தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-5418

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘பனூ அன்மார்’ போருக்காகப் புறப்பட்டோம். நான் ஒரு மரத்தின் அடியில் தங்கியிருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நிழலுக்கு வாருங்கள்” என்று அழைத்தேன். அவர்களும் (நிழலில்) அமர்ந்தார்கள்.

உடனே நான் எங்களுடைய உணவுப் பையைத் தேடினேன். அதில் ஒரு சிறிய வெள்ளரிக்காய் கிடைத்தது. அதை உடைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள், “உங்களுக்கு இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! மதீனாவிலிருந்தே இதை நாங்கள் எடுத்து வந்தோம்” என்று கூறினேன்.

எங்களுடைய வாகனங்களை (ஒட்டகங்களை) மேய்த்து வருவதற்காக ஒரு தோழரை நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம். அவர் தமது பயணத்தைத் தொடங்குவதற்காகத் திரும்பிய போது, மிகப்பழைய (கிழிந்த நிலையில் இருந்த) இரண்டு போர்வைகளை அணிந்திருந்தார்.

அவரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவரிடம் இந்த இரண்டு ஆடைகளைத் தவிர வேறு ஆடைகள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம் அல்லாஹ்வின் தூதரே! பெட்டிக்குள் (புதிய) இரண்டு ஆடைகள் உள்ளன; அவற்றை நானே அவருக்குக் கொடுத்தேன்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரை அழைத்து, அந்த இரண்டு ஆடைகளையும் அணியச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அவரை அழைத்து, அவற்றை அணியச் செய்தேன். அவர் அந்தப் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு செல்லத் தொடங்கிய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரது கழுத்தை வெட்டட்டும்! (அவர் கொல்லப்படட்டும்). இது (புதிய ஆடை அணிவது) அவருக்குச் சிறந்ததல்லவா?” என்று கேட்டார்கள்.

இதைக் கேட்டுவிட்ட அந்தத் தோழர், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையிலா (நான் கொல்லப்பட வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் பாதையில் தான்” என்று கூறினார்கள். இறுதியில் அந்த மனிதர் அல்லாஹ்வின் பாதையில் (போர்க்களத்தில்) கொல்லப்பட்டார்.


இப்னு ஹிப்பான் இமாம் கூறுகிறார்:

ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்களின் எண்ணம் இப்படித்தான் இருந்தது.

மேலும், ஸைத் இப்னு அஸ்லம் (ரலி) அவர்கள் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியுற்றிருக்கிறார்கள். ஏனெனில், ஜாபிர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 79 ஆம் ஆண்டில் வஃபாத் ஆனார்கள்.

உமர் (ரலி) அவர்களின் அடிமையான அஸ்லம் அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், சுமார் ஹிஜ்ரி 50 ஆம் வருடத்தில் வஃபாத் ஆனார்கள். அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் இப்னு ஹகம் அவர்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். இதுவே, ஸைத் இப்னு அஸ்லம் (ரலி) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியுற்றார்கள் என்பதற்கான ஒரு சான்றாகும்.

ஸைத் இப்னு அஸ்லம் (ரஹ்) அவர்கள் பெரியவராகவும், நீண்ட காலம் வாழ்ந்தவராகவும் இருந்தார்கள். அவர்கள் ஹிஜ்ரி 136 ஆம் ஆண்டில் வஃபாத் ஆனார்கள்.

(எனவே ஸைத் பின் அஸ்லம் ஹிஜ்ரி 50 க்குள் பிறந்து ஹிஜ்ரி 136 இல் இறந்தார் என்றால் சுமார் 86 வருடம் வாழ்ந்துள்ளார்.)

(இப்னு ஹிப்பான்: 5418)

ذِكْرُ الِاسْتِحْبَابِ لِلْمَرْءِ أَنْ تُرَى عَلَيْهِ أَثَرُ نِعْمَةِ اللَّهِ وَإِنْ كَانَتْ تِلْكَ النِّعْمَةُ فِي رَأْيِ الْعَيْنِ قَلِيلَةً؛ إِذِ الْقَلِيلُ مِنْ نِعَمِ اللَّهِ كَثِيرٌ

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ إِدْرِيسَ الْأَنْصَارِيُّ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ*، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ:

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ أَنْمَارٍ، قَالَ: فَبَيْنَمَا أَنَا نَازِلٌ تَحْتَ شَجَرَةٍ إِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ هَلُمَّ إِلَى الظِّلِّ، قَالَ: فَنَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: جَابِرٌ: فَقُمْتُ إِلَى غِرَارَةٍ لَنَا فَالْتَمَسْتُ فِيهَا، فَوَجَدْتُ فِيهَا جِرْوَ قِثَّاءٍ فَكَسَرْتُهُ، ثُمَّ قَرَّبْتُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ أَيْنَ لَكُمْ هَذَا؟ » فَقُلْتُ: خَرَجْنَا بِهِ يَا رَسُولَ اللَّهِ مِنَ الْمَدِينَةِ، قَالَ: جَابِرٌ: وَعِنْدَنَا صَاحِبٌ لَنَا نُجَهِّزُهُ لِيَذْهَبَ يَرْعَى ظَهَرْنَا، قَالَ: فَجَهَّزْتُهُ ثُمَّ أَدْبَرَ يَذْهَبُ فِي الظَّهْرِ وَعَلَيْهِ بُرْدَانِ لَهُ قَدْ خَلُقَا، قَالَ: فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَمَا لَهُ ثَوْبَانِ غَيْرُ هَذَيْنِ؟ » قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لَهُ ثَوْبَانِ فِي الْعَيْبَةِ كَسَوْتُهُ إِيَّاهُمَا، قَالَ: «فَادْعُهُ فَمُرْهُ فَلْيَلْبَسْهُمَا» قَالَ: فَدَعَوْتُهُ فَلَبِسَهُمَا، ثُمَّ وَلَّى يَذْهَبُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لَهُ ضَرَبَ اللَّهُ عُنُقَهُ، أَلَيْسَ هَذَا خَيْرًا؟ » فَسَمِعَهُ الرَّجُلُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي سَبِيلِ اللَّهِ» فَقُتِلَ الرَّجُلُ فِي سَبِيلِ اللَّهِ.

قَالَ أَبُو حَاتِمٍ رَحِمَهُ اللَّهُ: «هَكَذَا كَانَتْ نِيَّةُ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْبِدَايَةِ، وَزَيْدُ بْنُ أَسْلَمَ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ؛ لِأَنَّ جَابِرًا مَاتَ سَنَةَ تِسْعٍ وَسَبْعِينَ، وَمَاتَ أَسْلَمُ مَوْلَى عُمَرَ فِي إِمَارَةِ مُعَاوِيَةَ سَنَةَ بِضْعٍ وَخَمْسِينَ، وَصَلَّى عَلَيْهِ مَرْوَانُ بْنُ الْحَكَمِ، وَكَانَ عَلَى الْمَدِينَةِ إِذْ ذَاكَ، فَهَذَا يَدُلُّكَ عَلَى أَنَّهُ سَمِعَ جَابِرًا، وَهُوَ كَبِيرٌ، وَمَاتَ زَيْدُ بْنُ أَسْلَمَ سَنَةَ سِتٍّ وَثَلَاثِينَ وَمِائَةَ، وَقَدْ عُمِّرَ


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-5418.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-.




 

 


மேலும் பார்க்க: மாலிக்-2644.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.