தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-2540

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையைத் தக்பீரைக் கொண்டு ஆரம்பிப்பவர்களாகவும், ஸலாம் கூறுவதைக் கொண்டு அதை முடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.

(musannaf-abdur-razzaq-2540: 2540)

عَبْدُ الرَّزَّاقِ، عَنْ عُثْمَانَ بْنِ مَطَرٍ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ بُدَيْلٍ الْعُقَيْلِيِّ، عَنْ أَبِي الْجَوْزَاءِ قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْتَتِحُ صَلَاتَهُ بِالتَّكْبِيرِ، وَيَخْتِمُهَا بِالتَّسْلِيمِ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-2540.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-2452.




 

 


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28233-உஸ்மான் பின் மத்தர் என்பவரை அறிஞர்களில் சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும்; சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும்; சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

  • இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளக்கூடாது என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களும்,
  • இவர் மிகப் பலவீனமானவர் என இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்களும்,
  • இவர் முன்கருல் ஹதீஸ், வினோதமான செய்திகளை அறிவிப்பவர் என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும்,
  • இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இப்னு தாஹிர் அவர்களும் கூறியுள்ளனர்.
  • தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற வேறு சிலர் இவர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/79, தக்ரீபுத் தஹ்தீப்-1/669)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இதன் மூலம் அபுல்ஜவ்ஸாஃ அவர்கள் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்டதாக குறிப்பிடும் தகவலை ஏற்கமுடியாது.


மேலும் பார்க்க: முஸ்லிம்-857.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.