Category: நஸாயி

Nasa’i

Nasaayi-514

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

யார் அஸ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளை அடைந்து கொள்கிறாரோ

514. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் சூரியன் மறைவதற்கு முன் ‘அஸ்ர்’ தொழுகையின் இரண்டு ரக்அத்களை அடைந்துகொள்கிறாரோ, அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் ‘ஸுப்ஹ்’ தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்துகொள்கிறாரோ, அவர் அத்தொழுகையை அடைந்துகொண்டார் -அதாவது, அந்தத் தொழுகையின் நேரத்திற்குள் ஒரு ரக்அத்தைப் பெற்றுவிட்டதால், அந்தத் தொழுகை நேரத்திற்குள் தொழுததாகக் கருதப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

 


«مَنْ أَدْرَكَ رَكْعَتَيْنِ مِنْ صَلَاةِ الْعَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، أَوْ رَكْعَةً مِنْ صَلَاةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ».


Nasaayi-513

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அஸ்ர் நேரத்தின் முடிவு

513.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிப்பவதவது :

ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களுக்குத் தொழுகையின் நேரங்களைக் கற்றுக் கொடுத்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் முன்னால் நின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள்; மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்தபோது அவர் லுஹர் தொழுகையைத் தொழுதார்கள்.

பிறகு, ஒரு மனிதனின் நிழல் அவனுடைய உயரத்திற்குச் சமமாக இருந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். முன்பு செய்ததைப் போலவே செய்தார்கள்; ஜிப்ரீல் (அலை) அவர்கள் முன்னால் நின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள்; மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். அவர் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள்.

பிறகு, சூரியன் மறைந்தபோது ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவர்களிடம் வந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் முன்னால் நின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள்; மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். அவர் மஃரிப் தொழுகையைத் தொழுதார்கள்.

பிறகு,

«أَنَّ جِبْرِيلَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُعَلِّمُهُ مَوَاقِيتَ الصَّلَاةِ، فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَصَلَّى الظُّهْرَ حِينَ زَالَتِ الشَّمْسُ، وَأَتَاهُ حِينَ كَانَ الظِّلُّ مِثْلَ شَخْصِهِ، فَصَنَعَ كَمَا صَنَعَ، فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ أَتَاهُ حِينَ وَجَبَتِ الشَّمْسُ، فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَصَلَّى الْمَغْرِبَ. ثُمَّ أَتَاهُ حِينَ غَابَ الشَّفَقُ، فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَصَلَّى الْعِشَاءَ، ثُمَّ أَتَاهُ حِينَ انْشَقَّ الْفَجْرُ فَتَقَدَّمَ جِبْرِيلُ وَرَسُولُ اللهِ صلى الله عليه وسلم خَلْفَهُ، وَالنَّاسُ خَلْفَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَصَلَّى الْغَدَاةَ، ثُمَّ أَتَاهُ الْيَوْمَ الثَّانِيَ حِينَ كَانَ ظِلُّ الرَّجُلِ مِثْلَ شَخْصِهِ، فَصَنَعَ مِثْلَ مَا صَنَعَ بِالْأَمْسِ، فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَتَاهُ حِينَ كَانَ ظِلُّ الرَّجُلِ مِثْلَ شَخْصَيْهِ، فَصَنَعَ كَمَا صَنَعَ بِالْأَمْسِ فَصَلَّى الْعَصْرَ، ثُمَّ أَتَاهُ حِينَ وَجَبَتِ الشَّمْسُ، فَصَنَعَ كَمَا صَنَعَ بِالْأَمْسِ، فَصَلَّى الْمَغْرِبَ فَنِمْنَا، ثُمَّ قُمْنَا، ثُمَّ نِمْنَا، ثُمَّ قُمْنَا، فَأَتَاهُ فَصَنَعَ كَمَا صَنَعَ بِالْأَمْسِ، فَصَلَّى الْعِشَاءَ، ثُمَّ أَتَاهُ حِينَ امْتَدَّ الْفَجْرُ وَأَصْبَحَ وَالنُّجُومُ بَادِيَةٌ مُشْتَبِكَةٌ، فَصَنَعَ كَمَا صَنَعَ بِالْأَمْسِ، فَصَلَّى الْغَدَاةَ ثُمَّ قَالَ: مَا بَيْنَ هَاتَيْنِ الصَّلَاتَيْنِ وَقْتٌ».


Nasaayi-512

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

513.


«الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ».


Nasaayi-512

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

512.


«الَّذِي تَفُوتُهُ صَلَاةُ الْعَصْرِ، فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ».


Nasaayi-511

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அஸ்ர் தொழுகையை தாமதிப்பது குறித்து கடுமையான எச்சரிக்கை.

511. நாங்கள் பஸ்ராவில் உள்ள அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்றோம். அது பள்ளிவாசலுக்கு அருகில் இருந்தது. நாங்கள் லுஹ்ர் தொழுகையை முடித்துவிட்டு அவர்களிடம் சென்றபோது, அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதுவிட்டீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘இல்லை; இப்போதுதான் லுஹ்ர் தொழுகையை முடித்துவிட்டு வந்தோம்’ என்றோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ‘அப்படியானால் அஸ்ர் தொழுகையைத் தொழுங்கள்’ என்றார்கள். நாங்கள் எழுந்து அஸ்ர் தொழுகையைத் தொழுதோம். தொழுகையை முடித்ததும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்: “அது முனாஃபிக்கின் தொழுகையாகும். அவன் அஸ்ர் தொழுகையை எதிர்பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பான். சூரியன் மறைவதற்கு நெருக்கமாகி, ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் இருக்கும் நேரம் வந்ததும் எழுந்து, நான்கு ரக்அத்துகளை மிக வேகமாகத் தொழுவான்; அதில் அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவுகூருவான்.

அறிவிப்பவர்: அல்-அலா (ரஹ்)


«أَنَّهُ دَخَلَ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي دَارِهِ بِالْبَصْرَةِ حِينَ انْصَرَفَ مِنَ الظُّهْرِ، وَدَارُهُ بِجَنْبِ الْمَسْجِدِ، فَلَمَّا دَخَلْنَا عَلَيْهِ قَالَ: أَصَلَّيْتُمُ الْعَصْرَ؟ قُلْنَا: لَا، إِنَّمَا انْصَرَفْنَا السَّاعَةَ مِنَ الظُّهْرِ، قَالَ: فَصَلُّوا الْعَصْرَ، قَالَ: فَقُمْنَا فَصَلَّيْنَا، فَلَمَّا انْصَرَفْنَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: تِلْكَ صَلَاةُ الْمُنَافِقِ، جَلَسَ يَرْقُبُ صَلَاةَ الْعَصْرِ، حَتَّى إِذَا كَانَتْ بَيْنَ قَرْنَيِ الشَّيْطَانِ قَامَ فَنَقَرَ أَرْبَعًا، لَا يَذْكُرُ اللهَ عز وجل فِيهَا إِلَّا قَلِيلًا».


Nasaayi-509

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

 

பாடம்:

அஸர் தொழுகையை விரைந்து தொழுவது

509.

நாங்கள் உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களுடன் லுஹ்ர் தொழுகையைத் தொழுதோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுது கொண்டிருந்தார்கள். நான், என் பெரிய தந்தையே நீங்கள் தொழுத இந்தத் தொழுகை என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அஸ்ர் தொழுகை என்று சொன்னார்கள் . நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது வந்த தொழுகை இதுதான் என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூ உமாமா பின் ஸஹ்ல் (ரலி)


«صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ، قُلْتُ: يَا عَمِّ، مَا هَذِهِ الصَّلَاةُ الَّتِي صَلَّيْتَ؟ قَالَ: الْعَصْرَ، وَهَذِهِ صَلَاةُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الَّتِي كُنَّا نُصَلِّي».


Nasaayi-510

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

510.


«صَلَّيْنَا فِي زَمَانِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، ثُمَّ انْصَرَفْنَا إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَوَجَدْنَاهُ يُصَلِّي، فَلَمَّا انْصَرَفَ قَالَ لَنَا: صَلَّيْتُمْ؟ قُلْنَا: صَلَّيْنَا الظُّهْرَ قَالَ: إِنِّي صَلَّيْتُ الْعَصْرَ، فَقَالُوا لَهُ: عَجَّلْتَ، فَقَالَ:       إِنَّمَا أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي يُصَلُّونَ».


Nasaayi-505

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அஸர் தொழுகையை விரைந்து தொழுவது

505. நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். அப்போது சூரிய ஒளி இன்னும் அவர்களுடைய அறைக்குள் இருந்தது; அந்த அறைக்குள் நிழல் முழுமையாகப் பரவியிருக்கவில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صَلَّى صَلَاةَ الْعَصْرِ، وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، لَمْ يَظْهَرِ الْفَيْءُ مِنْ حُجْرَتِهَا».

 


Nasaayi-504

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அஸர் தொழுகையின் ஆரம்ப நேரம்.

504. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையின் நேரங்களைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடன் சேர்ந்து தொழுவீராக” என்று கூறினார்கள். முதல் நாளில், சூரியன் உச்சி சாய்ந்தபோது ளுஹர் தொழுகையையும், ஒவ்வொரு பொருளின் நிழலும் அதன் அளவுக்கு வந்தபோது அஸர் தொழுகையையும், சூரியன் மறைந்தபோது மஃரிப் தொழுகையையும், செவ்வானம் மறைந்தபோது இஷா தொழுகையையும் தொழுதார்கள். மறுநாளில், ஒரு மனிதனின் நிழல் அவரது  உயரத்திற்குச் சமமாக வந்தபோது ளுஹர் தொழுகையையும், அவரது நிழல் இருமடங்காக உயர்ந்தபோது அஸர் தொழுகையையும், செவ்வானம் மறைவதற்குச் சற்று முன்பாக மஃரிப் தொழுகையையும் நபியவர்கள் தொழுதார்கள்.

 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

 

 

 

 

 

 


«سَأَلَ رَجُلٌ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ؛ فَقَالَ: صَلِّ مَعِي، فَصَلَّى الظُّهْرَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ حِينَ كَانَ فَيْءُ كُلِّ شَيْءٍ مِثْلَهُ، وَالْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ، وَالْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ قَالَ: ثُمَّ صَلَّى الظُّهْرَ حِين كَانَ فَيْءُ الْإِنْسَانِ مِثْلَهُ، وَالْعَصْرَ حِينَ كَانَ فَيْءُ الْإِنْسَانِ مِثْلَيْهِ، وَالْمَغْرِبَ حِينَ كَانَ قُبَيْلَ غَيْبُوبَةِ الشَّفَقِ. قَالَ عَبْدُ اللهِ بْنُ الْحَارِثِ: ثُمَّ قَالَ فِي الْعِشَاءِ: أُرَى إِلَى ثُلُثِ اللَّيْلِ».


Nasaayi-502

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

ளுஹர் தொழுகை நேரம் முடிவடைவதைப் பற்றிய பாடம்.

502. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக இவர் உங்களிடம் வந்துள்ளார். அவர் அதிகாலை வைகறை-ஃபஜ்ர் தோன்றியபோது சுப்ஹ் தொழுதார். சூரியன் உச்சியை விட்டுச் சாய்ந்தபோது ளுஹ்ர் தொழுதார். ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்திற்குச் சமமானதை அவர் கண்டபோது அஸர் தொழுதார். பின்னர் சூரியன் மறைந்து, நோன்பாளி நோன்பு திறக்கும் நேரம் வந்தபோது மஃரிப் தொழுதார். பின்னர் செவ்வானம் மறைந்ததும் இஷா தொழுதார். அடுத்த நாள் மீண்டும் நபிகளாரிடம் வந்து, சற்று வெளிச்சம் பரவியதும் சுப்ஹ் தொழுதார். பின்னர் ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்திற்குச் சமமானபோது ளுஹ்ர் தொழுதார். பின்னர் ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தை விட இரு மடங்கானபோது அஸ்ர் தொழுதார். பின்னர் நேற்றைய அதே நேரத்தில், சூரியன் மறைந்து நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் மஃரிப் தொழுதார். பின்னர் இரவில் சிறிது நேரம் கழிந்ததும் இஷா தொழுதார். அதன்பின் ஜிப்ரீல் அலை அவர்கள் ‘தொழுகைக்கான நேரம் என்பது, நேற்று நீங்கள் தொழுத ஆரம்ப நேரத்திற்கும் இன்று நீங்கள் தொழுத முடிவுறும் நேரத்திற்கும் இடைப்பட்டதாகும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:

 قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: هَذَا جِبْرِيلُ عليه السلام جَاءَكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ، فَصَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ، وَصَلَّى الظُّهْرَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ رَأَى الظِّلَّ مِثْلَهُ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ غَرَبَتِ الشَّمْسُ، وَحَلَّ فِطْرُ الصَّائِمِ، ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ ذَهَبَ شَفَقُ اللَّيْلِ، ثُمَّ جَاءَهُ الْغَدَ، فَصَلَّى بِهِ الصُّبْحَ حِينَ أَسْفَرَ قَلِيلًا، ثُمَّ صَلَّى بِهِ الظُّهْرَ حِينَ كَانَ الظِّلُّ مِثْلَهُ، ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ الظِّلُّ مِثْلَيْهِ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ بِوَقْتٍ وَاحِدٍ حِينَ غَرَبَتِ الشَّمْسُ، وَحَلَّ فِطْرُ الصَّائِمِ، ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ، ثُمَّ قَالَ: الصَّلَاةُ مَا بَيْنَ صَلَاتِكَ أَمْسِ، وَصَلَاتِكَ الْيَوْمَ

 


Next Page » « Previous Page