எவர் குர்ஆனை ஓதி, அதை மனனமிட்டு, அதில் அனுமதிக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டதாகவே கருதி, அதில் தடுக்கப்பட்டதை தடுக்கப்பட்டதாகவே கருதி செயல்படுகிறாரோ, அவரை அல்லாஹ் அதன் மூலம் சொர்க்கத்தில் நுழையச் செய்வான்.
மேலும், அவரது குடும்பத்தில் நரகம் கட்டாயமான பத்து பேருக்கு அவர் பரிந்துரை செய்ய அனுமதிப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் ‘கரீப்-அரிதானது’ எனும் வகையைச் சேர்ந்தது. இந்த ஒரு வகை அறிவிப்பாளர்தொடர் தவிர வேறு வழியில் இதை நாங்கள் அறியவில்லை. மேலும், இதற்கு (வேறு) சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லை. இதில் இடம்பெறும் ஹஃப்ஸ் பின் ஸுலைமான்-அபூஉமர் பஸ்ஸாஸ் கூஃபீ என்பவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கருதப்படுகிறார்.
(திர்மிதி: 2905)حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا حَفْصُ بْنُ سُلَيْمَانَ، عَنْ كَثِيرِ بْنِ زَاذَانَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ، فَأَحَلَّ حَلَالَهُ، وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ قَدْ وَجَبَتْ لَهُ النَّارُ»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ وَلَيْسَ لَهُ إِسْنَادٌ صَحِيحٌ، وَحَفْصُ بْنُ سُلَيْمَانَ أَبُو عُمَرَ بَزَّازٌ كُوفِيٌّ يُضَعَّفُ فِي الْحَدِيثِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2905.
Tirmidhi-Alamiah-2830.
Tirmidhi-JawamiulKalim-2849.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . அலீ பின் ஹுஜ்ர்
3 . ஹஃப்ஸ் பின் ஸுலைமான்
4 . கஸீர் பின் ஸாதான்
5 . ஆஸிம் பின் ளம்ரா
6 . அலீ பின் அபூதாலிப் (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-13624-ஹஃப்ஸ் பின் ஸுலைமான் பின் முஃகீரா என்பவர் கிராஅத் துறையில் பிரபலமானவர்.
என்றாலும் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.
வேறு சிலர் இவரை பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
சிலர் இவர் பொய் சொல்பவர் என்ற விமர்சனம் சரியில்லை என்றும், இவர் ஹதீஸில் (அறியாமையால்) அதிகம் தவறிழைத்தவர் என்பதால் விடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர்.
வகீஃ, அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
(மற்றொரு அறிவிப்பு), ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
தஹாவீ பிறப்பு ஹிஜ்ரி 238
இறப்பு ஹிஜ்ரி 321
வயது: 83
ஆகியோரில் சிலர் இவரை பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர்…
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/173, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/268, தாரீகுபஃக்தாத்-9/64, தஹ்தீபுல் கமால்-, அல்இக்மால்-7/10, அல்காஷிஃப்-2/297, தஹ்தீபுத் தஹ்தீப்-1/450, தக்ரீபுத் தஹ்தீப்-1/257)
இவரின் அனைத்துச் செய்திகளையும் பார்க்கும் போது இவர் பெரும்பாலும் பலமானவர்கள் அறிவித்த செய்திகளுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்று தெரிகிறது. எனவே தான் ஹதீஸ்கலை அறிஞர்களில் பெரும்பாலோர் இவரை விமர்சித்துள்ளனர்.
மேலும் இதில் வரும் ராவீ-34512-கஸீர் பின் ஸாதான் என்பவரைப் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்றோர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்…
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/458, தக்ரீபுத் தஹ்தீப்-1/807)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்- 1268, 1278, இப்னு மாஜா-216, திர்மிதீ-2905, அல்முஃஜமுல் அவ்ஸத்-, …
2 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,
3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
5 . இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அத்தர்ஃகீப்-இப்னு ஷாஹீன்-,
ஹாஃபிள்கள் மற்றவருக்கு பரிந்துரை செய்வார்கள் என்பது பற்றி வரும் செய்திகள் பலவீனமாகவே உள்ளன.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்