Category: நஸாயி

Nasaayi-1908

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1908. நல்ல மனிதரின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் என்னை முற்படுத்துங்கள்!, என்னை முற்படுத்துங்கள்!’ என்று அது கூறும். கெட்ட மனிதனின் உடல் கட்டிலில் வைக்கப்பட்டவுடன் எனக்குக் கேடு தான்! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?’ என்று அது கேட்கும்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِذَا وُضِعَ الرَّجُلُ الصَّالِحُ عَلَى سَرِيرِهِ، قَالَ: قَدِّمُونِي قَدِّمُونِي، وَإِذَا وُضِعَ الرَّجُلُ ـ يَعْنِي السُّوءَ ـ عَلَى سَرِيرِهِ، قَالَ: يَا وَيْلِي أَيْنَ تَذْهَبُونَ بِي


Nasaayi-5231

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5231. நபி (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ»


Nasaayi-5230

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5230. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ»


Nasaayi-5229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5229. இப்னு உமர் (ரலி), ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடுமி (‘கஸஉ’) வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்ததை நான் செவியேற்றேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஉ (ரஹ்)


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَنْهَى عَنِ الْقَزَعِ»


Nasaayi-5228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5228. நபி (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْقَزَعِ»


Nasaayi-5051

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5051. நபி (ஸல்) அவர்கள் (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

 

நஸாயீ இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் யஹ்யா பின் ஸயீத், முஹம்மது பின் பிஷ்ர் போன்றோர் அறிவிக்கும் செய்திகள் மிகச் சரியானவையாகும். பார்க்க : ஹதீஸ் எண்-5230 , 5231 ,


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقَزَعِ»


Nasaayi-5050

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5050. நபி (ஸல்) அவர்கள், (‘கஸஉ’) தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டு விடுவதை அல்லாஹ் எனக்கு தடை செய்துள்ளான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«نَهَانِي اللَّهُ عَزَّ وَجَلَّ عَنِ الْقَزَعِ»


Nasaayi-5048

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5048. ஒரு சிறுவரின் தலை ஒரு பகுதி சிரைக்கப்பட்டும் இன்னொரு பகுதி சிரைக்கப்படாமலும் இருந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதற்குத் தடை விதித்தார்கள்.

‘முழுமையாகச் சிரையுங்கள்; அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى صَبِيًّا حَلَقَ بَعْضَ رَأْسِهِ وَتَرَكَ بَعْضًا، فَنَهَى عَنْ ذَلِكَ، وَقَالَ: «احْلِقُوهُ كُلَّهُ أَوِ اتْرُكُوهُ كُلَّهُ»


Nasaayi-5227

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5227. அபூ தாலிபின் மகன் ஜஃபர் (ரலி) மரணித்த பின் மூன்று நாட்கள் நபி (ஸல்) அவர்கள் அவகாசம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர் ஜஃபரின் குடும்பத்தாரிடம் வந்தார்கள். ‘இன்றைய தினத்துக்குப் பின் என் சகோதரருக்காக அழக் கூடாது’ எனக் கூறினார்கள்.

‘என் சகோதரரின் புதல்வர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்’ என்றார்கள். நாங்கள் பறவைக் குஞ்சுகள் போல (தலைமுடி சீர் செய்யப்படாமல்) கொண்டு வரப்பட்டோம். உடனே நாவிதரை அழைத்து வரச் செய்து எங்கள் தலையை மழிக்குமாறு கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)


أَمْهَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آلَ جَعْفَرٍ ثَلَاثَةً أَنْ يَأْتِيَهُمْ ثُمَّ أَتَاهُمْ، فَقَالَ: «لَا تَبْكُوا عَلَى أَخِي بَعْدَ الْيَوْمِ» ثُمَّ قَالَ: «ادْعُوا إِلَيَّ بَنِي أَخِي»، فَجِيءَ بِنَا كَأَنَّا أَفْرُخٌ فَقَالَ: «ادْعُوا إِلَيَّ الْحَلَّاقَ» فَأَمَرَ بِحَلْقِ رُءُوسِنَا


Nasaayi-5323

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5323. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் உங்களுக்கு வெள்ளை ஆடைகளைப் பற்றி வலியுறுத்துகிறேன். உங்களில் உயிருள்ளவர்களும் அதை அணியட்டும். மரணம் அடைந்தவர்களையும் அதில் கஃனிடுங்கள். அது தான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)


«عَلَيْكُمْ بِالْبَيَاضِ مِنَ الثِّيَابِ فَلْيَلْبَسْهَا أَحْيَاؤُكُمْ، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ»


Next Page » « Previous Page