தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2517

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

துணைப் பாடம்:

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒட்டகத்தை கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா? அல்லது அவிழ்த்துவிட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைக்க வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒட்டகத்தை) கட்டிவைத்து விட்டு அல்லாஹ்வின் மீது முழுதும் நம்பிக்கை வைப்பீராக!” என்று பதிலளித்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

யஹ்யா பின் ஸயீத் அவர்கள், என் பார்வையில் இந்த செய்தி நிராகரிக்கப்பட்டதாகும் என்று கூறியதாக அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் அவர்கள் கூறினார்.

இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வந்துள்ள செய்திகளில் இந்த அறிவிப்பாளர்தொடரையே நாம் அறிகிறோம். இது அரிதான செய்தியாகும்.

மேலும் இந்த செய்தி அம்ர் பின் உமைய்யா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(திர்மதி: 2517)

بَابٌ

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ القَطَّانُ قَالَ: حَدَّثَنَا المُغِيرَةُ بْنُ أَبِي قُرَّةَ السَّدُوسِيُّ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ:

قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَعْقِلُهَا وَأَتَوَكَّلُ، أَوْ أُطْلِقُهَا وَأَتَوَكَّلُ؟ قَالَ: «اعْقِلْهَا وَتَوَكَّلْ»

قَالَ عَمْرُو بْنُ عَلِيٍّ: قَالَ يَحْيَى: «وَهَذَا عِنْدِي حَدِيثٌ مُنْكَرٌ»: «وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَنَسٍ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ» وَقَدْ رُوِيَ عَنْ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ هَذَا


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2517.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-2454.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45130-அல்முகீரா பின் அபூகுர்ரா என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/137, தக்ரீபுத் தஹ்தீப்-1/966)

  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள் இதனால் தான் இந்த அறிவிப்பாளர்தொடரை முன்கர்-நிராகரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2517 , …

மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-731 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.