தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3291

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

அத்தியாயம்: 55

அர்ரஹ்மான் – அளவிலா அருளாளன்.

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் சென்று (அல்குர்ஆன்: 55:1-78) எனும் அர்ரஹ்மான் அத்தியாயத்தை அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை ஓதிக் காட்டினார்கள். ஆனால் அவர்கள் அமைதியாக இருந்தனர்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், “நான் இதை ஜின்களிடம் ‘ஜின்களின் இரவில்’ ஓதிக்காட்டினேன். அவர்கள் உங்களைவிடச் சிறப்பாகப் பதிலளித்தார்கள். நான், ‘(மக்களே, ஜின்களே!) உங்கள் இருவரின் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்யாக்குவீர்கள்?’ என்ற வசனத்தைக் கடக்கும்போதெல்லாம், ‘எங்களின் இரட்சகனே! உனது அருட்கொடைகளில் எதையும் நாங்கள் பொய்யாக்கவில்லை. உனக்கே எல்லாப் புகழும்’ என்று அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதை வலீத் பின் முஸ்லிம் —> ஸுஹைர் பின் முஹம்மத் என்ற அறிவிப்பாளர்தொடர் வழியாகவே நாம் அறிகிறோம்.

அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “ஷாம் நாட்டின் ஸுஹைர் பின் முஹம்மத் என்பவர் வேறு. ஈராக் நாட்டின் ஸுஹைர் பின் முஹம்மத் என்பவர் வேறு. (இவ்வாறு அஹ்மத் அவர்கள் கூறிய காரணம்) ஷாம் நாட்டினர் இவரிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவித்துள்ளனர் என்பதால் ஆகும். அறிவிப்பாளர்கள் இவரின் பெயரை மாற்றியிருக்கலாம்.

மேலும், முஹம்மத் பின் இஸ்மாயில்-புகாரி இமாம் அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவியுற்றுள்ளேன்:

ஷாம் நாட்டைச் சேர்ந்த அறிவிப்பாளர்கள் ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவித்துள்ளனர். ஆனால், ஈராக் நாட்டைச் சேர்ந்த அறிவிப்பாளர்கள் அவரிடமிருந்து சரியான ஹதீஸுக்கு நெருக்கமானவற்றை அறிவித்துள்ளனர்.

(திர்மிதி: 3291)

بَابٌ: وَمِنْ سُورَةِ الرَّحْمَنِ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ وَاقِدٍ أَبُو مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ قَالَ:

خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ، فَقَرَأَ عَلَيْهِمْ سُورَةَ الرَّحْمَنِ مِنْ أَوَّلِهَا إِلَى آخِرِهَا فَسَكَتُوا، فَقَالَ: ” لَقَدْ قَرَأْتُهَا عَلَى الجِنِّ لَيْلَةَ الجِنِّ فَكَانُوا أَحْسَنَ مَرْدُودًا مِنْكُمْ، كُنْتُ كُلَّمَا أَتَيْتُ عَلَى قَوْلِهِ {فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ} [الرحمن: 13] قَالُوا: لَا بِشَيْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الحَمْدُ “

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الوَلِيدِ بْنِ مُسْلِمٍ عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ» قَالَ ابْنُ حَنْبَلٍ: ” كَأَنَّ زُهَيْرَ بْنَ مُحَمَّدٍ الَّذِي وَقَعَ بِالشَّامِ لَيْسَ هُوَ الَّذِي يُرْوَى عَنْهُ بِالعِرَاقِ، كَأَنَّهُ رَجُلٌ آخَرُ قَلَبُوا اسْمَهُ، يَعْنِي: لِمَا يَرْوُونَ عَنْهُ مِنَ المَنَاكِيرِ “.وَسَمِعْت مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ البُخَارِيَّ، يَقُولُ: «أَهْلُ الشَّامِ يَرْوُونَ عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ مَنَاكِيرَ، وَأَهْلُ العِرَاقِ يَرْوُونَ عَنْهُ أَحَادِيثَ مُقَارِبَةً»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3213.
Tirmidhi-Shamila-3291.
Tirmidhi-Alamiah-3213.
Tirmidhi-JawamiulKalim-3232.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அப்துர்ரஹ்மான் பின் வாகித்

3 . வலீத் பின் முஸ்லிம்

4 . ஸுஹைர் பின் முஹம்மத்

5 . முஹம்மத் பின் முன்கதிர்

6 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22494-அப்துர்ரஹ்மான் பின் வாகித் 


2 . மேலும் இதில் வரும் ராவீ-16227-ஸுஹைர் பின் முஹம்மத்-அபுல்முன்திர் என்பவர் பற்றி சிலர் நம்பகமானவர் என்றும் பலமானவர் என்றும் கூறியிருந்தாலும் வேறு சில அறிஞர்கள் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் ஹதீஸை அறிவிப்பதில் அதிகம் தவறிழைத்தவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவரிடமிருந்து ஷாம்வாசிகள் அறிவிப்பது முன்கரானவை; பஸராவாசிகள் அறிவிப்பது சரியானவை என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் இவர் ஷாமில் இருக்கும்போது தனது மனனத்திலிருந்து அறிவித்ததில் அதிகம் தவறு ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.
  • இதனடிப்படையில் இவரிடமிருந்து ஷாம்வாசிகள் அறிவிப்பது சரியானதல்ல என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.
  • இப்னு அப்தில்பர் அவர்கள் இவர் அனைவரிடமும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (என்றாலும் இது சரியானதல்ல)

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/639, தக்ரீபுத் தஹ்தீப்-2060…)

ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-47830-வலீத் பின் முஸ்லிம்,பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
ராவீ-44124-மர்வான் பின் முஹம்மத் ஆகியோர் ஷாம் நாட்டின் டமாஸ்கஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது பலவீனமடைகிறது.


سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها (5/ 184):
قال الحافظ عقبه: ” وكلهم ثقات إلا شيخه فقد ضعفه الجمهور “. قلت: يعني عمرو بن مالك البصري، لكنه عند ابن جرير مقرون بمحمد بن عباد بن موسى وهو الملقب بـ ” سندولا “، وهو صدوق يخطىء، فأحدهما يقوي الآخر، لكن يحيى بن سليم الطائفي وإن كان صدوقا من رجال الشيخين، فهو سيء الحفظ كما في ” التقريب ” لكن الحديث بمجموع الطريقين لا ينزل عن رتبة الحسن. والله أعلم.

இந்தச் செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற அறிஞர்கள் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்தியின் அடிப்படையில் இதை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர். அதாவது ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறியுள்ளனர்.

(நூல்: ஸஹீஹா-2150)

என்றாலும் இதில் வரும் அம்ர் பின் மாலிக் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் என்பதால் இவரின் அறிவிப்பையும், முஹம்மத் பின் அப்பாத் என்பவரின் அறிவிப்பையும் இணைத்து இந்தச் செய்தியை சரியானது என்று கூறமுடியாது.

இவ்வாறே ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் வழியாக வரும் முர்ஸலான செய்தியில் அபான் பின் அபூஅய்யாஷ் எனும் மிகப் பலவீனமானவர் இடம்பெற்றிருப்பதால் இதை ஹஸன் லிஃகைரிஹீ என்றும் கூறமுடியாது.

(நினைவாற்றல் குறித்து மட்டும் விமர்சிக்கப்பட்டவர்களின் செய்திகள் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் வரும்போது தான் இவ்வாறு ஹஸன் லிஃகைரிஹீ என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றோர் முடிவு செய்கின்றனர். நம்பகத்தன்மையில் விமர்சிக்கப்பட்டவர்களின் செய்திகள் எத்தனை வழிகளில் வந்தாலும் அவற்றுக்கு இந்த தரம் கூட இல்லை)


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> ஸுஹைர் பின் முஹம்மத் —> முஹம்மத் பின் முன்கதிர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: திர்மிதீ-3291, ஹாகிம்-3766, …


  • மர்வான் பின் முஹம்மத் —> ஸுஹைர் பின் முஹம்மத் —> முஹம்மத் பின் முன்கதிர் —> ஜாபிர் (ரலி)

பார்க்க: பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
தலாஇலுன் நுபுவ்வஹ்-559,

دلائل النبوة للبيهقي مخرجا (2/ 232)
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ دَاوُدَ الْعَلَوِيُّ رَحِمَهُ اللهُ قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْقَطَّانُ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَزْهَرِ أَحْمَدُ بْنُ الْأَزْهَرِ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: لَمَّا قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّحْمَنُ عَلَى النَّاسِ سَكَتُوا، فَلَمْ يَقُولُوا شَيْئًا، فَقَالَ: رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَلْجِنُّ كَانُوا أَحْسَنَ جَوَابًا مِنْكُمْ، لَمَّا قَرَأْتُ عَلَيْهِمْ {فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ} [الرحمن: 13] قَالُوا: وَلَا بِشَيْءٍ مِنَ آلَائِكَ رَبَّنَا نُكَذِّبُ “


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-5853.


3 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தஃப்ஸீருல் குர்ஆன்-இப்னு வஹ்ப்-169,

تفسير القرآن من الجامع لابن وهب (1/ 75):
169 – قَالَ: وَأَخْبَرَنِي شَبِيبُ بْنُ سَعِيدٍ، عَنْ أَبَانِ، ‌عَنِ ‌الْحَسَنِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ سُورَةَ الرَّحْمَنِ حَتَّى إِذَا أَتَى عَلَى آخِرِهَا، قَالَ: يَا مَعْشَرَ الإِنْسِ، مَا لِي أَرَى الْجِنَّ أَسْرَعَ إِجَابَةً مِنْكُمْ مَا قَرَأْتُ عَلَيْكُمْ: {فَبِأَيِّ آلاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ}، إِلا قَالُوا: ‌لا ‌بِأَيِّ ‌شيءٍ، ‌يَا ‌رَبِّ، ‌مِنْ ‌نِعْمَتِكَ ‌نُكَذِّبُ.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.