நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உமருடைய நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை ஏற்படுத்தியுள்ளான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 5145)حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا نَافِعُ بْنُ أَبِي نُعَيْمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ اللَّهَ تَعَالَى جَعَلَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-4898.
Musnad-Ahmad-Shamila-5145.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . அப்துல்மலிக் பின் அம்ர்
3 . நாஃபிஉ பின் அபூநுஐம்
4 . நாஃபிஃ
5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
இந்தச் செய்தியை இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களின் மாணவரான நாஃபிஃ (ரஹ்) அவர்களிடமிருந்து காரிஜா பின் அப்துல்லாஹ் பின் ஸுலைமான், ளஹ்ஹாக் பின் உஸ்மான், நாஃபிஉ பின் அபூநுஐம் ஆகிய 3 பேரும், வேறுசிலரும் அறிவித்துள்ளனர்.
இவர்கள் 3 பேரும் சுமாரானவர்கள் என்ற தரத்தில் உள்ளவர்கள். இவர்களில் மற்றவர்களை விட நாஃபிஉ பின் அபூநுஐம் அவர்களை மூத்த ஹதீஸ்கலை அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். (மேலும் நாஃபிஉ பின் அபூநுஐம் அவர்கள் கிராஅத் துறையில் முக்கியமானவர் ஆவார்.)
(நூல்: இலலுல் ஹதீஸ்-2654)
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- நாஃபிஉ பின் அபூநுஐம் —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: அஹ்மத்-5145, முஸ்னத் அப்து பின் ஹுமைத்-758, …
- காரிஜா பின் அப்துல்லாஹ் —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: ஃபளாஇலுஸ் ஸஹாபா-அஹ்_மத்-313, 488, அஹ்மத்-5697, திர்மிதீ-3682, இப்னு ஹிப்பான்-6895 , …
- ளஹ்ஹாக் பின் உஸ்மான் —> நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: ஃபளாஇலுஸ் ஸஹாபா-அஹ்_மத்-395, 525, …
மேலும் பார்க்க: அஹ்மத்-21457.
https://tamil.quranandhadis.com/tirmidhi-3682/
மேல் கானும் ஹதீஸை பலகீனமானது என்று சொல்லி உள்ளீர்கள்.
கீழ் காணும் ஹதீஸை صحيح என்பதாக சொல்லி உள்ளீர்கள்.
عبدالله بن عمر
أبو هريرة
صحيح
ஹதீஸ் வந்துள்ளது.
கீழ் காணும் ராவி மூலம் ضعيف ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
أيوب بن موسى
عائشة أم المؤمنين
ابن عدي الكندي
الكمال بن الهمام
ابن عدي الكندي
عمر بن عبدالعزيز
مكحول
بلال بن رباح
معاوية بن أبي سفيان
عمر بن الخطاب
أبو ذر الغفاري
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆரம்பத்தில் ஹதீஸின் தரத்தை குறிப்பிட பலமான செய்தி, பலவீனமான செய்தி என்று மட்டும் வைத்திருந்தோம். பிறகு தான் ஒரு கருத்தில் பலமான செய்தி இருந்தால் பலவீனமான அறிவிப்பாளர்தொடரை குறிப்பிட “இஸ்னாதுஹூ ளயீஃப்” என்ற விவரத்தை சேர்த்தோம்.
நீங்கள் குறிப்பிட்ட செய்தி இந்த வகையில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் இவைகள் கவனத்திற்கு வரும் போது சரி செய்கிறோம். ஜஸாகல்லாஹு கைரா.
பலமான செய்தியா, பலவீனமான செய்தியா என்ற கருத்து வேறுபாடு உள்ள செய்திகளுக்கு தான் பெரும்பாலும் அனைத்து வகையான அறிவிப்பாளர்தொடர்களை தேடி பதிவு செய்கிறோம்.
ஒரு கருத்தில் சரியான செய்திகள் இருந்தால் அதை குறிப்பிட்டுவிட்டு அதே கருத்தில் பலவீனமான அறிவிப்பாளர்தொடர் இருந்தால் அவைகளை பிறகு பதிவு செய்யலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதற்கு காரணம் அனைத்தையும் பதிவிடுவதற்கு ஒரு செய்திக்கே அதிக காலம் போய்விடும்.
முழு தகவல் பார்க்க: அஹ்மத்-21457.