் என் வலப்புறத்திலும் இன்னொருவர் என் இடப்புறத்திலும் இருந்தனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது, அவ்விருவருமே (நபி-ஸல்) அவர்களிடம் அரசுப்) பதவி தருமாறு கேட்டனர்.
நான், “உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மேல் ஆணையாக! இவ்விருவரும் தம் மனங்களில் கொண்டிருந்த எண்ணத்தை என்னிடம் வெளிப்படுத்தவே இல்லை. இவர்கள் பதவி கேட்டே வருகிறார்கள் என்று நான் நினைக்கவுமில்லை” என்று கூறினேன்.
அப்போது, நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக் கொண்டிருந்த அந்தப் பல்துலக்கும் குச்சியை இப்போதும்கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “நாம் பதவியை விரும்புவோருக்கு உதவ (அல்லது உதவவே) மாட்டோம்” என்று கூறிவிட்டு “நீங்கள் செல்லுங்கள்” என்று என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)
(அபூமூஸா (ரலி) அவர்களை ஆளுநராக யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு அவருக்கு துணையாக முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் அனுப்பிவைத்தார்கள்)
أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعِي رَجُلَانِ مِنَ الْأَشْعَرِيِّينَ: أَحَدُهُمَا عَنْ يَمِينِي، وَالْآخَرُ عَنْ يَسَارِي. وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَاكُ فَكِلَاهُمَا سَأَلَ الْعَمَلَ. قُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ نَبِيًّا مَا أَطْلَعَانِي عَلَى مَا فِي أَنْفُسِهِمَا، وَمَا شَعَرْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى سِوَاكِهِ تَحْتَ شَفَتِهِ قَلَصَتْ. فَقَالَ: «إِنَّا لَا – أَوْ لنْ – نَسْتَعِينَ عَلَى الْعَمَلِ مَنْ أَرَادَهُ، وَلَكِنِ اذْهَبْ أَنْتَ».
فَبَعَثَهُ عَلَى الْيَمَنِ، ثُمَّ أَرْدَفَهُ مُعَاذُ بْنُ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
பாடம்: 6
அதிகமாகப் பல்துலக்குதல்.
6 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பல்துலக்குவது குறித்து உங்களுக்கு நான் அதிகமாகவே வலியுறுத்தியிருக்கிறேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
«قَدْ أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ»
பாடம்: 8
எல்லா நேரங்களிலும் பல்துலக்குதல்.
8 . ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
வீட்டில் நுழைந்ததும் நபி (ஸல்) அவர்கள் முதலில் என்ன செய்வார்கள்?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “பல்துலக்குவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
قُلْتُ لِعَائِشَةَ بِأَيِّ شَيْءٍ كَانَ يَبْدَأُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ بَيْتَهُ؟ قَالَتْ: «بِالسِّوَاكِ»
174.
أَتَوَضَّأُ مِنْ طَعَامٍ أَجِدُهُ فِي كِتَابِ اللَّهِ حَلَالًا لِأَنَّ النَّارَ مَسَّتْهُ، فَجَمَعَ أَبُو هُرَيْرَةَ حَصًى فَقَالَ: أَشْهَدُ عَدَدَ هَذَا الْحَصَى أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَوَضَّئُوا مِمَّا مَسَّتِ النَّارُ»
81.
أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «تَوَضَّأَ ثَلَاثًا ثَلَاثًا، يُسْنِدُ ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
2827.
«صَيْدُ الْبَرِّ لَكُمْ حَلَالٌ مَا لَمْ تَصِيدُوهُ، أَوْ يُصَادَ لَكُمْ»
2415.
நபி (ஸல்) அவர்களின் மனைவியும்-முஃமின்களின் தாயாருமான ஒருவர் (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதத்தின் முதல் திங்கட் கிழமை, (முதல் இரண்டு) வியாழக்கிழமை ஆகிய மூன்று நாள்களும் நோன்பு நோற்றுவந்தார்கள்.
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ مِنْ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ، أَوَّلَ اثْنَيْنِ مِنَ الشَّهْرِ، ثُمَّ الْخَمِيسَ، ثُمَّ الْخَمِيسَ الَّذِي يَلِيهِ»
சமீப விமர்சனங்கள்