அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மண்ணறை வேதனைகளில் அதிகமானவை சிறுநீரால் ஏற்படுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(இப்னுமாஜா: 348)حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا عَفَّانُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-342.
Ibn-Majah-Shamila-348.
Ibn-Majah-Alamiah-342.
Ibn-Majah-JawamiulKalim-342.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . அபூபக்ர் பின் அபூஷைபா-இப்னு அபூஷைபா
3 . அஃப்பான் பின் முஸ்லிம்
4 . அபூஅவானா-வள்ளாஹ் பின் அப்துல்லாஹ்
5 . அஃமஷ்-ஸுலைமான் பின் மிஹ்ரான்
6 . அபூஸாலிஹ்-தக்வான்-ஸம்மான்
7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்கள்.
என்றாலும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இதை பாதில் (தவறானது) என்ற கருத்தில் கூறியுள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-1081)
அதாவது இது மர்ஃபூவாக-நபியின் சொல்லாக வந்திருப்பது தவறு என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கான காரணத்தை கூறவில்லை.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (8/ 208)
1518- وَسُئِلَ عَنْ حَدِيثٍ يُرْوَى عَنْ أَبِي صَالِحٍ، عن أبي هريرة، عن النبي صلى الله عَلَيْهِ وَسَلَّمَ: أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ فِي الْبَوْلِ.
فَقَالَ: يَرْوِيهِ الْأَعْمَشُ، وَاخْتِلُفَ عَنْهُ، فَأَسْنَدَهُ أَبُو عَوَانَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هريرة، عن النبي صلى الله عليه وَسَلَّمَ.
وَخَالَفَهُ ابْنُ فُضَيْلٍ، فَوَقَفَهُ، وَيُشْبِهُ أَنْ يَكُونَ الْمَوْقُوفُ أَصَحُّ.
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்தச் செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஅவானா அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுவிட்டு இது நபித்தோழரின் சொல் என்று கூறுவதே பொருத்தமானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-1518)
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்ற இலல் அறிஞர்கள் சில நேரம் காரணத்தைக் கூறாமல் ஒரு செய்தியை விமர்சித்திருந்தாலும் இலல் பற்றி தெரிந்த அறிஞர்கள் ஆய்வு செய்து பார்க்கும் போது இன்ன காரணத்தினால் குறை கூறியிருக்கலாம் என்று புரிந்துக் கொள்வார்கள். இதனடிப்படையில் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் காரணத்தைக் கூறியுள்ளார்.
வேறு சில காரணங்கள்:
- இந்தச் செய்தியை அபூஅவானா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அஃப்பான் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 134
இறப்பு ஹிஜ்ரி 220
வயது: 86
அவர்கள் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார். - இந்தச் செய்தியை அபூஅவானா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவரின் உறவினரான யஹ்யா பின் ஹம்மாத் அவர்கள், “அஃமஷ் அவர்கள் (தனது ஆசிரியரின் பெயரை சந்தேகமாக) அபூஸாலிஹ் என்று கருதுகிறேன்” என்று கூறியதாக அறிவித்துள்ளார்.
பார்க்க: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-5192.
இந்த சந்தேக வார்த்தை அஹ்மத்-8331 இல் இல்லை.
(இது போன்று சந்தேகமாக அறிவிப்பதும் கூட அறிவிப்பாளர்தொடரில் குறையை ஏற்படுத்தும் என்பது ஹதீஸ்கலை விதிகளில் ஒன்றாகும்)
என்றாலும் மேலோட்டமாக பார்க்கும் போது عَنْ سُلَيْمَانَ قَالَ: أَحْسَبُهُ عَنْ أَبِي صَالِحٍ – “அபூஸாலிஹ் அவர்களிடமிருந்து” என்ற வார்த்தையை அஃமஷ் கூறினார்” என்று புரிந்துக் கொண்டாலும் இதற்கு மாற்றமாக கூட நடந்திருக்கலாம்.
இதைக் கூறியது அஃமஷ் அவர்களாக கூட இருக்கலாம். அல்லது யஹ்யா பின் ஹம்மாத் அவர்களாக கூட இருக்கலாம். அல்லது யஹ்யா பின் ஹம்மாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பக்கார் பின் குதைபா அவர்கள் கூட இருக்கலாம்.
மேலும், இந்தச் செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஅவானா அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்துள்ளார். இந்தச் செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார் என்று குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் மிகப்பலமானவரான அபூஅவானா அவர்களின் அறிவிப்பை விட அவரைவிட சற்றுக் குறைந்த தரத்தில் உள்ள முஹம்மத் பின் ஃபுளைல் அவர்களின் அறிவிப்புக்கு ஏன் முன்னுரிமை தரவேண்டும்?
இதற்கான காரணம்:
அஃமஷ் அவர்கள் கூஃபாவாசி ஆவார். (என்றாலும் வேறு சில நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.) முஹம்மத் பின் ஃபுளைல் அவர்களும் கூஃபாவாசி ஆவார். ஆனால் அபூஅவானா அவர்கள் வாஸிதீ ஆவார்…
ஒருவரின் செய்தியை அவருக்கு நெருக்கமானவர்களே நன்கு அறிவார்கள் என்பதின் படி அஃமஷ் அவர்கள் கூஃபாவாசி. அவரிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஃபுளைல் அவர்களும் கூஃபாவாசி என்ற அடிப்படையில் ஆகும்.
எனவே அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகிய அறிஞர்கள் அபூஅவானா அவர்களின் செய்தியை விட முஹம்மத் பின் ஃபுளைல் அவர்களின் அறிவிப்புக்கு முன்னுரிமை தந்துள்ளனர் என்று தெரிகிறது.
மேலும் அஃமஷ் அவர்களிடமிருந்து வேறு சிலர் வேறு அறிவிப்பாளர்தொடரில் வேறு வகையான கருத்தின் அமைப்பில் அறிவித்துள்ளனர்.
(பார்க்க: புகாரி-218, ஸில்ஸிலதுல் ஃபவாஇத்-1/448)
இதனடிப்படையில் அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
ஆகியோர் இதை விமர்சித்துள்ளனர் என்று தெரிகிறது.
ஆனால் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்ற பல அறிஞர்கள் இதை சரியானது என்று கூறியுள்ளனர்.
العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص42):
36 – سَأَلْتُ مُحَمَّدًا عَنْ حَدِيثِ مُجَاهِدٍ ، عَنْ طَاوُسٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ مَرَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى قَبْرَيْنِ، فَقَالَ: الْأَعْمَشُ يَقُولُ: عَنْ مُجَاهِدٍ ، عَنْ طَاوُسٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَمَنْصُورٌ يَقُولُ: عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ وَلَا يَذْكُرُ فِيهِ: عَنْ طَاوُسٍ ، قُلْتُ: أَيُّهُمَا أَصَحُّ؟ قَالَ: حَدِيثُ الْأَعْمَشِ.
37 – قُلْتُ لَهُ فَحَدِيثُ أَبِي عَوَانَةَ عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ فِي هَذَا، كَيْفَ هُوَ؟ قَالَ: هَذَا حَدِيثٌ صَحِيحٌ ، وَهَذَا غَيْرُ ذَاكَ الْحَدِيثِ
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் இரு வகை அறிவிப்பாளர்தொடர்களில் எது மிகச் சரியானது என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாமிடம் நான் கேட்டேன். அதற்கவர், அஃமஷ் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது என்று கூறினார்.
இவ்வாறே அஃமஷ் அவர்களிடமிருந்து அபூஅவானா அறிவிக்கும் செய்தி பற்றி கேட்டேன். இதுவும் சரியானதே. இது வேறு செய்தி என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறினார்.
(நூல்கள்: அல்இலலுல் கபீர்-36, 37…)
வேறு சிலர் அஃமஷ் அவர்கள் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது என்பதுடன் இந்தச் செய்தியில் தனது ஆசிரியரிடமிருந்து அவர் நேரடியாக குறிப்பிடவில்லை என்பதால் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் இந்தச் செய்தியை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்.
ஆய்வுக்காக: தத்லீஸ் அஃமஷ்.
என்றாலும் பிற்கால அறிஞர்களில் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்ற சிலர் அஃமஷ் அவர்கள் அபூஸாலிஹ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் தத்லீஸ் இல்லை என்று கூறியுள்ளனர்…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அஃப்பான் —> அபூஅவானா —> அஃமஷ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 1306, அஹ்மத்-9033, 9059, இப்னு மாஜா-348, முஸ்னத் பஸ்ஸார்-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-5193, அஷ்ஷரீஆ-ஆஜுரீ-853, தாரகுத்னீ- 465, ஹாகிம்- 653, குப்ரா பைஹகீ- 4141, இஸ்பாது அதாபில் கப்ர்-பைஹகீ-120, …
- யஹ்யா பின் ஹம்மாத் —> அபூஅவானா —> அஃமஷ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: அஹ்மத்-8331, அல்அவ்ஸத்-இப்னுல் முன்திர்-689, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-5192, அஷ்ஷரீஆ-ஆஜுரீ-852, முஃஜம்-இப்னுல் முக்ரீ-1176,
- முஹம்மத் பின் ஃபுளைல் —> அஃமஷ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்இலலுல் வாரிதா-1518,
- இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> நபி (ஸல்)
பார்க்க: தாரகுத்னீ- 464,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-218,
விபரம்?
அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ் இதைப் பற்றிய முழு விவரம் சேர்க்கிறோம்.