தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3450

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இடி சத்தத்தைக் கேட்கும்போது ஓத வேண்டியவை.

3450. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இடி, மின்னல்களின் சத்தத்தைக் கேட்டால், “அல்லாஹும்ம லா தக்துல்னா பி ஃகளபிக, வலா துஹ்லிக்னா பி அதாபிக, வ ஆஃபினா கப்ல தாலிக”

(பொருள்: அல்லாஹ்வே! உனது கோபத்தால் எங்களைக் கொன்றுவிடாதே; உனது தண்டனையால் எங்களை அழித்துவிடாதே; அதற்கு முன்பாகவே எங்களுக்குச் சுகமளிப்பாயாக!)

என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ‘ஃகரீப்-அரிதானது’ எனும் வகையைச் சேர்ந்ததாகும். இதை இந்த வகை அறிவிப்பாளர்தொடரிலேயே நாம் அறிகிறோம்.


بَاب مَا يَقُولُ إِذَا سَمِعَ الرَّعْدَ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنْ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ أَبِي مَطَرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَمِعَ صَوْتَ الرَّعْدِ وَالصَّوَاعِقِ، قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ، وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-3372.
Tirmidhi-Shamila-3450.
Tirmidhi-Alamiah-3372.
Tirmidhi-JawamiulKalim-3396.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா (3. பலமானவர்).

2 . குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ (2. மிகப் பலமானவர்).

3 . அப்துல்வாஹித் பின் ஸியாத்-அல்அப்தீ (3. பலமானவர்).

4 . ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் (5. சிறிது நடுத்தரமானவர்).

5 . அபூமதர் (9. அறியப்படாதவர்).

6 . ஸாலிம் பின் அப்துல்லாஹ்-அல்அதவீ (2. மிகப் பலமானவர்).

7 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (1. நபித்தோழர்).


الكنى والأسماء للدولابي (3/ 1023)
1792 – حَدَّثَنَا أَبُو خَالِدٍ يَزِيدُ بْنُ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَطَرٍ، أَنَّهُ سَمِعَ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَمِعَ الرَّعْدَ وَالصَّوَاعِقَ قَالَ: «اللَّهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلَا تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَلِكَ» ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ قَالَ: سَمِعْتُ أَبِي يَقُولُ: «أَبُو مَطَرٍ رَوَى عَنْهُ مِسْعَرٌ، وَلَمْ يَرْوِ عَنْهُ الثَّوْرِيُّ»

…


 

 

 


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூமதர் —> ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29217, அஹ்மத்-5763, அல்அதபுல் முஃப்ரத்-721, திர்மிதீ-3450, குப்ரா நஸாயீ-10697, 10698, …


 

திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா

இமாம் திர்மிதி

முழுப்பெயர்: முகம்மது இப்னு ஈஸா இப்னு ஸுரது இப்னு மூஸா இப்னுல் லிகாகுஸ்ஸில்மிய்யி (திர்மிதி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஈஸா அத்திர்மிதி அல்லரீருல் ஹாஃபிழ்

இயற்பெயர்: முகம்மது

தந்தைபெயர்: ஈஸா

பிறந்த ஊர்: ஈரானின் வட எல்லையில் உள்ள ஜுஹுன் எனும் ஆற்றோரத்தில் அமைந்திருந்த திர்மிதி எனும் ஊரில் இவர் பிறந்தார். எனவே தான் இவர் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 210ல் பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஹிஜாஸ், பஸரா,  புகாரா, நைஸாபூர், மக்கா, மதினா, வாஸித், ரயீ போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் சென்றுள்ளார்.

ஜாமிவுத்திர்மீதி,

அல்இலலுல்கபீர் (அறிவிப்பாளர்களின் குறைகள் தொடர்பானது),

ஷமாயில்,

அஸ்மாவுஸ் ஸஹாபா  (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

கிதாபுஸ் ஸுஹுத் போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்புகாரி, இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு முன்திரில் பாஹிலியி அஸ்ஸன்ஆனி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா இப்னு ஸயீத், மஹ்மூத் இப்னு கைலான், ஸிபாஃ இப்னு நல்ர் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அஸ்ஸமர்கந்தி, அபூஹாமீது அஹ்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல் மரூஸி, அஹ்மத் இப்னு யூசுப் அன்நசபீ, அஸத் இப்னு ஹம்தவைஹி அன்நசபீ, ஹுசைன் இப்னு யூசுப் அல்பர்பரீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 279ல் ரஜப் மாதம் பிறை 13 திங்கள் இரவில் தமது சொந்த ஊரில் இமாம் திர்மிதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு 69 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ

قتيبة بن سعيد

இறப்பு: ஹிஜ்ரி 240

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: யஹ்யா அல்லது அலீ

தந்தை பெயர்: ஸயீத்

வம்சம்: தகஃபீ

புனைப்பெயர்: அபூரஜாஃ

ஊர் பெயர்: பக்லான்

பயணித்த ஊர்கள்: புல்க், பக்லான், பக்தாத்

பிறப்பு: ஹிஜ்ரி 150

இறப்பு: ஹிஜ்ரி 240

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

குதைபா பின் ஸயீத் ரஹ் அவர்கள் அபூரஜாஃ என்ற குன்யாவுடன் அறியப்பட்டவர். இவர் ஹிஜ்ரி 150ல் பிறந்து ஹிஜ்ரி 240ல் மரணமடைந்தார். இமாம் மாலிக், லைஸ் பின் ஸஅத், ஹம்மாத் பின் ஸைத், ஸுஃப்யான் பின் உயைனா போன்ற பல அறிஞர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ, அஹ்மத் பின் ஹன்பல் போன்ற இமாம்கள் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம், நஸாயீ போன்ற அறிஞர்கள் இவரை மிகப் பலமானவர் என்று கூறியுள்ளனர். இவர் ஹதீஸ்களைப் பாதுகாப்பதில் மிக உறுதியானவராகவும், சுன்னாவின் மீது நிலைத்தவராகவும் இருந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மாலிக் இமாம், லைஸ் பின் ஸஅத், அப்துல்லாஹ் பின் லஹீஆ, ஹம்மாத் பின் ஸைத், ஸுஃப்யான் பின் உயைனா, ஷரீக் பின் அப்துல்லாஹ் அன்நக்ஈ, கலஃப் பின் கலீஃபா, பக்ர் பின் முத்ர், ஜரீர் பின் அப்துல்ஹமீத் அர்ராஸீ, அபூஅவானா அல்வத்தாஹ் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், யஸீத் பின் ஸுரைஃ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஸ்லிம் இமாம், அபூதாவூத், இமாம் திர்மிதீ, இமாம் நஸாயீ, அஹ்மத் பின் ஹன்பல், அபூபக்ர் பின் அபூஷைபா, முஹம்மத் பின் யஹ்யா அத்தஹ்லீ, அலீ பின் அல்மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூ ஹாதிம் அர்ராஸீ, அபூ ஸுர்ஆ அர்ராஸீ

வேறு பெயர்கள்: குதைபா பின் ஸயீத், அபூரஜாஃ


ஆதாரம்: muslimscholars.info (30367) · Should verify

அப்துல்வாஹித் பின் ஸியாத்-அல்அப்தீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஹஜ்ஜாஜ் பின் அர்தாத்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அபூமதர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸாலிம் பின் அப்துல்லாஹ்-அல்அதவீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.