தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-2165

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅

2165. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தலைவிரிகோலமாகவும், புழுதி படிந்தவராகவும், இரத்தம் நிறைந்த ஒரு குப்பியுடனும் (தரையில் சிந்திய இரத்தத்தை) சேகரித்துக் கொண்டிருந்தவாறு நபி (ஸல்) அவர்களை ஒரு நண்பகலில் நான் கனவில் பார்த்தேன்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! இது என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இது ஹுஸைன் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்களின் இரத்தம். இன்று முதல் நான் இதைத் திரட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரஹ்)


அம்மார் (ரஹ்) அவர்கள் கூறினார்:

நாங்கள் அந்த நாளை நினைவில் வைத்திருந்தோம். அந்த நாளில்தான் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை பின்னர் அறிந்து கொண்டோம்.

அம்மார் பின் அபூஅம்மார் (ரஹ்)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الْمَنَامِ بِنِصْفِ النَّهَارِ أَشْعَثَ أَغْبَرَ مَعَهُ قَارُورَةٌ فِيهَا دَمٌ يَلْتَقِطُهُ أَوْ يَتَتَبَّعُ فِيهَا شَيْئًا قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا؟ قَالَ: دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ لَمْ أَزَلْ أَتَتَبَّعُهُ مُنْذُ الْيَوْمَ “

قَالَ عَمَّارٌ: «فَحَفِظْنَا ذَلِكَ الْيَوْمَ فَوَجَدْنَاهُ قُتِلَ ذَلِكَ الْيَوْمَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2165.
Musnad-Ahmad-Alamiah-2057.
Musnad-Ahmad-JawamiulKalim-2085.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

3 . ஹம்மாத் பின் ஸலமா

4 . அம்மார் பின் அபூஅம்மார்

5 . இப்னு அப்பாஸ் (ரலி)


 

 


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: அஹ்மத்-2165, 2553, ஃபளாஇலுஸ் ஸஹாபா-1380, 1381, 1389, 1396, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-710, அல்மனாமாத்-இப்னு அபுத்துன்யா-130, அல்முஃஜமுல் கபீர்-2822, 12837, ஹாகிம்-8201, …


  • முஸ்னத் அப்து பின் ஹுமைத்-710.

المنتخب من مسند عبد بن حميد ت صبحي السامرائي (ص: 235)
710 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرَى النَّائِمُ نِصْفَ النَّهَارِ أَشْعَثَ أَغْبَرَ، مَعَهُ قَارُورَةٌ فِيهَا دَمٌ، فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، مَا هَذَا؟ قَالَ: «هَذَا دَمُ الْحُسَيْنِ وَأصْحَابِهِ لَمْ أَزَلْ أَلْتَقِطْهُمْ مُنْذُ الْيَوْمِ» قَالَ: وَأُحْصِيَ ذَلِكَ الْيَوْمَ فَوَجَدُوهُ قُتِلَ ذَلِكَ الْيَوْمَ

…


  • அல்மனாமாத்-இப்னு அபுத்துன்யா-130.

المنامات لابن أبي الدنيا (ص: 76)
130 – حَدَّثَنَا أَبُو بَكْرٍ، نا أَبُو نَصْرٍ التَّمَّارُ، نا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: ” رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّوْمِ أَشْعَثَ أَغْبَرَ بِيَدِهِ قَارُورَتَانِ فِيهِمَا دَمٌ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مَا هَذَا؟ فَقَالَ: دَمُ الْحُسَيْنِ وَأَصْحَابِهِ لَمْ أَزَلْ أَلْتَقِطُهُ مُنْذُ الْيَوْمَ , قَالَ: فَنَظَرُوا فَإِذَا الْحُسَيْنُ قَدْ قُتِلَ فِي ذَلِكَ الْيَوْمِ “

…


 

அஹ்மத் இமாம்

இமாம் அஹ்மத்

முழுப்பெயர் : அஹ்மத் இப்னு முஹம்மத் இப்னு ஹன்பல் இப்னு ஹிலால் இப்னு அஸது அஷ்ஷைபானீ (முஸ்னத் அஹ்மத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர் : அபூஅப்தில்லாஹ்

இயற்பெயர் : அஹ்மத்

தந்தைப்பெயர் : முஹம்மது

பிறந்த ஊர் : பக்தாதில் பிறந்தார்

பிறந்த நாள் :  ஹிஜ்ரி 164ம் ஆண்டு

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்:  கூஃபா, பஸரா, மக்கா, மதீனா, யமன், ஷாம், ஜஸீரா போன்ற உலகில் உள்ள பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

முஸ்னத் அஹ்மத்

அஸ்ஸுஹுத்

ஃபலாயிலுஸ் ஸஹாபா (ஸஹாபாக்களின் சிறப்பு)

அல்அஷ்ரிபத்

அல்இலல்

அன்னாஸிஹ் வல்மன்ஸுஹ்

அல்மனாசிக்

கிதாபுல் ஃபிதன்

கிதாபுல் ஃபலாயிலி அஹ்லில் பைத்

முஸ்னத் அஹ்லில் பைத்

அல்அஸ்மாவு வல்குனா ( அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது)

கிதாபுத்தாரிக்

அல்முகத்தமு வல்முதஅக்கர் (முந்தியவர்கள் பிந்தியவர்கள்)

இப்ராஹீம் இப்னு காலித் அஸ்ஸன்ஆனி, இஸ்மாயீல் இப்னு உலய்யா, அபூபக்கர் இப்னு அய்யாஷ், இஸ்ஹாக் இப்னு யூசுஃப் அல்அஸ்ரக், ரபிஃ இப்னு உலய்யா, ரவ்ஹ் இப்னு உப்பாதா, சுஃப்யான் இப்னு உஐனா, தல்க் இப்னு நகயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

முஹம்மது இப்னு இஸ்மாயீல் அல்புகாரி, முஸ்லிம் இப்னு  ஹஜ்ஜாஜ், அபூதாவூத், அபூபக்கர் அஹ்மத் இப்னு முஹ்ம்மத் இப்னு ஹானீல்பக்தாதீ, அபூஹாதம் முஹம்மத் இப்னு இத்ரீஸ், யஹ்யா இப்னு மயீன், அலீ இப்னு மதீனீ போன்ற அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 241ஆம் வருடம் ரபீவுல்அவ்வல் மாதத்தில் நோய்வாய்ப்பட்டார். பக்தாதில் இதே வருடம் வெள்ளிக்கிழமை அன்று மரணித்தார். அப்போது அவருக்கு 77 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

عبد الرحمن بن مهدي

இறப்பு: ஹிஜ்ரி 198, பஸரா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பின் ஹஸ்ஸான் பின் அப்துர்ரஹ்மான்

தந்தை பெயர்: மஹ்தீ பின் ஹஸ்ஸான்

வம்சம்: அல்அன்பரீ, அல்அஸ்தீ

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: பஸரா, அஸ்பஹான்

பிறப்பு: ஹிஜ்ரி 135

இறப்பு: ஹிஜ்ரி 198, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 135ல் பிறந்தார்கள். இவர் பஸராவைச் சேர்ந்த மிகப் பலமான ஹதீஸ் கலை அறிஞர், ஹாஃபிழ் மற்றும் இமாம் ஆவார். ஹதீஸ் மற்றும் ரிஜால் கலையில் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார்.

இவர் ஹிஜ்ரி 198ல் பஸராவில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மாலிக் இமாம், ஷுஃபா பின் அல்ஹஜ்ஜாஜ், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஸுஃப்யான் பின் உயைனா, ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத், இஸ்ராயீல் பின் யூனுஸ், அபான் பின் யஸீத் அல்அத்தார், மஹ்தீ பின் மைமூன், இக்ரிமா பின் அம்மார், காலித் பின் தீனார், ஹிஷாம் பின் ஸஃத்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): மூஸா பின் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, அப்துல்லாஹ் பின் முபாரக், அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹ், யஹ்யா பின் மயீன், யஹ்யா பின் யஹ்யா, அபூ ஸவ்ர் அல்கல்பீ, ஸுஹைர் பின் ஹர்ப், அல்காஸிம் பின் ஸலாம், அபூபக்ர் பின் அபூஷைபா, முஹம்மத் பின் பஷ்ஷார் பிந்தார், முஹம்மத் பின் அல்முஸன்னா

வேறு பெயர்கள்: இப்னு மஹ்தீ


ஆதாரம்: muslimscholars.info (20033) · Should verify

ஹம்மாத் பின் ஸலமா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அம்மார் பின் அபூஅம்மார்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

இப்னு அப்பாஸ் (ரலி)

عبد الله بن عباس

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

தந்தை பெயர்: அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப்

வம்சம்: குரைஷீ, ஹாஷிமீ

புனைப்பெயர்: அபூ அப்பாஸ், அல்ஹிப்ர், அல்பஹ்ர்

ஊர் பெயர்: மக்கா

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, தாயிஃப்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 3, மக்கா

இறப்பு: ஹிஜ்ரி 68, தாயிஃப்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப் ரலி அவர்களின் மகனாவார். ஹிஜ்ரிக்கு முன் 3 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 68 ஆம் ஆண்டு தாயிஃபில் மரணமடைந்தார். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு மார்க்க அறிவையும் குர்ஆன் விளக்கத்தையும் அருளுமாறு இருமுறை துஆ செய்தார்கள்.

இவர் தனது பரந்த அறிவின் காரணமாக 'அல்ஹிப்ர்' (அறிஞர்), 'அல்பஹ்ர்' (கடல்) என்று அழைக்கப்பட்டார். இவர் நபித்தோழர்களில் மிகப் பெரும் அறிஞர்களில் ஒருவராவார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), அல்அப்பாஸ் பின் அப்துல்முத்தலிப், உம்முல் ஃபழ்ல் லுபாபா பின்த் அல்ஹாரிஸ், மைமூனா பின்த் அல்ஹாரிஸ், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபீதாலிப், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், முஆத் பின் ஜபல், அபூதர் அல்ஃகிஃபாரீ, உபை பின் கஅப்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஜாஹித் பின் ஜப்ர், காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர், அதா பின் அபீரபாஹ், தாவூஸ் பின் கைஸான், வஹ்ப் பின் முனப்பிஹ், ஸயீத் பின் ஜுபைர், அலீ பின் அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அப்துல்லாஹ் பின் உமர், அபூத்துஃபைல் ஆமிர் பின் வாத்திலா, இக்ரிமா, அம்ர் பின் தீனார், நாஃபிஉ

வேறு பெயர்கள்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அபூ அப்பாஸ்


ஆதாரம்: muslimscholars.info (17) · Should verify

2 comments on Musnad-Ahmad-2165

  1. இது நபி அவர்கள் உயிரோடு இருக்கும் போது நடந்த சம்பவமா அல்லது அதற்க்கு பிறகா?

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      உயிரோடு இருக்கும்போது என்றால் அதை அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறி விளக்கம் கேட்டிருக்கலாம். அந்த தகவல் எதுவும் இல்லை என்பதால் இது நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு நடந்திருக்கலாம். நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்தவர்கள் கனவில் காண்பதில் பிரச்சனை இல்லையே.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.