தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-2644

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 15

அழகிற்காக ஆடை அணிவது குறித்து வந்துள்ளவை.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘பனூ அன்மார்’ போருக்காகப் புறப்பட்டோம். நான் ஒரு மரத்தின் அடியில் தங்கியிருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! இந்த நிழலுக்கு வாருங்கள்” என்று அழைத்தேன். அவர்களும் (நிழலில்) அமர்ந்தார்கள்.

உடனே நான் எங்களுடைய உணவுப் பையைத் தேடினேன். அதில் ஒரு சிறிய வெள்ளரிக்காய் கிடைத்தது. அதை உடைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள், “உங்களுக்கு இது எங்கிருந்து கிடைத்தது?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! மதீனாவிலிருந்தே இதை நாங்கள் எடுத்து வந்தோம்” என்று கூறினேன்.

எங்களுடைய வாகனங்களை (ஒட்டகங்களை) மேய்த்து வருவதற்காக ஒரு தோழரை நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம். அவர் தமது பயணத்தைத் தொடங்குவதற்காகத் திரும்பிய போது, மிகப்பழைய (கிழிந்த நிலையில் இருந்த) இரண்டு போர்வைகளை அணிந்திருந்தார்.

அவரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவரிடம் இந்த இரண்டு ஆடைகளைத் தவிர வேறு ஆடைகள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம் அல்லாஹ்வின் தூதரே! பெட்டிக்குள் (புதிய) இரண்டு ஆடைகள் உள்ளன; அவற்றை நானே அவருக்குக் கொடுத்தேன்” என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரை அழைத்து, அந்த இரண்டு ஆடைகளையும் அணியச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் அவரை அழைத்து, அவற்றை அணியச் செய்தேன். அவர் அந்தப் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு செல்லத் தொடங்கிய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரது கழுத்தை வெட்டட்டும்! (அவர் கொல்லப்படட்டும்). இது (புதிய ஆடை அணிவது) அவருக்குச் சிறந்ததல்லவா?” என்று கேட்டார்கள்.

இதைக் கேட்டுவிட்ட அந்தத் தோழர், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையிலா (நான் கொல்லப்பட வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் பாதையில் தான்” என்று கூறினார்கள். இறுதியில் அந்த மனிதர் அல்லாஹ்வின் பாதையில் (போர்க்களத்தில்) கொல்லப்பட்டார்.

(முஅத்தா மாலிக்: 2644)

15 – مَا جَاءَ فِي لُبْسِ الثِّيَابِ لِلْجَمَالِ بِهَا.

وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن زَيْدِ بْنِ أَسْلَمَ، عَن جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الأَنْصَارِيِّ، أَنَّهُ قَالَ:

خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ فِي غَزْوَةِ بَنِي أَنْمَارٍ، قَالَ جَابِرٌ: فَبَيْنَا أَنَا نَازِلٌ تَحْتَ شَجَرَةٍ، إِذَا رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، هَلُمَّ إِلَى الظِّلِّ، قَالَ: فَنَزَلَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقُمْتُ إِلَى غِرَارَةٍ لَنَا، فَالْتَمَسْتُ فِيهَا، فَوَجَدْتُ جِرْوَ قِثَّاءٍ، فَكَسَرْتُهُ، ثُمَّ قَرَّبْتُهُ إِلَى رَسُولِ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، فَقَالَ: مِنْ أَيْنَ لَكُمْ هَذَا؟ قَالَ: فَقُلْتُ: خَرَجْنَا بِهِ يَا رَسُولَ اللهِ مِنَ الْمَدِينَةِ، قَالَ جَابِرٌ: وَعِنْدَنَا صَاحِبٌ لَنَا نُجَهِّزُهُ، يَذْهَبُ يَرْعَى ظَهْرَنَا، قَالَ: فَجَهَّزْتُهُ ثُمَّ أَدْبَرَ يَذْهَبُ فِي الظَّهْرِ، وَعَلَيْهِ بُرْدَانِ لَهُ قَدْ خَلَقَا، قَالَ: فَنَظَرَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ إِلَيْهِ، فَقَالَ: أَمَا لَهُ ثَوْبَانِ غَيْرُ هَذَيْنِ؟ فَقُلْتُ: بَلَى يَا رَسُولَ اللهِ، لَهُ ثَوْبَانِ فِي الْعَيْبَةِ، كَسَوْتُهُ إِيَّاهُمَا، قَالَ: فَادْعُهُ، فَمُرْهُ فَلْيَلْبَسْهُمَا، قَالَ: فَدَعَوْتُهُ، فَلَبِسَهُمَا، ثُمَّ وَلَّى يَذْهَبُ، قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: مَا لَهُ ضَرَبَ اللهُ عُنُقَهُ، أَلَيْسَ هَذَا خَيْرًا؟ قَالَ: فَسَمِعَهُ الرَّجُلُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، فِي سَبِيلِ اللهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ: فِي سَبِيلِ اللهِ، قَالَ: فَقُتِلَ الرَّجُلُ فِي سَبِيلِ اللهِ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-1416.
Muwatta-Malik-Shamila-2644.
Muwatta-Malik-Alamiah-1416.
Muwatta-Malik-JawamiulKalim-1622.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . யஹ்யா பின் யஹ்யா-அல்லைஸீ (3. பலமானவர்).

2 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்-மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் அனஸ்
(2. மிகப் பலமானவர்)
.

3 . ஸைத் பின் அஸ்லம்-அபூஉஸாமா (3. பலமானவர்).

4 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) (1. நபித்தோழர்).


ஆய்வின் சுருக்கம்:

1 . இந்தச் செய்தியை ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம்
அவர்கள் ஸைத் பின் அஸ்லம் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் மாணவர்களும் கருத்துவேறுபாடு இல்லாமல் இவ்வாறே அறிவித்துள்ளனர்.

2 . ஸைத் பின் அஸ்லம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹிஷாம் பின் ஸஃத் அவர்கள் ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். ஹிஷாம் சில நேரம் தவறாக அறிவிக்கக்கூடியவர் என்ற விமர்சனம் உள்ளது. எனவே இது தவறாக இருக்கலாம்.

அல்லது ஸைத் பின் அஸ்லம் அவர்கள் இதை இரு வகையாக அறிவித்திருக்கலாம். ஸைத் பின் அஸ்லம் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால் இது சரியான செய்தியாகும்.

3 . முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்கள் இதை அதாஉ பின் யஸார் வழியாக அறிவித்துள்ளார். இப்னு இஸ்ஹாக் அவர்கள் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் இருந்தாலும் யுத்தம் குறித்த செய்திகளை நன்கு அறிந்தவர் என்பதால் இவரிடமிருந்து இதுபோன்ற செய்திகளை ஏற்கலாம் என்பது சில அறிஞர்களின் முடிவாகும்.


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸைத் பின் அஸ்லம் —> ஜாபிர் (ரலி) 

பார்க்க: மாலிக்-2644, கஷ்ஃபுல் அஸ்தார்-2963, இப்னு ஹிப்பான்-5418, ஹாகிம்-7370, …


  • கஷ்ஃபுல் அஸ்தார்-2963.

كشف الأستار عن زوائد البزار (3/ 368):
2963 – حَدَّثَنَاهُ مَعْمَرٌ، ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، ثنا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم…،قَالَ:بِنَحْوِهِ، وَلَمْ يَذْكُرْعَطَاءً.


  • ஸைத் பின் அஸ்லம் —> அதாஉ பின் யஸார் —> ஜாபிர் (ரலி) 

பார்க்க: கஷ்ஃபுல் அஸ்தார்-2962, ஹாகிம்-7369,


  • கஷ்ஃபுல் அஸ்தார்-2962.

كشف الأستار عن زوائد البزار (3/ 368):
2962 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي ثُمَامَةَ الأَنْصَارِيُّ، ثنا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ هِشَامِ بْنِ سَعْدِ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةٍ، فَبَيْنَا أَنَا نَازِلٌ تَحْتَ الشَّجَرَةِ، إِذْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ! هَلُمَّ إِلَى الظِّلِّ، فَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم، فَوَجَدْتُ فِي السُّفْرَةِ جِرْوَ قِثَّاءٍ، فَقَالَ: مِنْ أَيْنَ لَكُمْ هَذَا، فَذَكَرَ كَلِمَةً، ثُمَّ أَدْبَرَ رَجُلٌ، وَعَلَيْهِ ثَوْبَانِ، قَدْ خَلَقَا، فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ: «أَمَا لَهُ ثَوْبَانِ غَيْرُ هَذَيْنِ؟» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم: لَهُ ثَوْبَانِ فِي الْعَيْبَةِ، كَسَوْتُهُ إِيَّاهُمَا، قَالَ: «فَادْعُهُ، فَمُرْهُ فَلْيَلْبَسْهُمَا» فَدَعَوْتُهُ فَلَبِسَهُمَا، ثُمَّ وَلَّى يَذْهَبُ، فَقَالَ: «مَا لَهُ؟ ضَرَبَ اللَّهُ عُنُقَهُ، أَلَيْسَ هَذَا خَيْرٌ؟» فَسَمِعَهُ الرَّجُلُ فَرَجَعَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ: فِي سَبِيلِ اللَّهِ، فَقَالَ: «فِي سَبِيلِ اللَّهِ» فَقُتِلَ الرَّجُلُ فِي سَبِيلِ اللَّهِ.


  • முஹம்மத் பின் இப்ராஹீம் —> அதாஉ பின் யஸார் —> ஜாபிர் (ரலி) 

பார்க்க: கஷ்ஃபுல் அஸ்தார்-2964.

كشف الأستار عن زوائد البزار (3/ 369):
2964 – وَحَدَّثَنَا أَبُو سَلَمَةَ يَحْيَى بْنُ خَلَفٍ، ثنا عَبْدُ الأَعْلَى، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم …. ، قَالَ: بِنَحْوِهِ.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.