Category: திர்மிதீ

Tirmidhi-82

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்வது (அவசியம்).

82. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் தனது ஆண்குறியை தொட்டுவிட்டால் உளூச் செய்யாமல் தொழக் கூடாது.

அறிவிப்பவர்: புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி உம்மு ஹபீபா (ரலி), அபூஅய்யூப் (ரலி), அபூஹுரைரா (ரலி), அர்வா பின்த் உனைஸ் (ரலி), ஆயிஷா (ரலி), ஜாபிர் (ரலி), ஸைத் பின் காலித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தச் செய்தியை ஹிஷாம் பின் உர்வா அவர்களிடமிருந்து, ஹிஷாம் பின் உர்வா —> உர்வா பின் ஸுபைர் —> புஸ்ரா பின்த் ஸஃப்வான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் அறிவிப்பதைப் போன்றே பலரும் அறிவித்துள்ளனர்.


«مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّ حَتَّى يَتَوَضَّأَ»


Tirmidhi-34

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 26

தலைக்கு ‘மஸ்ஹு’ செய்வது ஒரு முறைதான் என்பது தொடர்பாக வந்துள்ளவை.

34 . ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தபோது, (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி மஸ்ஹு செய்ததை நான் கண்டேன். அப்போது அவர்கள் முன்தலையில் தமது கையை முன்னிருந்து (பின்னாகவு)ம் பின்னிருந்து (முன்னாகவு)ம் மஸ்ஹு செய்தார்கள். மேலும், தமது நெற்றிப் பொட்டுகளிலும் காதுகளிலும் தடவினார்கள். ஒரே ஒரு முறையே இவ்வாறு தடவினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), அம்ர் பின் கஅப் (ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ‘ஹசன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்ததாகும்.

நபி (ஸல்) அவர்கள் தமது தலைக்கு ஒரே முறை மட்டுமே மஸ்ஹு செய்ததாகப் பல்வேறு அறிவிப்பாளர் தொடர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் மற்றும் அவர்களுக்குப் பின்வந்த அறிஞர்களில் பெரும்பாலோர் இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமெனக் கருதுகின்றனர்.

أَنَّهَا رَأَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ، قَالَتْ: «مَسَحَ رَأْسَهُ، وَمَسَحَ مَا أَقْبَلَ مِنْهُ، وَمَا أَدْبَرَ، وَصُدْغَيْهِ، وَأُذُنَيْهِ مَرَّةً وَاحِدَةً»

وَفِي الْبَابِ، عَنْ عَلِيٍّ، وَجَدِّ طَلْحَةَ بْنِ مُصَرِّفِ. حَدِيثُ الرُّبَيِّعِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ مَسَحَ بِرَأْسِهِ مَرَّةً. وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ بَعْدَهُمْ وَبِهِ يَقُولُ: جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، وَسُفْيَانُ الثَّوْرِيُّ، وَابْنُ الْمُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، رَأَوْا مَسْحَ الرَّأْسِ مَرَّةً وَاحِدَةً.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَال: سَمِعْتُ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ يَقُولُ: سَأَلْتُ جَعْفَرَ بْنَ مُحَمَّدٍ عَنْ مَسْحِ الرَّأْسِ أَيُجْزِئُ مَرَّةً؟ فَقَالَ: إِي وَاللَّهِ