பாடம்:
பாங்கு சொன்னவரே இகாமத் சொல்ல வேண்டும் என்பது குறித்து வந்ததுள்ளவை.
ஸியாத் பின் ஹாரிஸ் அஸ்ஸுதாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லுமாறு எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நானும் பாங்கு சொன்னேன். பிறகு பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொல்ல முற்பட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸுதாஅ் குலத்தைச் சேர்ந்த இந்த சகோதரர் பாங்கு சொல்லிவிட்டார். எவர் பாங்கு சொல்கிறாரோ அவரே இகாமத் சொல்ல வேண்டும்” என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளன.
ஸியாத் (ரலி) அவர்களின் வழியாக வரும் இந்த ஹதீஸை அல்இஃப்ரீகீ-ஆஃப்ரிகீ என்பவர் வழியாகவே நாம் அறிகிறோம். ஹதீஸ் கலை அறிஞர்களிடம் அல்இஃப்ரீகீ பலவீனமானவர் ஆவார். யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களும், பிற அறிஞர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
அஹ்மத் (ரஹ்) அவர்கள், ‘நான் அல்இஃப்ரீகீயின் ஹதீஸ்களை எழுதுவதில்லை’ என்று கூறியுள்ளார். முஹம்மத் பின் இஸ்மாயீல் (புகாரீ – ரஹ்) அவர்கள் இவரின் நிலையை வலிமைப்படுத்தி, ‘இவரது ஹதீஸ்கள் நடுத்தரமானவை (முகாரிபுல் ஹதீஸ்)’ என்று கூறுவதை நான் கண்டுள்ளேன்.
“எவர் பாங்கு சொல்கிறாரோ அவரே இகாமத் சொல்ல வேண்டும்” என்பதில் பெரும்பாலான அறிஞர்களின் செயல்பாடு உள்ளது.
(திர்மிதி: 199)بَابُ مَا جَاءَ أَنَّ مَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، وَيَعْلَى بْنُ عُبَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعُمٍ الْإِفْرِيقِيِّ، عَنْ زِيَادِ بْنِ نُعَيْمٍ الحَضْرَمِيِّ، عَنْ زِيَادِ بْنِ الحَارِثِ الصُّدَائِيِّ، قَالَ:
«أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُؤَذِّنَ فِي صَلَاةِ الفَجْرِ»، فَأَذَّنْتُ، فَأَرَادَ بِلَالٌ أَنْ يُقِيمَ، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخَا صُدَاءٍ قَدْ أَذَّنَ، وَمَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ»،
وَفِي البَابِ عَنْ ابْنِ عُمَرَ، «وَحَدِيثُ زِيَادٍ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ الْإِفْرِيقِيِّ» وَالْإِفْرِيقِيُّ هُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الحَدِيثِ، ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ القَطَّانُ وَغَيْرُهُ ” قَالَ أَحْمَدُ: «لَا أَكْتُبُ حَدِيثَ الْإِفْرِيقِيِّ». وَرَأَيْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يُقَوِّي أَمْرَهُ، وَيَقُولُ: «هُوَ مُقَارِبُ الحَدِيثِ » وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ: أَنَّ مَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ “
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-199.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் ஸியாத் பின் ஹாரிஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் —> ஸியாத் பின் நுஐம் —> ஸியாத் பின் ஹாரிஸ் (ரலி)
பார்க்க: … அஹ்மத்- 17537, 17538, இப்னு மாஜா-717, அபூதாவூத்-514, 1630, திர்மிதீ-199, …
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
சமீப விமர்சனங்கள்