தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1663

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அல்லாஹ்விடத்தில் ஆறு பரிசுகள் கிடைக்கும்.

1 . அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு, சொர்க்கத்தில் தனது இருப்பிடத்தைக் காண்பார்.

2 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.

3 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு பெறுவார்.

4 . அவரின் தலைக்கு மதிப்புமிக்க கிரீடம் அணிவிக்கப்படும். அதில் உள்ள ஒரு மாணிக்கக்கல் இந்த உலகத்தையும், இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விடவும் சிறந்ததாக இருக்கும்.

5 . அவருக்கு 72 சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.

6 . அவரின் உறவினர்களில் எழுபது பேருக்கு அவர் செய்யும் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி (ஹஸன்), ஸஹீஹ், கரீப் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

(குறிப்பு: ஹஸன் என்ற வாசகம் தாருத் தஃஸீல், ரிஸாலஹ் என்ற இரண்டு பிரதிகளில் மட்டும் இல்லை. மற்ற பிரதிகளில் உள்ளது.)

(திர்மிதி: 1663)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الوَلِيدِ، عَنْ بَحِيرِ بْنِ سَعْدٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ المِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

لِلشَّهِيدِ عِنْدَ اللَّهِ سِتُّ خِصَالٍ: يُغْفَرُ لَهُ فِي أَوَّلِ دَفْعَةٍ، وَيَرَى مَقْعَدَهُ مِنَ الجَنَّةِ، وَيُجَارُ مِنْ عَذَابِ القَبْرِ، وَيَأْمَنُ مِنَ الفَزَعِ الأَكْبَرِ، وَيُوضَعُ عَلَى رَأْسِهِ تَاجُ الوَقَارِ، اليَاقُوتَةُ مِنْهَا خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَيُزَوَّجُ اثْنَتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الحُورِ العِينِ، وَيُشَفَّعُ فِي سَبْعِينَ مِنْ أَقَارِبِهِ

هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1586.
Tirmidhi-Shamila-1663.
Tirmidhi-Alamiah-1586.
Tirmidhi-JawamiulKalim-1584.




  • இந்த செய்தியில், உயிர்த்தியாகிக்கு கிடைக்கும் பரிசுகளின் எண்ணிக்கையை சிலர் ஏழு என்று கணக்கிடுகின்றனர். என்றாலும் திர்மிதீ நூலுக்கு விளக்கவுரை எழுதிய ஆசிரியர் முதல் இரண்டு அம்சங்களை ஒன்றாக கணக்கிடுவதே சரியானது என்ற கருத்தை பதிவு செய்துள்ளார்.

(நூல்: துஹ்ஃபதுல் அஹ்வதீ-5/247)

இந்த செய்தி பல அறிவிப்பாளர்தொடர்களிலும், சில கருத்து மாற்றத்துடனும் வந்துள்ளது.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9319-பகிய்யது பின் வலீத் பற்றி தத்லீஸ் செய்பவர் என்றும், பலவீனமானவர்கள், கைவிடப்பட்டவர்களை மறைத்து அறிவிப்பவர் என்றும், தன் ஊர்வாசிகள் அல்லாதவர்களிடமிருந்து அறிவிப்பதில் தவறு உள்ளது என்றும், தவறிழைப்பவர் என்றும் நான்கு வகையான விமர்சனம் உள்ளது. எனவே சில நிபந்தனைகளின் படி இருந்தால் மட்டுமே இவரின் செய்திகள் ஏற்கப்படும் என ஹதீஸ்கலை அறிஞர்களில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் கூறியுள்ளனர்.

1 . இவரின் ஆசிரியர் பலமானவராக இருக்க வேண்டும்.

2 . இவரின் ஆசிரியர் இவர் ஊரைச் சேர்ந்த ஷாம் வாசியாக இருக்க வேண்டும். (உதாரணமாக-பஹீர் பின் ஸஃத், முஹம்மது பின் ஸியாத் போன்றவர்கள்)

3 . தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்திருக்க வேண்டும்.

4 . இவரின் ஆசிரியருக்கும், அவரின் ஆசிரியருக்கும் இடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும்.

5 . இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் ஷாம் வாசியாக இருக்க கூடாது. அவர் பலமானவராக இருந்தால் போதும்.

  • பகிய்யது பின் வலீத், பஹீர் பின் ஸஃத் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை ஷுஃபா அவர்கள் பாராட்டி உள்ளார்…
  • இந்த அறிவிப்பாளர்தொடர் பற்றி திர்மிதீ இமாம் அவர்கள் சரியானது என்று கூறினாலும், பகிய்யது பின் வலீத், பஹீர் பின் ஸஃத் வழியாக அறிவிப்பவைகள் மற்ற செய்திகளை விட நல்லது என திர்மிதீ இமாம் கூறியுள்ளார். எனவே ஹஸன் என்று கூறுவதுதான் சரியானது என இப்னுல் கத்தான் அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: பயானுல் வஹ்மி வல்ஈஹாம்-2397)

  • மேலும் இந்த செய்தி இஸ்மாயீல் பின் அய்யாஷ் வழியாக பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களிலும், வெவ்வாறான கருத்து அமைப்பிலும் வந்துள்ளது. எனவே சிலர் இது அறிவிப்பாளர்தொடரிலும், கருத்திலும் குளறுபடியான செய்தி என்று விமர்சித்துள்ளனர்.
  • என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இஸ்மாயீல் பின் அய்யாஷ் மூலம் மிக்தாம் (ரலி) வழியாக வரும் செய்திகளை அதிகமானோர் அறிவித்திருப்பதால் அந்த செய்திகளை மட்டும் சரியானது என்று கூறியுள்ளார்…

(நூல்: அஸ்ஸஹீஹா-3213)

  • 1 . இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> கஸீர் பின் முர்ரா —> நுஐம் பின் ஹம்மார் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரையும் , 2 . பகிய்யது பின் வலீத் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> மிக்தாம் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரையும் இப்னு அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    தனது தந்தை அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களிடம் கூறி இதில் எது சரியானது என்று கேட்டார். அதற்கு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், பகிய்யாவும், இஸ்மாயீலும் கருத்துவேறுபாடு கொண்டால் பகிய்யாவின் அறிவிப்பே எனக்கு பிடித்தமானது என இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    அவர்கள் கூறியுள்ளதாக குறிப்பிட்டார்கள். இப்னு அபீஹாதிம் தனது தந்தையிடம் உங்களின் பார்வையில் எது சரியானது என்று கேட்க என்னுடைய பார்வையிலும் பகிய்யாவின் அறிவிப்பே பிடித்தமானது என்று கூறிவிட்டு ஆனால் இவ்விரண்டில் எது சரியானது? என உறுதியாக கூறமுடியவில்லை என்று பதிலளித்துள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-976)

பகிய்யாவைப் போன்று இஸ்மாயீல் பின் அய்யாஷும் அறிவித்துள்ளார் என்பது அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். எனவே தான் இவ்வாறு கூறியுள்ளார். இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
இறப்பு ஹிஜ்ரி 181
வயது: 63
அவர்களின் கருத்துப்படி பகிய்யாவும், இஸ்மாயீல் பின் அய்யாஷும் ஒரே மாதிரி அறிவிப்பாளர்தொடரை அறிவித்திருப்பதாலும், பகிய்யா, பஹீர் பின் ஸஃத் வழியாக அறிவிப்பதை ஷுஃபா அவர்கள் பாராட்டி உள்ளார் என்பதின் படியும் இந்த செய்தியை சரியானது என்றும் கூறலாம்.

….

1 . இந்தக் கருத்தில் மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • பகிய்யது பின் வலீத் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> மிக்தாம் (ரலி) 

பார்க்க: திர்மிதீ-1663 ,

  • இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> மிக்தாம் (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-9559 , அஹ்மத்-17182 , இப்னு மாஜா-2799 , அல்முஃஜமுல் கபீர்-629 ,

2 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> கஸீர் பின் முர்ரா —>  உபாதா பின் ஸாமித் (ரலி) 

பார்க்க: அஹ்மத்-17183 .

3 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> கஸீர் பின் முர்ரா —> உக்பா பின் ஆமிர் (ரலி) 

பார்க்க: முஸனதுஷ் ஷாமிய்யீன்-1163 , (இதில் உக்பா (ரலி) அவர்களின் கூற்றாக வந்துள்ளது)

4 . நுஐம் பின் ஹம்மார் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> பஹீர் பின் ஸஃத் —> காலித் பின் மஃதான் —> கஸீர் பின் முர்ரா —> நுஐம் பின் ஹம்மார் (ரலி) 

பார்க்க: இலலுல் ஹதீஸ்-976 .

5 . கைஸ் அல்ஜுதாமீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17783 .

6 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-67 .

இந்த செய்தியின் இறுதிப்பகுதி வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது.

பார்க்க: அபூதாவூத்-2522 .

3 comments on Tirmidhi-1663

  1. இது சரியான ஹதிஸா இல்ல பலவீணம்மான ஹதிஸா புரியலை தெளிவுப்படுத்தவும்

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      சரியான ஹதீஸ்தான் சகோதரே. இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளை பார்க்கும் போது தான் அறிவிப்பாளர்தொடர்களும், அதில் உள்ள குறை நிறைகளும் தெரியும். விளக்கம் புரியும்.

  2. திர்மிதி 1663 ஷஹீத் அந்தஸ்த்து பற்றி ஹதிஸ் விளக்கம் தேவை

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.