Category: திர்மிதீ

Tirmidhi-3377

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இதற்கு முன்னுள்ள பாடத் தலைப்புடன் தொடர்புடைய செய்திகள்.

3377. “உங்களுடைய செயல்களில் மிகச் சிறந்ததும், உங்களுடைய இறைவனிடத்தில் மிகவும் தூய்மையானதும், உங்களுடைய பதவிகளில் மிகவும் உயர்ந்ததும், தங்கத்தையும் வெள்ளியையும் செலவு செய்வதை விட உங்களுக்கு மேலானதும், உங்களுடைய எதிரிகளை நீங்கள் சந்தித்து நீங்கள் அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுவதையும், அவர்கள் உங்களுடைய கழுத்துக்களை வெட்டுவதையும் விட உங்களுக்குச் சிறந்த நற்செயல் எதுவென்று நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் “ஆம் (அறிவியுங்கள்)” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள்,”அது உயர்ந்தோனான அல்லாஹ்வை (திக்ர் செய்து) நினைவு கூர்வது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பிக்க வைப்பதில், (திக்ர்) அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட மேலான வேறு எந்த செயலும் இல்லை.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இச்செய்தியை அப்துல்லாஹ் பின் ஸயீத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் வேறுசிலரும் இதே அறிவிப்பாளர் தொடரில் (முத்தஸிலாக) அறிவித்துள்ளனர். வேறு சிலர் (ஸியாத் பின் அபூஸியாத் —> அபுத்தர்தா-ரலி என்ற

«أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالوَرِقِ، وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ»؟ قَالُوا: بَلَى. قَالَ: «ذِكْرُ اللَّهِ تَعَالَى»

قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: «مَا شَيْءٌ أَنْجَى مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ»


Tirmidhi-3429

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் கடைத்தெருவுக்குள் நுழையும் போது, “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வ ஹுவ ஹய்யுல் லா யமூது, பி யதிஹில் கைரு, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்”

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; அவனுக்கே புகழ் அனைத்தும்; அவன் உயிர்ப்பிக்கிறான்; அவன் மரணிக்கச் செய்கிறான்; அவன் என்றும் உயிருள்ளவன்; அவன் மரணிக்க மாட்டான்; அவன் கையிலேயே நன்மை உள்ளது; மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்)

என்று கூறினால், அல்லாஹ் அவருக்காக பத்து லட்சம் நன்மைகளை எழுதுகிறான்; அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான்; அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)


” مَنْ قَالَ فِي السُّوقِ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ، وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ، وَبَنَى لَهُ بَيْتًا فِي الجَنَّةِ “.


Tirmidhi-3428

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

கடைத்தெருவுக்குள் நுழையும்போது சொல்ல வேண்டியவை.

3428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் கடைத்தெருவுக்குள் நுழையும் போது, “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வ ஹுவ ஹய்யுல் லா யமூது, பி யதிஹில் கைரு, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்”

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; அவனுக்கே புகழ் அனைத்தும்; அவன் உயிர்ப்பிக்கிறான்; அவன் மரணிக்கச் செய்கிறான்; அவன் என்றும் உயிருள்ளவன்; அவன் மரணிக்க மாட்டான்; அவன் கையிலேயே நன்மை உள்ளது; மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்)

என்று கூறினால், அல்லாஹ் அவருக்காக பத்து லட்சம் நன்மைகளை எழுதுகிறான்; அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான்; அவருக்காக பத்து லட்சம் (சொர்க்கத்தின்) படித்தரங்களை உயர்த்துகிறான்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

ஸுபைர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரின் பொறுப்பாளராக இருந்த அம்ர் பின் தீனார் என்பவரும் இதை ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.


” مَنْ دَخَلَ السُّوقَ، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ، وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ، وَرَفَعَ لَهُ أَلْفَ أَلْفِ دَرَجَةٍ “


Tirmidhi-3001

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3001.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
அல் குர்ஆன் (3 : 110)

நபி (ஸல்) அவர்கள் (மொத்த சமுதாயத்தில் இறுதியாக) நீங்கள் எழுபதாவது சமுதாயமாக இருக்கின்றீர்கள். அந்த எழுபதில் நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கின்றீர்கள் என்று கூறினார்கள்.


فِي قَوْلِهِ تَعَالَى: {كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ} [آل عمران: 110] قَالَ: «أَنْتُمْ تُتِمُّونَ سَبْعِينَ أُمَّةً أَنْتُمْ خَيْرُهَا وَأَكْرَمُهَا عَلَى اللَّهِ»


Tirmidhi-1079

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1079. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறை நம்பிக்கையாளரின் உயிர் அவர் வாங்கிய கடனால் (சொர்க்கம் செல்ல முடியாதவாறு) தடுக்கப்படுகிறது. அந்தக் கடன் நிறைவேற்றப்படும் வரை (அவருக்கு நிம்மதி கிடைக்காது).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸ். மேலும் இதுவே இதற்கு முன்னுள்ள ஹதீஸ் எண்-1078 இல் இடம்பெற்ற செய்தியை விட மிகச் சரியானது.


«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»


Tirmidhi-1078

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1078.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளரின் ஆத்மா அவர் வாங்கிய கடன் காரணத்தினால் அவர் சார்பில் அது நிறைவேற்றப்படுகின்ற வரை (அந்தரத்தில்) தொங்கவிடப்படுகிறது.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«نَفْسُ المُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ»


Tirmidhi-1072

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1072.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)


إِذَا مَاتَ المَيِّتُ عُرِضَ عَلَيْهِ مَقْعَدُهُ، إِنْ كَانَ مِنْ أَهْلِ الجَنَّةِ فَمِنْ أَهْلِ الجَنَّةِ، وَإِنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ فَمِنْ أَهْلِ النَّارِ، ثُمَّ يُقَالُ: هَذَا مَقْعَدُكَ حَتَّى يَبْعَثَكَ اللَّهُ يَوْمَ القِيَامَةِ


Tirmidhi-1067

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1067.

அல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல.

ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ أَحَبَّ لِقَاءَ اللَّهِ أَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَمَنْ كَرِهَ لِقَاءَ اللَّهِ كَرِهَ اللَّهُ لِقَاءَهُ»، قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كُلُّنَا نَكْرَهُ المَوْتَ، قَالَ: «لَيْسَ ذَلِكَ، وَلَكِنَّ المُؤْمِنَ إِذَا بُشِّرَ بِرَحْمَةِ اللَّهِ وَرِضْوَانِهِ وَجَنَّتِهِ، أَحَبَّ لِقَاءَ اللَّهِ، وَأَحَبَّ اللَّهُ لِقَاءَهُ، وَإِنَّ الكَافِرَ إِذَا بُشِّرَ بِعَذَابِ اللَّهِ وَسَخَطِهِ، كَرِهَ لِقَاءَ اللَّهِ، وَكَرِهَ اللَّهُ لِقَاءَهُ»


Tirmidhi-2188

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

கலகம் செய்வோரின் பண்புகள்.

2188. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கடைசிக்காலத்தில் சில மக்கள் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராகவும், அறிவுக்குறைவுடையவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு அப்பால் செல்லாது. அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவரான (நபியின்) வார்த்தைகளைப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் அம்பு, வேட்டையாடிய விலங்கைத் துளைத்து வெளியேறுவதைப் போல மார்க்கத்திலிருந்து (வேகமாக) வெளியேறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அலீ (ரலி), அபூஸயீத் (ரலி), அபூதர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

குர்ஆனை ஓதி, அது அவர்களின் தொண்டைக் குழியைத் தாண்டாமல், (அம்பு இலக்கிலிருந்து வெளியேறுவது போல்) மார்க்கத்திலிருந்து வெளியேறும் இந்த மக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வேறு ஹதீஸ்களும் உள்ளன.

நிச்சயமாக இந்தச் செய்தி காரிஜிய்யா, ஹரூரிய்யா மற்றும் இவர்களைப் போன்ற பிற பிரிவுகளைச் சேர்ந்தவர்களைப் பற்றியே தெரிவிக்கிறது.


«يَخْرُجُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ أَحْدَاثُ الأَسْنَانِ سُفَهَاءُ الأَحْلَامِ، يَقْرَءُونَ القُرْآنَ، لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَقُولُونَ مِنْ قَوْلِ خَيْرِ البَرِيَّةِ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ»


Tirmidhi-1077

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1077.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَبَّرَ عَلَى جَنَازَةٍ، فَرَفَعَ يَدَيْهِ فِي أَوَّلِ تَكْبِيرَةٍ، وَوَضَعَ اليُمْنَى عَلَى اليُسْرَى».


Next Page » « Previous Page