தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2260

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது அவர்களில் தன் மார்க்கத்தில் (சிரமத்தின்போது) பொறுமையாக இருப்பவர் தன் கையில் நெருப்புக் கங்கை பிடித்திருப்பவர் போன்று இருப்பார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(திர்மிதி: 2260)

بَابٌ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الفَزَارِيُّ ابْنُ بِنْتِ السُّدِّيِّ الكُوفِيِّ قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ شَاكِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالقَابِضِ عَلَى الجَمْرِ»

هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَعُمَرُ بْنُ شَاكِرٍ شَيْخٌ بَصْرِيٌّ قَدْ رَوَى عَنْهُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ العِلْمِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2260.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2191.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31489-உமர் பின் ஷாகிர் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் முகாரிபுல் ஹதீஸ் என்றும், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இவர் அனஸ் (ரலி) வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும், இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவரின் ஹதீஸ்கள் மஹ்ஃபூல் அல்ல என்றும் என்றும் கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    இவரை பலவீனமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/232, தக்ரீபுத் தஹ்தீப்-4951)

  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் ஒருவரைப் பற்றி முகாரிபுல் ஹதீஸ் என்று கூறினால் சிலர் சுமாரானவர் என்றும், சிலர் மிக பலவீனமானவர் அல்ல என்றும் கூறுகின்றனர்.
  • இராகீ அவர்கள் இந்த தரத்தில் கூறப்பட்டவர்கள் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது; மற்றவர்கள் அவ்வாறு அறிவித்திருந்தால் ஏற்கலாம் என்று கூறியுள்ளார். (நூல்: அல்ஃபிய்யதுல் இராகீ-1/372)
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த கருத்தில் வேறு சில நூல்களில் வரும் சில செய்திகளை இணைத்து இந்த கருத்தை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-957)

1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2260 ,

2 . அபூஸஃலபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3058 .

3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-9073 .

4 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-1776 .

5 . உத்பா பின் கஸ்வான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-289 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.