இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தலைவிரிகோலமாகவும், புழுதி படிந்தவராகவும், இரத்தம் நிறைந்த ஒரு குப்பியுடனும் (தரையில் சிந்திய இரத்தத்தை) சேகரித்துக் கொண்டிருந்தவாறு நபி (ஸல்) அவர்களை ஒரு நண்பகலில் நான் கனவில் பார்த்தேன்.
அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இது ஹுஸைன் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்களின் இரத்தம். இன்று முதல் நான் இதைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்மார் பின் அபூஅம்மார் (ரஹ்)
அம்மார் (ரஹ்) அவர்கள் கூறினார்:
நாங்கள் அந்த நாளை நினைவில் வைத்திருந்தோம். அந்த நாளில்தான் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை பின்னர் அறிந்து கொண்டோம்.
(முஸ்னது அஹ்மத்: 2165)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:
رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْمَنَامِ بِنِصْفِ النَّهَارِ أَشْعَثَ أَغْبَرَ مَعَهُ قَارُورَةٌ فِيهَا دَمٌ يَلْتَقِطُهُ أَوْ يَتَتَبَّعُ فِيهَا شَيْئًا قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا؟ قَالَ: دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ لَمْ أَزَلْ أَتَتَبَّعُهُ مُنْذُ الْيَوْمَ “
قَالَ عَمَّارٌ: «فَحَفِظْنَا ذَلِكَ الْيَوْمَ فَوَجَدْنَاهُ قُتِلَ ذَلِكَ الْيَوْمَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2165.
Musnad-Ahmad-Alamiah-2057.
Musnad-Ahmad-JawamiulKalim-2085.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
3 . ஹம்மாத் பின் ஸலமா
4 . அம்மார் பின் அபூஅம்மார்
5 . இப்னு அப்பாஸ் (ரலி)
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-2165, 2553, ஃபளாஇலுஸ் ஸஹாபா-1380, 1381, 1389, 1396, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-710, அல்மனாமாத்-இப்னு அபுத்துன்யா-130, அல்முஃஜமுல் கபீர்-2822, 12837, ஹாகிம்-8201, …
- முஸ்னத் அப்து பின் ஹுமைத்-710.
المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: 235)
710 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرَى النَّائِمُ نِصْفَ النَّهَارِ أَشْعَثَ أَغْبَرَ، مَعَهُ قَارُورَةٌ فِيهَا دَمٌ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، مَا هَذَا؟ قَالَ: «هَذَا دَمُ الْحُسَيْنِ وَأصْحَابِهِ لَمْ أَزَلْ أَلْتَقِطْهُمْ مُنْذُ الْيَوْمِ» قَالَ: وَأُحْصِيَ ذَلِكَ الْيَوْمَ فَوَجَدُوهُ قُتِلَ ذَلِكَ الْيَوْمَ
…
- அல்மனாமாத்-இப்னு அபுத்துன்யா-130.
المنامات لابن أبي الدنيا (ص: 76)
130 – حَدَّثَنَا أَبُو بَكْرٍ، نا أَبُو نَصْرٍ التَّمَّارُ، نا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: ” رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ أَشْعَثَ أَغْبَرَ بِيَدِهِ قَارُورَتَانِ فِيهِمَا دَمٌ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا؟ فَقَالَ: دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ لَمْ أَزَلْ أَلْتَقِطُهُ مُنْذُ الْيَوْمَ , قَالَ: فَنَظَرُوا فَإِذَا الْحُسَيْنُ قَدْ قُتِلَ فِي ذَلِكَ الْيَوْمِ “
…
இது நபி அவர்கள் உயிரோடு இருக்கும் போது நடந்த சம்பவமா அல்லது அதற்க்கு பிறகா?
அஸ்ஸலாமு அலைக்கும்.
உயிரோடு இருக்கும்போது என்றால் அதை அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறி விளக்கம் கேட்டிருக்கலாம். அந்த தகவல் எதுவும் இல்லை என்பதால் இது நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு நடந்திருக்கலாம். நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்தவர்கள் கனவில் காண்பதில் பிரச்சனை இல்லையே.