தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-27090

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

உம்மு ஹுமைத் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்.

உம்மு ஹுமைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் (ஜமாஅத்தில்) சேர்ந்து தொழ விரும்புகிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ என்னுடன் சேர்ந்து தொழுவதை விரும்புகிறாய் என்பது எனக்குத் தெரியும். (ஆனாலும்) நீ உன் தங்குமிடத்தில் தொழுவது, உன் அறையில் தொழுவதை விடச் சிறந்ததாகும். நீ உன் அறைக்குள் தொழுவது, உன் வீட்டில் தொழுவதை விடச் சிறந்ததாகும். நீ உன் வீட்டிற்குள் தொழுவது, உன் சமூகத்தாரின் பள்ளிவாசலில் தொழுவதை விடச் சிறந்ததாகும். நீ உன் சமூகத்தாரின் பள்ளிவாசலில் தொழுவது, எனது பள்ளிவாசலில் தொழுவதை விடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஸுவைத்? கூறுகிறார்:

இந்தக் கட்டளையைக் கேட்ட அந்தப் பெண்மணி, தனது வீட்டிற்குள் மிகவும் கடைசியான, இருட்டான ஓரிடத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கு தொழுது வந்தார். அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை (மரணிக்கும் வரை) அவர் அங்கேயே தொழுது வந்தார்.

(முஸ்னது அஹ்மத்: 27090)

حَدِيثُ أُمِّ حُمَيْدٍ

حَدَّثَنَا هَارُونُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي دَاوُدُ بْنُ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سُوَيْدٍ الْأَنْصَارِيِّ، عَنْ عَمَّتِهِ أُمِّ حُمَيْدٍ امْرَأَةِ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ،

أَنَّهَا جَاءَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُحِبُّ الصَّلَاةَ مَعَكَ، قَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّكِ تُحِبِّينَ الصَّلَاةَ مَعِي، وَصَلَاتُكِ فِي بَيْتِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلَاتِكِ فِي حُجْرَتِكِ، وَصَلَاتُكِ فِي حُجْرَتِكِ خَيْرٌ مِنْ صَلَاتِكِ فِي دَارِكِ، وَصَلَاتُكِ فِي دَارِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلَاتِكِ فِي مَسْجِدِ قَوْمِكِ، وَصَلَاتُكِ فِي مَسْجِدِ قَوْمِكِ خَيْرٌ لَكِ مِنْ صَلَاتِكِ فِي مَسْجِدِي» ،

قَالَ: فَأَمَرَتْ فَبُنِيَ لَهَا مَسْجِدٌ فِي أَقْصَى شَيْءٍ مِنْ بَيْتِهَا وَأَظْلَمِهِ، فَكَانَتْ تُصَلِّي فِيهِ حَتَّى لَقِيَتِ اللَّهَ عَزَّ وَجَلَّ


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-25842.
Musnad-Ahmad-Shamila-27090.
Musnad-Ahmad-Alamiah-25842.
Musnad-Ahmad-JawamiulKalim-26459.




 

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . ஹாரூன் பின் மஃரூப்

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்

4 . தாவூத் பின் கைஸ்

5 . அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ

6 . உம்மு ஹுமைத் (அப்துல்லாஹ்வின் தந்தையின் சகோதரி மற்றும் அபூஹுமைத் (ரலி) அவர்களின் மனைவி)


ஆய்வின் சுருக்கம்:

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) அவர்களின் சொல்லாக வரும் செய்தியே பலமான அறிவிப்பாளர்தொடராக இருப்பதால் இதற்கே சிலர் முன்னுரிமை தருகின்றனர்.

வேறு சிலர் அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியை ஹஸன் தரம் என்று முடிவு செய்கின்றனர்…


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-50001-அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ அவர்களை சிலர் நபித்தோழர் என்றும்; சிலர் இவர் நபித்தோழர் அல்ல. தாபிஈ என்றும் கூறியுள்ளனர்.

பார்க்க: ராவீ-50001-அப்துல்லாஹ் பின் ஸுவைத்-அல்அன்ஸாரீ.


التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (5/ 109):
323- عَبد اللهِ بْن سُوَيد، الأَنصاريّ.
عَنْ عَمَّتِه ‌أُم ‌حُمَيد، ‌امرأة ‌أَبي ‌حُمَيد ‌السّاعِدِيّ.
رَوَى عَنه دَاوُد بْن قَيس.


الجرح والتعديل – ابن أبي حاتم (5/ 66):
309 – عبد الله بن سويد الأنصاري روى عن عمته ‌أم ‌حميد ‌امرأة ‌أبي ‌حميد ‌الساعدي روى عنه داود بن قيس سمعت أبي يقول ذلك.


الثقات لابن حبان (3/ 461):
أم ‌حميد ‌امْرَأَة ‌أبي ‌حميد ‌السَّاعِدِيّ


الثقات لابن حبان (7/ 42):
عَبْد اللَّهِ بْن سُوَيْد الْأنْصَارِيّ يروي عَنْ عمته ‌أم ‌حميد ‌امْرَأَة ‌أبي ‌حميد ‌السَّاعِدِيّ روى عَنْهُ دَاوُد بْن قيس …


இந்த செய்தியை இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் ஹஸன் தரம் எனக் கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ 2/349)


 


1 . இந்தக் கருத்தில் உம்மு ஹுமைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7620, அஹ்மத்-27090, இப்னு குஸைமா-1689, இப்னு ஹிப்பான்-2217, அல்முஃஜமுல் கபீர்-356, குப்ரா பைஹகீ-5371,


2 . இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-570.


3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-5365.


4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு குஸைமா-1692.


5 . உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-9101.


6 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-7615.


 


இதனுடன் தொடர்புள்ள செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-755, திர்மிதீ-1173,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.