பாடம்:
(சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்த பின்) ஆமீன் கூறுவது பற்றி வந்துள்ளவை.
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில்), “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலழ்ழால்லின்” (எவர் மீது கோபம் கொண்டாயோ அவர்கள் வழியும், வழி தவறியோர் வழியும் அல்ல) என்று ஓதியபோது, “ஆமீன்” என்று தமது குரலால் நீட்டி கூறியதை நான் செவியேற்றேன்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ்கள் அலீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.
நபித்தோழர்கள், தாபியீன்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்கள், (தொழுகையில்) ஆமீன் கூறும் போது சப்தத்தை உயர்த்தி கூற வேண்டும் என்றும், அதை இரகசியமாக கூறக்கூடாது என்றும் கருதுகின்றனர். இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்), இமாம் இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரும் இந்த கருத்தையே கொண்டுள்ளனர்.
ஆனால் ஷுஃபா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை, ஸலமா பின் குஹைல் —> ஹுஜ்ர் (அபுல்அன்பஸ்) —> அல்கமா பின் வாயில் —> அவரது தந்தை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்,
“நபி (ஸல்) அவர்கள் “கைரில் மஃக்ளூபி அலைஹிம் வலழ்ழால்லீன்” (என்று சூரத்துல் ஃபாத்திஹா 7 வது வசனத்தை) ஓதி முடித்த பிறகு “ஆமீன்” என்று கூறி, தமது சப்தத்தை குறைத்தார்கள்” என்று அறிவிக்கிறார்.
முஹம்மத் பின் இஸ்மாயில்-புகாரீ (ரஹ்) அவர்கள், இந்த விஷயத்தில் ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்களின் ஹதீஸ் தான் ஷுஃபா (ரஹ்) அவர்களின் ஹதீஸை விட மிகச் சரியானது என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
மேலும் புகாரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஷுஃபா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் பல இடங்களில் தவறு செய்துள்ளார்.
1 . அவர், இதில் இடம்பெறும் அறிவிப்பாளரின் பெயரை “ஹுஜ்ர் அபுல்அன்பஸ்” என்று கூறியிருப்பது தவறு. சரியான பெயர் “ஹுஜ்ர் பின் அன்பஸ்” ஆகும். அவரது புனைப்பெயர் அபுஸ்ஸகன் ஆகும்.
2 . அவர் இதன் அறிவிப்பாளர்தொடரில், “அல்கமா பின் வாயில்” என்று கூடுதலாக ஒரு அறிவிப்பாளரைக் கூறியிருப்பது தவறு. அல்கமா பின் வாயில் வழியாக இந்த ஹதீஸ் வரவில்லை. சரியான அறிவிப்பாளர்தொடர், “ஹுஜ்ர் பின் அன்பஸ் —> வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)” என்பதாகும்.
3 . மேலும், அவர் “(நபி-ஸல்-அவர்கள்) ஆமீன் கூறும் போது சப்தத்தை குறைத்தார்கள்” என்று கூறியிருப்பது தவறு. சரியான அறிவிப்பு “சப்தத்தை நீட்டினார்கள்” என்பதாகும்.
அபூஸுர்ஆ (ரஹ்) அவர்களிடம் இந்த ஹதீஸ் பற்றி நான் கேட்டபோது, “இந்த விஷயத்தில் ஸுஃப்யான் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் தான் சரியானது” என்று கூறினார்.
மேலும், அலா பின் ஸாலிஹ் அல்அஸதீ (ரஹ்) அவர்களும், ஸலமா பின் குஹைல் —> ஹுஜ்ர் பின் அன்பஸ் —> வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதைப் போன்றே அறிவித்துள்ளார்.
(திர்மிதி: 248)بَابُ مَا جَاءَ فِي التَّأْمِينِ
حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجْرِ بْنِ عَنْبَسٍ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ، قَالَ:
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَقَالَ: «آمِينَ»، وَمَدَّ بِهَا صَوْتَهُ
وَفِي البَابِ عَنْ عَلِيٍّ، وَأَبِي هُرَيْرَةَ. حَدِيثُ وَائِلِ بْنِ حُجْرٍ حَدِيثٌ حَسَنٌ،
وَبِهِ يَقُولُ غَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالتَّابِعِينَ، وَمَنْ بَعْدَهُمْ: يَرَوْنَ أَنْ يَرْفَعَ الرَّجُلَ صَوْتَهُ بِالتَّأْمِينِ، وَلَا يُخْفِيهَا، وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ.
وَرَوَى شُعْبَةُ هَذَا الحَدِيثَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ حُجْرٍ أَبِي العَنْبَسِ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَقَالَ: «آمِينَ» وَخَفَضَ بِهَا صَوْتَهُ.
سَمِعْت مُحَمَّدًا يَقُولُ: ” حَدِيثُ سُفْيَانَ أَصَحُّ مِنْ حَدِيثِ شُعْبَةَ فِي هَذَا،
وَأَخْطَأَ شُعْبَةُ فِي مَوَاضِعَ مِنْ هَذَا الحَدِيثِ، فَقَالَ: عَنْ حُجْرٍ أَبِي العَنْبَسِ، وَإِنَّمَا هُوَ حُجْرُ بْنُ عَنْبَسٍ وَيُكْنَى أَبَا السَّكَنِ،
وَزَادَ فِيهِ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، وَلَيْسَ فِيهِ عَنْ عَلْقَمَةَ، وَإِنَّمَا هُوَ حُجْرُ بْنُ عَنْبَسٍ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ
وَقَالَ: وَخَفَضَ بِهَا صَوْتَهُ، وَإِنَّمَا هُوَ: وَمَدَّ بِهَا صَوْتَهُ “.
وَسَأَلْتُ أَبَا زُرْعَةَ عَنْ هَذَا الحَدِيثِ، فَقَالَ: «حَدِيثُ سُفْيَانَ فِي هَذَا أَصَحُّ»،
قَالَ: وَرَوَى العَلَاءُ بْنُ صَالِحٍ الأَسَدِيُّ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، نَحْوَ رِوَايَةِ سُفْيَانَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-248.
Tirmidhi-Alamiah-231.
Tirmidhi-JawamiulKalim-231.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . புந்தார்-முஹம்மத் பின் பஷ்ஷார்
3 . யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். 4 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ
5 . ஸுஃப்யான் ஸவ்ரீ
6 . ஸலமா பின் குஹைல்
7 . ஹுஜ்ர் பின் அன்பஸ்
8 . வாயில் பின் ஹுஜ்ர்
ஆய்வின் சுருக்கம்:
- இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் அறிவிப்பே சரியானது என்றும், ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களின் அறிவிப்பு தவறானது என்றும் இமாம் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அஸ்ரம், அபூஸுர்ஆ, திர்மிதீ, தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
போன்ற பல அறிஞர்கள் கூறியுள்னர்.
(நூல்கள்: தாரீகுல் கபீர்-3/73, அத்தம்யீஸ்-36, திர்_மிதீ-248, இலலுல் கபீர்-98, தாரகுத்னீ-1270…)
الجرح والتعديل – ابن أبي حاتم (1/ 63):
حدثنا عبد الرحمن نا محمد بن يحيى أنا يوسف بن موسى التستري قال سمعت أبا داود يقول سمعت شعبة يقول: إذا خالفني سفيان في حديث فالحديث حديثه.
مسند ابن الجعد (ص275):
وَنَا وَكِيعٌ قَالَ: قَالَ شُعْبَةُ: سُفْيَانُ أَحْفَظُ مِنِّي، وَمَا حَدَّثَنِي عَنْ شَيْخٍ فَلَقِيتُ الشَّيْخَ إِلَّا وَجَدْتُهُ كَمَا قَالَ سُفْيَانُ
- ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களே, ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் எனக்கு மாற்றமாக அறிவித்தால் அவரின் செய்தியே சரியானது என்று கூறியுள்ளார். அவர் என்னைவிட மிகவும் நினைவாற்றல் உள்ளவர் என்றும் கூறியுள்ளார். (ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் சில அறிவிப்பாளர்களின் பெயர்கள் போன்றவற்றை குறிப்பிடும்போதும், ஹதீஸின் சில வார்த்தைகளை குறிப்பிடும் போதும் தான் தவறாக அறிவித்துள்ளார்) - யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.போன்றோரும் ஷுஅபாவும், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களும் கருத்துவேறுபாடு கொண்டால் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்களின் அறிவிப்பையே ஏற்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1/63, முஸ்னதுல் ஜஃத்-1842, …)
கூடுதல் தகவல்: ஃபள்லுர் ரஹீமுல் வதூத்-10/166-168, தகீரதுல் உக்பா-12/20)
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், குறைந்த அளவு தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் இந்தச் செய்தியில் ஸலமா பின் குஹைல் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறவில்லை என்பதால் ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களின் அறிவிப்பே சரியானது என்று ஹனஃபீ மத்ஹபைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص388):
قَالَ مُحَمَّدٌ: وَلَا أَعْرِفُ لِسُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ، وَلَا عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ ، وَلَا عَنْ مَنْصُورٍ. وَذَكَرَ مَشَايِخَ كَثِيرَةً لَا أَعْرِفُ لِسُفْيَانَ هَؤُلَاءِ تَدْلِيسًا مَا أَقَلَّ تَدْلِيسَهُ.
முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் கூறியதாக திர்மிதீ இமாம் கூறியதாவது:
ஹபீப் பின் அபூஸாபித், ஸலமா பின் குஹைல், மன்ஸூர் போன்ற (தன்னுடைய) அதிகமான ஆசிரியர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் குறைந்த அளவு கூட தத்லீஸ் செய்துள்ளதாக நான் அறியவில்லை.
(நூல்: அல்இலலுல் கபீர்-1/388)
(தத்லீஸ் என்றால் அன்அனாவாக-عن என்பது போன்ற வார்த்தைகளைக் கூறி அறிவிப்பது மட்டுமல்ல. வேறு சான்றுகளின்படி இவர் இன்னாரிடம் கேட்கவில்லை என்ற சான்றும் இருக்கவேண்டும்)
1 . இந்தக் கருத்தில் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களின் அறிவிப்புகள்:
- ஸலமா பின் குஹைல் —> ஹுஜ்ர் பின் அன்பஸ் —> வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, அஹ்மத்-18854, அல்முஃஜமுல் கபீர்-, தாரகுத்னீ-1270, குப்ரா பைஹகீ-2447,
ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
போன்ற மற்றவர்களின் அறிவிப்புகள்:
- ஸலமா பின் குஹைல் —> ஹுஜ்ர் பின் அன்பஸ் —> வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, தாரிமீ-, அபூதாவூத்-932, திர்மிதீ-248, 249, அல்முஃஜமுல் கபீர்-, தாரகுத்னீ-, குப்ரா பைஹகீ-,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-780,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்