Category: நஸாயி

Nasaayi-4127

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4127. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.

தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படக் கூடாது.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَلَا يُؤْخَذُ الرَّجُلُ بِجَرِيرَةِ أَبِيهِ، وَلَا بِجَرِيرَةِ أَخِيهِ»


Nasaayi-4126

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4126. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.

தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவன் தண்டிக்கப்பட மாட்டான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நஸாயீ இமாம் கூறுகிறார்:

இது தவறாகும். இந்த செய்தி முர்ஸல் என்பதே உண்மையாகும்.


«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، لَا يُؤْخَذُ الرَّجُلُ بِجِنَايَةِ أَبِيهِ، وَلَا جِنَايَةِ أَخِيهِ»


Nasaayi-4125

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4125. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Nasaayi-1730

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1730.

நபி (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்) வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற திருக்குர்ஆனின் 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல் யாஅய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது  ரக்அத்தில்) குல் ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்வார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»،

خَالَفَهُمَا حُصَيْنٌ، فَرَوَاهُ عَنْ ذَرٍّ، عَنْ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Nasaayi-1729

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1729.

நபி (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்) வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற திருக்குர்ஆனின் 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல் யாஅய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது  ரக்அத்தில்) குல் ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று மூன்று முறை சொல்வார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْوِتْرِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا سَلَّمَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثَ مَرَّاتٍ


Nasaayi-1700

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1700.

நபி (ஸல்) அவர்கள் (மூன்று ரக்அத்) வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற திருக்குர்ஆனின் 87 வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல் யாஅய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது  ரக்அத்தில்) குல் ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَةِ الْأُولَى مِنَ الْوِتْرِ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَفِي الثَّانِيَةِ بِقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَفِي الثَّالِثَةِ بِقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»


Nasaayi-1747

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1747.

“அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க”

இதன் பொருள் :
இறைவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்தியை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டு பாதுகாப்புத் தேடுகிறேன். உன்னை என்னால் முழுமையாகப் புகழ இயலாது. நீ உன்னை எவ்வாறு புகழ்ந்து கொண்டாயோ அவ்வாறு இருக்கிறாய்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي آخِرِ وِتْرِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»


Nasaayi-777

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

777.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது அன்சாரிகள் எங்களில் ஒரு தலைவரும் உங்களில் ஒரு தலைவரும் (நியமிக்கப்பட வேண்டும்) என்று கூறினார்கள். அவர்களிடத்தில் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழவைக்குமாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டது உங்களுக்குத் தெரியாதா? எனவே அபூபக்ரை முந்துவதற்கு உங்களில் எவரது உள்ளம் விரும்பும்? என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள் அபூபக்ரை முந்துவதை விட்டும் அல்லாஹ்விடத்தில் நாங்கள் பாதுகாவல் தேடுகிறோம் என்று கூறினார்கள்.


لَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتِ الْأَنْصَارُ: مِنَّا أَمِيرٌ وَمِنْكُمْ أَمِيرٌ. فَأَتَاهُمْ عُمَرُ فَقَالَ: «أَلَسْتُمْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَمَرَ أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، فَأَيُّكُمْ تَطِيبُ نَفْسُهُ أَنْ يَتَقَدَّمَ أَبَا بَكْرٍ؟» قَالُوا نَعُوذُ بِاللَّهِ أَنْ نَتَقَدَّمَ أَبَا بَكْرٍ


Nasaayi-5540

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 51

குடிபானங்கள்:

பாடம்:

மதுபானத் தடைச் சட்டம்.

அல்லாஹ் கூறுகிறான்:

“மது, சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?” (அல்குர்ஆன் 5:91) என்ற (ஸூரத்துல் மாயிதாவின்) வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:91)

5540. மதுவை தடை செய்யும் வசனம் இறங்குவதற்கு முன் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று கூறினார். அப்போது, “மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது எனக் கூறுவீராக!” (அல்குர்ஆன் 2:219) என்ற ஸூரத்துல் பகராவின் வசனம் இறங்கியது. அப்போது, உமர் (ரலி) அவர்கள் அழைக்கப்பட்டு அவரிடம் இந்த வசனம் ஓதிக் காட்டப்பட்டது. அப்போதும் அவர்கள் “அல்லாஹ்வே! மதுவின் விசயத்தில் எங்களுக்கு மன ஆறுதல் தரும் வகையில் தெளிவுப் படுத்துவாயாக! என்று

لَمَّا نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ قَالَ عُمَرُ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا» فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْبَقَرَةِ فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ “، فَقَالَ عُمَرُ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا»، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي النِّسَاءِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43] فَكَانَ مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَقَامَ الصَّلَاةَ نَادَى: {لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى} [النساء: 43] فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ بَيِّنْ لَنَا فِي الْخَمْرِ بَيَانًا شَافِيًا»، فَنَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي الْمَائِدَةِ فَدُعِيَ عُمَرُ فَقُرِئَتْ عَلَيْهِ، فَلَمَّا بَلَغَ {فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ} [المائدة: 91] قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «انْتَهَيْنَا انْتَهَيْنَا»


Nasaayi-185

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

185.

“சமைத்த பொருட்களை உண்பதால் (உளூ நீங்குமா? நீங்காதா?) என்ற இரண்டு விஷயங்களில் உளூ நீங்காது” என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறுதிக்கட்ட நடைமுறையாக இருந்தது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«كَانَ آخِرُ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكَ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ»


Next Page » « Previous Page