தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2226

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தில் (எனது வழியில் நடைபெறும்) கிலாஃபத் எனும் ஆட்சி முப்பது வருடங்கள் இருக்கும். அதற்குப் பிறகு மன்னராட்சி நடைபெறும்.

அறிவிப்பவர்: அபூஅப்துரஹ்மான்-ஸஃபீனா (ரலி)

ஸஃபீனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் ஜும்ஹான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பிறகு ஸஃபீனா (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி) ஆகியோரின் கிலாஃபத் (வருடத்)தை கணக்கிட்டுக் கொள்! என்று என்னிடம் கூறினார்கள். கணக்கிட்டுப் பார்க்கும்போது அது முப்பது வருடங்கள் வந்தன.

அப்போது நான், இந்த பனூ உமைய்யாக்கள் தங்களை கிலாஃபத் ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே! என்று கூறினேன். அதற்கவர்கள், “ஸர்கா எனும் பெண்ணின் வமிசத்தில் வந்துள்ள இந்த பனூ உமைய்யாக்கள் பொய் சொல்கின்றனர். இவர்கள் தீய மன்னர்கள் ஆவார்கள்” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

“நபி (ஸல்) அவர்கள் (தனக்குப் பிறகு) யார் கிலாஃபத் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது குறித்து எதுவும் மரண சாசனம் செய்யவில்லை” என்று உமர் (ரலி), அலீ (ரலி) ஆகியோர் கூறினார்கள் என்று இப்பாடப்பொருள் தொடர்பாக ஒரு செய்தி வந்துள்ளது.

ஸஃபீனா (ரலி) வழியாக வரும் மேற்கண்ட செய்தி ஹஸன் தரத்தில் அமைந்ததாகும். இந்தச் செய்தியை ஸயீத் பின் ஜும்ஹான் (ரஹ்) அவர்களிடமிருந்து பலரும் அறிவித்துள்ளனர். இவர் மட்டுமே இந்தச் செய்தியை அறிவித்துள்ளதாக நாம் அறிகிறோம். (வேறு யாரும் இந்தச் செய்தியை அறிவிக்கவில்லை)

(திர்மிதி: 2226)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ قَالَ: حَدَّثَنَا حَشْرَجُ بْنُ نُبَاتَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُمْهَانَ، قَالَ: حَدَّثَنِي سَفِينَةُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الخِلَافَةُ فِي أُمَّتِي ثَلَاثُونَ سَنَةً، ثُمَّ مُلْكٌ بَعْدَ ذَلِكَ»

ثُمَّ قَالَ لِي سَفِينَةُ: أَمْسِكْ خِلَافَةَ أَبِي بَكْرٍ، وَخِلَافَةَ عُمَرَ، وَخِلَافَةَ عُثْمَانَ، ثُمَّ قَالَ لِي: أَمْسِكْ خِلَافَةَ عَلِيٍّ قَالَ: فَوَجَدْنَاهَا ثَلَاثِينَ سَنَةً، قَالَ سَعِيدٌ: فَقُلْتُ لَهُ: إِنَّ بَنِي أُمَيَّةَ يَزْعُمُونَ أَنَّ الخِلَافَةَ فِيهِمْ؟ قَالَ: كَذَبُوا بَنُو الزَّرْقَاءِ بَلْ هُمْ مُلُوكٌ مِنْ شَرِّ المُلُوكِ،

وَفِي البَابِ عَنْ عُمَرَ، وَعَلِيٍّ قَالَا: لَمْ يَعْهَدِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الخِلَافَةِ شَيْئًا وَهَذَا حَدِيثٌ حَسَنٌ قَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ سَعِيدِ بْنِ جُمْهَانَ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِهِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2226.
Tirmidhi-Alamiah-2152.
Tirmidhi-JawamiulKalim-2156.




  • இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
  • சிலர் மூன்று செய்திகளைச் சேர்த்தும், சிலர் ஒவ்வொரு செய்தியாக  தனித்தனியாகவும் அறிவித்துள்ளனர்.

மூன்று செய்திகள்:

1 . ஸஃபீனா (ரலி) ஆரம்பத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையாக இருந்தது.

பார்க்க: அபூதாவூத்-3932.

2 . ஸஃபீனா என்ற பெயருக்கு காரணம்.

பார்க்க: அஹ்மத்-21925.

3 . கிலாஃபத் ஆட்சி முப்பது வருடங்கள்.

பார்க்க: திர்மிதீ-2226.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மனீஃ

3 . ஸுரைஜ் பின் நுஃமான்

4 . ஹஷ்ரஜ் பின் நுபாதா

5 . ஸயீத் பின் ஜும்ஹான்

6 . ஸஃபீனா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13516-ஹஷ்ரஜ் பின் நுபாதா என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அலீ பின் மதீனீ, அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அப்பாஸ் பின் அப்துல்அளீம், யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரை ஸாலிஹ்-சுமாரானவர் என்றும்; இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம்; ஆனால் இவர் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். (ஒரு சில செய்திகளை தவறாக அறிவித்தவர்களுக்கும் இவ்வாறு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்)
  • அபூஸுர்ஆ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவரை சுமாரானவர்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவரின் செய்திகளில் குறையில்லை. இவர் அறிவிக்கும் சில செய்திகளில் தனித்து அறிவித்துள்ளார் என்று விமர்சனம் இருந்தாலும் அதற்கு இவர் காரணமல்ல. எனவே இவர் என்னுடைய பார்வையில் சுமாரானவர்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث ஆவார் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் குறைந்த செய்திகளை அறிவித்துள்ளார். மேலும் இவற்றை இவர் முன்கராக-தனித்து அறிவித்துள்ளார். எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக் என்றும் சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/296, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/372, தஹ்தீபுல் கமால்-6/506, அல்காஷிஃப்-2/291, தஹ்தீபுத் தஹ்தீப்-1/440, தக்ரீபுத் தஹ்தீப்-1/252)


இவர், “நபி (ஸல்) அவர்கள், தனக்கு பிறகு நான்கு நபித்தோழர்களை கிலாஃபத் ஆட்டசியாளர்கள்” என்று கூறியதாக அறிவிக்கும் செய்தியின் காரணமாகவும், (பார்க்க: ஹாகிம்-4284)

“கிலாஃபத் ஆட்சி முப்பது வருடம் இருக்கும்” என்ற கருத்தில் அறிவிக்கும் செய்தியின் காரணமாகவும் (பார்க்க: திர்மிதீ-2226) புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் தனித்து அறிவிப்பவர் என்று விமர்சனம் செய்துள்ளதைக் குறிப்பிட்ட இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள், இவர் மட்டும் இந்தச் செய்திகளை அறிவிக்கவில்லை. வேறு சிலரும் அறிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுவிட்டு இவரை ஹஸன் தரத்தில் உள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/372)


  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17247-ஸயீத் பின் ஜும்ஹான் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்களிடம், இவரை யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    பொருந்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்டபோது அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் அது தவறான தகவல் என்று கூறி கோபபட்டார். மேலும் இவரை இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    தான் சிறிது விமர்சித்துள்ளார். யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் விமர்சிக்கவில்லை என்று கூறினார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவரின் செய்தியில் சில ஆச்சரியங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார். (இதன் பொருள் இவர் சில செய்திகளை தனித்து (முன்கராக) அறிவித்துள்ளார் என்பதாகும்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரின் செய்திகளை எழுதிக் கொள்ளலாம். (தனி) ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
  • நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    ஆகியோர் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்றும்; சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/10, அல்காமில்-4/456, தஹ்தீபுல் கமால்-10/376, அல்இக்மால்-5/271, அல்காஷிஃப்-2/474, தஹ்தீபுத் தஹ்தீப்-2/11, தக்ரீபுத் தஹ்தீப்-1/375)

ஹஷ்ரஜ் பின் நுபாதா, ஸயீத் பின் ஜும்ஹான் ஆகியோர் நடுத்தரமானவர்கள் என்பதால் இது ஹஸன் தர செய்தியாகும்.


அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்னு அபூஆஸிம், திர்மிதீ, இப்னு ஜரீர், இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இப்னு தைமியா, தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்ற பலரும் இதை ஏற்கத்தக்க செய்தி என்று கூறியுள்ளதாக அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் குறிப்பிட்டு விட்டு இதை விமர்சித்தவர்களின் கருத்து தவறு என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-459)


1 . இந்தக் கருத்தில் அபூஅப்துரஹ்மான்-ஸஃபீனா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸயீத் பின் ஜும்ஹான் —> ஸஃபீனா (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-, அபூதாவூத்-4646, 4647, திர்மிதீ-2226, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-, …


..


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-18406,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.