தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1173

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெண் என்பவள் (மறைக்கப்பட வேண்டிய) மானம். அவள் வெளியே செல்லும் போது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

(திர்மிதி: 1173)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ مُوَرِّقٍ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«المَرْأَةُ عَوْرَةٌ، فَإِذَا خَرَجَتْ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1093.
Tirmidhi-Shamila-1173.
Tirmidhi-Alamiah-1093.
Tirmidhi-JawamiulKalim-1089.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


 

 


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (5/ 314)
905- وسئل عن حديث أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ، … الْحَدِيثَ.
فَقَالَ: يَرْوِيهِ قَتَادَةُ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ هَمَّامٌ، وَسَعِيدُ بْنُ بَشِيرٍ، وَسُوَيْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ قَتَادَةَ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَرَوَاهُ سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، لَمْ يَذْكُرْ بَيْنَهُمَا مُوَرِّقًا، ورفعه أيضا.
وَرَوَاهُ حُمَيْدُ بْنُ هِلَالٍ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ مَوْقُوفًا.
وَرَوَاهُ أَبُو إِسْحَاقَ السَّبِيعِيُّ، عَنْ أَبِي الْأَحْوَصِ وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَفَعَهُ عَمْرُو بْنُ عَاصِمٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ.
وَوَقَفَهُ غَيْرُهُ مِنْ أَصْحَابِ شُعْبَةَ.
وَكَذَلِكَ رَوَاهُ إِسْرَائِيلُ، وَغَيْرُهُ، عَنْ أَبِي إِسْحَاقَ مَوْقُوفًا، والموقوف هو الصحيح مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ، وَحُمَيْدِ بْنِ هِلالٍ، وَرَفَعَهُ صَحِيحٌ مِنْ حَدِيثِ قَتَادَةَ.


ஸஹீஹா-2688…


 

 


1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1173, இப்னு குஸைமா-1685, 1686, 1687, இப்னு ஹிப்பான்-5598, 5599,


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-2890.


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-27090, அபூதாவூத்-570,

14 comments on Tirmidhi-1173

  1. அஸ்ஸலாமு அலைக்கும்.

    திர்மிதீ – 1173 – வது ஹதீஸான இந்த அறிவிப்பின் தரம் ‘ஆய்வில் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

    மேலும் இது சம்பந்தமாக வரக்கூடிய இப்னு குஸைமா – 1685, 1686, 1687, இப்னு ஹிப்பான் – 5598, 5599 ஆகிய அறிவிப்புகளிலும் எந்த விபரமும் இணைக்கப்படவில்லை.

    ஆனால், அல்முஃஜமுல் அவ்ஸத் – 2890 – ஹதீஸ் மட்டும் ‘பலமான செய்தி’ என்ற தகவலைக் கொடுத்துள்ளீர்கள். அப்படியானால் இந்த அறிவிப்பை தவிர மற்ற அறிவிப்புகள் அனைத்தும் பலவீனமானவையா என்பதை தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்

    1. வ அலைக்கும் ஸலாம். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் கருத்துவேறுபாடு இருப்பதால் அதை முழுமையாக முடிக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் விரைவில் தரம் பதிவு செய்கிறோம்.

      1. ஜஸாக்கல்லாஹ் ஹைரன். உங்கள் பணிகளை அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்கிக் கொடுப்பானாக.

        இதே கருத்தில் வரும் அல்முஃஜமுல் அவ்ஸத் – 2890 – வது ஹதீஸ் பலமான செய்தி என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லைதானே?

        1. கதாதா தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம், முஃதமிர் பின் ஸுலைமானிடமிருந்து அறிவிப்பவர்கள் வெவ்வேறு அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர் என்ற விமர்சனம் உள்ளது.

          1. அப்படியானால், அல்முஃஜமுல் அவ்ஸத் – 2890 – வது ஹதீஸ் பலமான செய்தி இல்லையா?

            கதாதா பல ரிவாயத்களில் இடம்பெறும் அறிவிப்பாளர். அந்த அத்தனை அறிவிப்புகளும் சந்தேகத்திற்கு உரியவையா? அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதையா?

  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

    ஹராமான உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது என்பதற்கான தொடர்புடைய ஹதீஸ்களை ஷேர் செய்யவும்

    1. ஒருவருடைய செயல் மற்றும் வருமானம் ஹராமான நிலையில் உள்ள போது அவர் கொடுக்கக்கூடிய அன்பளிப்பை பெற்றுக் கொள்ள முடியுமா

      இது தொடர்பான ஹதீஸ்களை ஷேர் செய்யவும்

    2. வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. ஹராமானதை உண்ணுவது குறித்து குர்ஆன் வசனங்களிலும் எச்சரிக்கை உள்ளது.

      பார்க்க: முஸ்லிம்-1844.

  3. ஹராமான வழியில் சம்பாரிப்போரின் அன்பளிப்பு குறித்து:

    1 . முஸ்லிமல்லாத மக்களின் பொருளாதாரம் பெரும்பாலும் இஸ்லாம் அனுமதித்த வழியில் திரட்டப்பட்டதாக இருக்காது. ஒருவர் தவறாகப் பொருள் திரட்டினால் அதை மற்றவர்கள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலையாக இருந்தால் ஜிஸ்யா எனும் வரியே சட்டமாக்கப்பட்டிருக்காது.

    2 . அது போல் போர்க்களத்தில் முஸ்லிமல்லாதவர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்டால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் கனீமத் எனப்படும். இவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அல்லாஹ் அனுமதிக்கிறான்.

    8:69➚ فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلاً طَيِّبًا ۖ وَّاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
    போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

    (அல்குர்ஆன்: 8:69)➚

    இஸ்லாத்தின் எதிரிகளாக இருந்து போருக்கு வந்தவர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்து இருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் அவர்களிடமிருந்து கனீமத் என்ற வழியில் நமக்கு வந்து சேர்வதால் அது நமக்கு ஹலாலாக ஆகி விடுகின்றது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

    3 . மேலும் முஸ்லிமல்லாதவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியுள்ளனர். முஸ்லிமல்லாதவர்கள் பொருளீட்டுவதற்கு இஸ்லாம் கூறும் நெறிமுறைகளைப் பேண மாட்டார்கள் என்ற போதும் அந்த அன்பளிப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

    அய்லா என்ற ஊரின் மன்னர் நபிகள் நயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக்கழுதையை அன்பளிப்புச் செய்து ஒரு சால்வையும் அணிவித்தார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்றும் அவர் எழுதிக் கொடுத்தார்.

    அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி), நூல்: புகாரி: 1482.

    4 . பரீரா அவர்களுக்கு ஸதகா, நபி ஸல் அவர்களுக்கு ஹத்யா-அன்பளிப்பு என்ற ஹதீஸ்: புகாரி-1495.

    இது போன்ற சட்டம் குறித்த தகவல்களை நமது பயான் குறிப்புகள் தளத்தில் பார்க்கவும்.

    1. ஜஸாகல்லாஹ் ஹைரா உங்களுடைய இந்த பணிகளை மென்மேலும் சிறந்த முறையில் செய்வதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்…

      முஸ்லிமான ஒருவர் வட்டி தொழில் செய்கிறார் அவரிடம் பலமுறை கூறி இருந்தும் அவர் அந்த தொழிலை விட தயார் இல்லை

      மேலும் அவர் ஊரில் நடக்கும் நற்காரியங்களுக்கு மற்றும் பொதுவான காரியங்களுக்கு அவருடைய ஹராமான முறையில் சம்பாதிக்கப்பட்ட பணத்தை நம்மிடம் தருகிறார் நாம் இதை பெற்றுக் கொள்ள முடியுமா

      மேலும் அவர் நம்மளை விருந்துக்கு அழைக்கின்றார் நாம் அந்த விருந்துக்கு போக முடியுமா

      என்பதே என்னுடைய சந்தேகம்…

      அல்லாஹ் ஹராமான பொருளை சாப்பிடுவதினால் நம்மளுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பது நாம் அறிந்ததே

      ஆகவே இதற்கு உதாரணமான ஹதீஸ்களை பதிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்

  4. நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடமிருந்து அன்பளிப்பையும், விருந்தையும் ஏற்றுள்ளார்கள். யூதர்களின் வருமானம் வட்டிப் போன்ற தடுக்கப்பட்ட பொருளாதாரமாகத் தான் இருந்தது. இதுபோன்ற ஹதீஸ்களின் அடிப்படையில் வட்டித் தொழில் செய்பவருக்கு தான் அது ஹராம். அவர் மற்றவர்களுக்கு தர்மம், அன்பளிப்பு போன்ற வகையில் தந்தால் அதைப் பெறுபவர்களுக்கு அது ஹராம் அல்ல.

    அன்பளிப்பு பொருள் அஸலில் ஹராமாக இருந்தால் அதாவது திருடப்பட்ட பொருளாக இருந்தால் அதைத்தான் நாம் அன்பளிப்பாக கொடுத்தாலும் வாங்ககூடாது. பல ஹதீஸ்களின் அடிப்படையில் இவ்வாறு மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளனர்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

      அல்லா நம்மளை கீழ்கண்டவாறு எச்சரிக்கின்றான்

      தூயவர்களே தூய்மையான பொருட்களில் இருந்து உண்ணுங்கள் நற்செயலை செய்யுங்கள் தின்னமாக நான் நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் 23:51

      நம்பிக்கையாளர்களே நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருட்களில் இருந்து உண்ணுங்கள் நீங்கள் உண்மையில் அல்லாஹ்வை தான் வணங்குகிறீர்கள் என்றால் அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் 2: 172

      இப்பொழுது ஒரு மனிதர் ஹராமான முறையில் அதாவது வட்டி கொடுத்து வருமானம் செய்யக் கூடியவர் அவருடைய வருமானம் ஹராமானது அசுத்தமானது என்பதை நாம் தெளிவாக அறிய முடிகிறது

      மேலும் அந்த ஹராமான முறையில் சம்பாதிக்கப்பட்ட வருமானத்திலிருந்து அல்லது பொருளிலிருந்து அந்த மனிதர் சாப்பிடும் பொழுது அது அவருக்கு ஹராம் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்கிறோம்

      அதே பொருளை மற்ற நபர்கள் உண்ணும் போது அது ஹலாலாக மாறுகிறது என்று கூறுகிறோம்

      ஒரு அசுத்தம் எப்படி மற்றவர்களுக்கு சுத்தமாக மாறுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

      மேலும் பரீரா அவர்களுக்கு சதக்கா பொருள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஹதியா அன்பளிப்பு என்ற புகாரி 1495 ஹதீசை ஒரு ஹராமான முறையில் சம்பாதிக்கப்பட்ட பொருளுக்கு உதாரணமாக காண்பிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை

      ஏனென்றால் தர்மத்துடைய பொருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மட்டும் தடை செய்யப்பட்டது என்பதை நாம் அறிவோம் மேலும்

      அந்த தர்ம பொருள் ஹராமான முறையில் சம்பாதிக்கப்பட்டவை அல்ல

      என்பதையும் நாம் அறிவோம்

      ஆகவே பரீரா அவர்களின் தொடர்பாக வந்துள்ள ஹதீஸை, ஒரு ஹராமான முறையில் சம்பாதிக்கப்பட்ட ஒரு பொருளுடன் இணையாக கூறப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

      மேலும்

      யார் தீமையைக் காண்பாரோ அவர் தமது கையினால் அதனை(த் தடுத்து) மாற்றிவிட முடிந்தால் தமது கையினால் அதனை (தடுத்து) மாற்றிவிடவும். அதற்கு முடியாவிட்டால் தமது நாவினால் (தடுத்து) மாற்றிவிடவும். அதற்கும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் அதனை வெறுக்கவும். இது தான் ஈமானின் கடைசி நிலையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

      மேலே உள்ள ஹதீஸின் அடிப்படையில்

      நம்மளுடைய சகோதரர் ஒருவன் வட்டி வாங்கும் தொழிலை செய்து கொண்டிருக்கிறார்

      அவரிடம் இது தவறு என்று எடுத்துரைத்த பின்னரும் அவர் அதை நிறுத்தவில்லை

      பலமுறை கூறியும் அவர் நிறுத்தவில்லை

      இப்பொழுது நாவினால் தடுத்தோம் அதை அவர் கேட்கவில்லை

      கைகளால் நம்மளால் தடுக்க முடியவில்லை

      ஆதலால் இது பாவம் என்று மனதளவில் நினைத்துக் கொண்டு ஒதுங்கி கொள்வது சிறந்தது என்பதின் அடிப்படையிலும்

      அவருடைய அழைப்பை புறக்கணிப்பதன் மூலம் அவர் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும் இருக்கலாம்

      ஆனால் அந்த நபர் நம்மளை விருந்தோம்பலுக்கு அழைக்கும் போது நாம் போகுமேயானால்

      அவர் செய்யக்கூடிய குற்றத்திலிருந்து எவ்வாறு மீண்டு வருவார் ?

      மேலும் மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸை நாம் நடைமுறைப்படுத்த வில்லை என்றது போல் ஆகிறது

      மேலும் ஹராம் ஹலால் என்பது தெளிவாக நமக்கு கூறப்பட்டுள்ளது இதற்கு இடையில் சந்தேகத்திற்குரியது எதுவாக இருந்தாலும் அந்த விஷயங்களில் இருந்து நம்மை நாம் தவிர்த்துக் கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது எதையும் நாம் அறிவோம்

      இந்தக் குழப்பமான நிலையில் இருந்து வெளிவதற்கு இது தொடர்பான ஏதேனும் ஹதீஸ் இருக்குமேயானால் அந்த ஹதீஸின் ரெஃபரன்ஸ்களை இங்கு பகிரவும்

      1. இதுபோன்று, ஹராமான வழியில் சம்பாதிப்பவர்களை திருத்துவதற்காக புறக்கணிப்பதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது. மார்க்கம் அனுமதி தந்துள்ளது. ஆனால் அது பிறருக்கு ஹராமா?இல்லையா? என்பதைப் பற்றி எவ்வாறு முடிவு செய்யவேண்டும்? அதற்கு தான், நபி (ஸல்) அவர்கள் ஹராமான வழியில் சம்பாதிக்கும் யூதர்களின் அன்பளிப்பை ஏற்றுள்ளார்கள் என்பதால் நபிவழிப்படி முடிவு செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.