தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3058

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அபூஉமைய்யா அஷ்ஷஃபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஸஃலபா (ரலி) அவர்களிடம் சென்று, (அபூஸஃலபா அவர்களே!) இந்த குர்ஆன் வசனத்தை பற்றி உங்கள் விளக்கம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எந்த வசனம்? என்று கேட்டார்கள். நான், “நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடக்கும்போது வழிகெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது” என்ற (அல்குர்ஆன் 5:105) வசனத்தை ஓதிக் காட்டினேன்.

அதற்கவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதைப்பற்றி நன்கு அறிந்தவரிடமே நீ கேட்டுள்ளாய்! இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (முன்பே) விளக்கம் கேட்டுள்ளேன்” என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறினார்கள்:

இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் நன்மையை ஏவிக்கொண்டே இருங்கள். தீமையைத் தடுத்துக்கொண்டே இருங்கள். மக்களிடம் கஞ்சத்தனம் கடைப்பிடிக்கப்படுவதையும், மனோஇச்சைக்கு கட்டுப்படுவதையும், உலக விசயத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதையும், ஒவ்வொருவரும் தன் கருத்தே சரியானது என பெருமையடிப்பதையும் நீ கண்டால் மக்களை விட்டுவிடு! உன்னை சரிப்படுத்திக்கொள்.

உங்களுக்கு பின் ஒரு காலம் வரவிருக்கின்றது. அப்போது (சிரமம் ஏற்படும் போது) மார்க்கத்தில் பொறுமையாக இருப்பவர் தன் கையில் நெருப்புக் கங்கை பிடித்தவர் போன்று இருப்பார். அப்போது நற்செயல் செய்பவருக்கு உங்களில் 50 பேர் செய்யும் நற்செயலின் கூலி வழங்கப்படும்.

அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மேற்கண்டவாறு உத்பா பின் அபூஹகீம் எனக்கு அறிவித்தார்). ஆனால் மற்றவர்கள் “அப்போது நற்செயல் செய்பவருக்கு 50 பேர் செய்யும் நற்செயலின் கூலி வழங்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “எங்களில் உள்ள 50 பேரின் நற்செயலின் கூலியா? அல்லது அவர்களில் உள்ள 50 பேரின் நற்செயலின் கூலியா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் உள்ள 50 பேரின் நற்செயலின் கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள்” என்று கூடுதலாக எனக்கு அறிவித்தனர்.

(திர்மிதி: 3058)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالقَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ أَبِي حَكِيمٍ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ جَارِيَةَ اللَّخْمِيُّ، عَنْ أَبِي أُمَيَّةَ الشَّعْبَانِيِّ، قَالَ:

أَتَيْتُ أَبَا ثَعْلَبَةَ الخُشَنِيَّ، فَقُلْتُ لَهُ: كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ؟ قَالَ: أَيَّةُ آيَةٍ؟ قُلْتُ: قَوْلُهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] قَالَ: أَمَا وَاللَّهِ لَقَدْ سَأَلْتَ عَنْهَا خَبِيرًا، سَأَلْتُ عَنْهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «بَلْ ائْتَمِرُوا بِالمَعْرُوفِ وَتَنَاهَوْا عَنِ المُنْكَرِ، حَتَّى إِذَا رَأَيْتَ شُحًّا مُطَاعًا، وَهَوًى مُتَّبَعًا، وَدُنْيَا مُؤْثَرَةً، وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْيٍ بِرَأْيِهِ، فَعَلَيْكَ بِخَاصَّةِ نَفْسِكَ وَدَعِ العَوَامَّ، فَإِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامًا الصَّبْرُ فِيهِنَّ مِثْلُ القَبْضِ عَلَى الجَمْرِ، لِلْعَامِلِ فِيهِنَّ مِثْلُ أَجْرِ خَمْسِينَ رَجُلًا يَعْمَلُونَ مِثْلَ عَمَلِكُمْ»

قَالَ عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ: وَزَادَنِي غَيْرُ عُتْبَةَ – قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَجْرُ خَمْسِينَ رَجُلًا مِنَّا أَوْ مِنْهُمْ. قَالَ: «بَلْ أَجْرُ خَمْسِينَ رَجُلًا مِنْكُمْ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3058.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3003.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32205-அம்ர் பின் ஜாரியா பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல்தரத்தில் கூறியுள்ளார்.
  • மேலும் இதில் வரும் ராவீ-27815-உத்பா பின் அபூஹகீம் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.
  • மேலும் சரியான அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட செய்தியில் இடம்பெரும் குர்ஆன் வசனத்திற்கு வேறு விளக்கம் வந்துள்ளது.

(பார்க்க: இப்னு மாஜா-4005 )

எனவே இது பலவீனமான-முன்கரான அறிவிப்பாளர்தொடராகும்.


  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியில் (உங்களுக்கு பின் ஒரு காலம் வரவிருக்கின்றது. அப்போது (சிரமம் ஏற்படும் போது) மார்க்கத்தில் பொறுமையாக இருப்பவர் தன் கையில் நெருப்புக் கங்கை பிடித்தவர் போன்று இருப்பார்) என்ற கருத்தைத் தவிர மற்றவை பலவீனமானது என்று கூறியுள்ளார். (நூல்: அள்ளயீஃபா-1025)
  • என்றாலும் இந்த செய்தியை திர்மிதீ அவர்கள் ஹஸனுன் கரீப் என்று கூறியுள்ளார். ஹஸனுன் லிதாதிஹீ என்பதற்கே திர்மிதீ இமாம் இப்படி கூறுவார் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும், அல்பானியும் குறிப்பிட்டுள்ளனர். (நூல்: அன்னிகதுல் வஃபிய்யா-1/234, அள்ளயீஃபா-764)
  • மேலும் ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்களும் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். அவர் கூறும் காரணம், அம்ர் பின் ஜாரியா பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டும் பலமானவர் என்று கூறவில்லை. இவரிடமிருந்து இருவர் அறிவித்துள்ளனர். திர்மிதீ அவர்கள் இவரைப் பற்றி ஹஸன் தரம் என்று கூறியிருப்பதால் இவர் அறியப்படாதவர் என்ற வகையில் வரமாட்டார். மேலும் உத்பா பின் அபூஹகீம் பற்றி பார்க்கும் போது அதிகமானவர்கள் பலமானவர் என்றும் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். இதனடிப்படையில் இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் ஆவார்.
  • (அல்குர்ஆன் 5:105) வசனத்தின் விளக்கமாக வரும் இரு வகையான ஹதீஸ்களையும் சரியானது என ஏற்கக்கூடியவர்கள் முரண்படாதவாறு விளக்கம் கூறுகின்றனர். திர்மிதீ-3058 எண்ணின் கருத்தில் வரும் செய்திகள் நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுப்பதால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம் என்ற கருத்தை தருகின்றது.
  • இப்னு மாஜா-4005 எண்ணின் கருத்தில் வரும் செய்திகள் நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுக்கும் செயல் பயனளிக்காத-எடுபடாத காலம் வரும் போது நாம் நம்மையாவது தீமைகளிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை தருகின்றது என்று கூறுகின்றனர்.

2 . இந்தக் கருத்தில் அபூஸஃலபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-4014 , அபூதாவூத்-4341 , திர்மிதீ-3058 , இப்னு ஹிப்பான்-385 , அல்முஃஜமுல் கபீர்-587 , ஹாகிம்-7912 , குப்ரா பைஹகீ-20193 , ஷுஅபுல் ஈமான்-9278 ,


மேலும் பார்க்க: திர்மிதீ-2260 .

1 comment on Tirmidhi-3058

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.