பாடம்:
பாங்கு சொல்வதைக் கேட்டால் கூற வேண்டியவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அபூராஃபிஉ (ரலி), அபூஹுரைரா (ரலி), உம்முஹபீபா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் ரபீஆ (ரலி), ஆயிஷா (ரலி), முஆத் பின் அனஸ் (ரலி), முஆவியா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
அபூஸயீத் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” என்ற தரத்தில் அமைந்ததாகும்.
மஃமர் (ரஹ்) அவர்களும், இன்னும் பலரும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மேற்கண்ட மாலிக் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே அறிவித்துள்ளனர்.
அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், ஸுஹ்ரீ —> ஸயீத் பின் முஸய்யிப் —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார். மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பே மிகவும் சரியானதாகும்.
(திர்மிதி: 208)بَابُ مَا يَقُولُ إِذَا أَذَّنَ المُؤَذِّنُ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا سَمِعْتُمُ النِّدَاءَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ المُؤَذِّنُ»
وَفِي البَابِ عَنْ أَبِي رَافِعٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَأُمِّ حَبِيبَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَعَبْدِ اللَّهِ بْنِ رَبِيعَةَ، وَعَائِشَةَ، وَمُعَاذِ بْنِ أَنَسٍ، وَمُعَاوِيَةَ. «حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ». وَهَكَذَا رَوَى مَعْمَرٌ، وَغَيْرُ وَاحِدٍ، عَنِ الزُّهْرِيِّ مِثْلَ حَدِيثِ مَالِكٍ، وَرَوَى عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، هَذَا الحَدِيثَ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «وَرِوَايَةُ مَالِكٍ أَصَحُّ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-192.
Tirmidhi-Shamila-208.
Tirmidhi-Alamiah-192.
Tirmidhi-JawamiulKalim-192.
சமீப விமர்சனங்கள்