தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3537

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் அடியாரின் உயிர் அவருடைய தொண்டைக்குழிக்கு வந்து அவருக்கு மரண நிலை ஏற்படாதிருக்கும் வரை அவருடைய தவ்பாவை- பாவமன்னிப்புக் கோரலை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

மேலும் இந்தச் செய்தி மற்றொரு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

(திர்மிதி: 3537)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَيَّاشٍ الحِمْصِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ العَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنُ ثَابِتِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِيهِ، عَنْ مَكْحُولٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَهُ بِمَعْنَاهُ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3537.
Tirmidhi-Alamiah-3460.
Tirmidhi-JawamiulKalim-3488.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . இப்ராஹீம் பின் யஃகூப்

3 . அலீ பின் அய்யாஷ் அல்ஹிம்ஸீ

4 . அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான்

5 . ஸாபித் பின் ஸவ்பான்

6 . மக்ஹூல்

7 . ஜுபைர் பின் நுஃபைர்

8 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் பஷ்ஷார்

3 . அப்துல்மலிக் பின் அம்ர்

4 . அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான்

5 . ஸாபித் பின் ஸவ்பான்

6 . மக்ஹூல்

7 . ஜுபைர் பின் நுஃபைர்

8 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)


  • 1 . இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களிலும் வரும் ராவீ-21626-அப்துர்ரஹ்மான் பின் ஸாபித் பின் ஸவ்பான் அவர்களைப் பற்றி சிலர் பாராட்டியும் உள்ளனர். சிலர் விமர்சித்தும் உள்ளனர்.

1 . இவரைப் பற்றி பாராட்டியவர்கள்:

  • துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ராஸீ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    (இப்னு ஹிப்பான்), அப்துர்ரஹ்மான் பின் இப்ராஹீம் ஆகியோர் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
    இறப்பு ஹிஜ்ரி 262
    வயது: 80
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    ஸாலிஹ் பின் முஹம்மத், அபூஸுர்ஆ, இப்னு ஷாஹீன்,பிறப்பு ஹிஜ்ரி 298
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 87
    அபூபக்ர் கதீப் பக்தாதீ ஆகியோர் இவரிடம் குறையில்லை-சுமாரானவர், ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவர் நல்லமனிதர்; இவர் துஆ செய்தால் அல்லாஹ்வால் ஏற்கப்படும் நிலையில் உள்ள மனிதர் என்று கூறியுள்ளார்.
  • (அபூஸுர்ஆ அவர்கள், இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்று கூறியதாக வந்துள்ள தகவல் தவறானது. அஸல் பிரதிகளில் இந்தக் கருத்து இல்லை)

2 . இவரைப் பற்றிய விமர்சனங்கள்:

கத்ரிய்யா, காரிஜிய்யா கொள்கையுடையவர்.

  • கத்ரிய்யா, காரிஜிய்யா கொள்கையுடைவர்களின் கொள்கையான அநியாயக்கார ஆட்சியாளர்கள் பின்னால் தொழக்கூடாது என்பதின்படி இவர் நடந்துள்ளார். இவர் கடமையான தொழுகைகளிலும், ஜுமுஆவிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்ததால் இவரின் தந்தையின் நண்பரான அவ்ஸாயீ இமாம் அவர்கள், இவருக்கு உபதேசம் செய்து எழுதிய கடிதத்தின் மூலம் இது தெரிகிறது.

(நூல்: அல்மஃரிஃபது வத்தாரீக்-2/391, 392).

  • எனவே தான் இவர் கத்ரிய்யா கொள்கையுடையவர் என்று துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஸாலிஹ் பின் முஹம்மத் ஆகியோர் கூறியுள்ளனர்.
  • (அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவர் கத்ரிய்யா கொள்கையுடையவர் என்ற கருத்தை மறுத்துள்ளார்)

(என்றாலும் பித்அத் கொள்கையுடையவர்கள் நம்பகமானவராக இருந்து அவர் பித்அத்திற்கு அழைக்காதவர் என்றால் அவரின் செய்திகளை ஏற்கலாம் என்பதே யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
கதீப் பக்தாதீ போன்ற பல அறிஞர்களின் கருத்தாக உள்ளது. அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 65
அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
அவர்கள் ஆரம்பத்தில் இதை ஏற்காதவராக இருந்தாலும் கடைசி காலத்தில் இந்த வகையினரிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். எனவே தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் அவர்களும் இது போன்ற பித்அத் கொள்கையுடையவர்கள் இடம்பெறும் ஹதீஸ்களையும் அறிவித்துள்ளார்.)

கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர்.

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியிருப்பதுடன் கடைசி காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்றும் இவரின் செய்திகள் சரியானவையே என்றும் கூறியுள்ளார். (எனவே இதன் மூலம் இவர் மூளை குழம்பியபின் ஹதீஸை அறிவிக்கவில்லை என்று தெரிகிறது என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்).

பலவீனமானவர்.

  • இமாம் இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்கள், இவரை சுமாரானவர் என்று கூறியிருப்பதுடன் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இவ்வாறே அப்துர்ரஹ்மான் பின் யூஸுஃப் பின் கிராஷ், அபூஸுர்ஆ ஆகியோரும் கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியதாக உஸ்மான் தாரிமீ அவர்களும்; இவர் ஒரு பொருட்டே அல்ல என்று கூறியதாக இப்னு அபூகைஸமா அவர்களும் அறிவித்துள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலவீனமானவர் என்றாலும் இவர் நல்ல மனிதர் இவரின் செய்திகளை எழுதிக்கொள்லலாம் என்று கூறியதாக முஆவியா பின் ஸாலிஹ் கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார்.

(என்றாலும் அப்பாஸ் பின் முஹம்மத் அத்தூரீ அவர்கள், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்கள் இவரை சுமாரானவர் என்று கூறியதாக அறிவித்துள்ளார் என்பதால் அப்பாஸ் அத்தூரீ அவர்களின் கருத்துக்கே முதலிடம் கொடுக்கப்படும் என்பதின் படி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அவர்களின் கருத்து இவர் சுமாரானவர் என்பதாகும்)


  • நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    ஆகியோரும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். (அறிவிப்பாளகளை விமர்சிப்பதில் இவர்கள் கடினம் கொண்டவர்கள் என்பதால் மற்ற மூத்த அறிஞர்களின் கருத்திற்கே முதலிடம் தரவேண்டும்.)
  • இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் இவர் பலமானவர் அல்ல என்றும், இவரின் ஹதீஸ்களை முன்கர் என்றும் கூறியுள்ளார்.

என்றாலும் இவரின் மாணவர்களான அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
ஆகியோர் இந்தக் கருத்தை ஏற்கவில்லை. இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களின் கருத்திற்கே முன்னுரிமை தந்துள்ளனர்.

யஃகூப் பின் ஷைபா பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அவர்கள், இவர் விசயத்தில் நம்முடைய தோழர்கள் (ஆசிரியர்கள்) கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள் இவர் விசயத்தில் நல்லெண்ணம் கொண்டுள்ளார். எனவே இவர் உண்மையாளர்; இவர் விசயத்தில் குறை இல்லை (சுமாரானவர்) என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/494)


  • இவர் தன் தந்தையிடமிருந்து மக்ஹூல் வழியாக அறிவிக்கும் செய்திகள் முன்கரானவை என்று ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார். (இந்தக் கருத்து ஏற்கத்தக்கதே)

(ஆதார நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/219 , அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-4/460, தாரீகுல் இஸ்லாம்-4/433, ஸியரு அஃலாமின் நுபலாஃ-7/313, அல்காஷிஃப்-3/243, தஹ்தீபுல் கமால்-17/12, தஹ்தீபுத் தஹ்தீப்-2/493, 494)


  • 2 . மேலும் இதில் வரும் ராவீ-45233-மக்ஹுல் அவர்கள், அதிகம் முர்ஸலாக அதாவது தான் சந்திக்காதவர்களிடமிருந்து அறிவிப்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இவ்வாறே தத்லீஸ் செய்பவர் என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.

(நூல்கள்: துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/515, … )

இந்தச் செய்தியில் ஜுபைர் பின் நுஃபைர் அவர்களிடமிருந்து நேரடியாக செவியேற்றதைக் குறிப்பிடவில்லை.


3 . மேலும் இதில் வரும் ராவீ-10083-ஜுபைர் பின் நுஃபைர் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்தவர். என்றாலும் அவர்களைச் சந்திக்கவில்லை. இவர் மூத்த தாபிஈன்களில் ஒருவர் என அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள், நபித்தோழர்களிடமிருந்து அறிவிக்கும் மூத்த தாபிஈன்களில் மூன்று பேரே மிகவும் சிறந்த முறையில் அறிவிப்பவர்கள் என்று கூறியுள்ளார். அவர்கள்:

1 . கைஸ் பின் அபூஹாஸிம்.
2 . அபூஉஸ்மான் அன்னஹ்தீ.
3 . ஜுபைர் பின் நுஃபைர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-4/509, தஹ்தீபுத் தஹ்தீப்-1/292, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/57 )

ஜுபைர் அவர்கள் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்தியில் ஸிமாஃ நேரடியாக கேட்டதாக குறிப்பிடவில்லை என்று சிலர் கூறியுள்ளனர்.

(நூல்: அனீஸுஸ் ஸாரீ-4/741)

மேற்கண்ட தகவல்களிலிருந்து இந்தச் செய்தியில் விமர்சனம் உள்ளது என்று தெரிகிறது.


  • மேற்கண்ட செய்தி வேறு சில பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்திருப்பதால் சிலர் இந்த செய்தியை ஹஸன் (லிஃகைரிஹீ) என்று கூறியுள்ளனர். வேறுசிலர் ஸஹீஹ் (லிஃகைரிஹீ) என்று கூறியுள்ளனர்…

  • மரணத்திற்கு முன்பு பாவமன்னிப்பு கேட்டுவிட வேண்டும். மரண நேரத்தில் பாவமன்னிப்பு ஏற்கப்படாது என்பதற்கு வேறு ஆதாரங்கள் உள்ளன.

தீமைகளைச் செய்து விட்டு மரணம் நெருங்கும் வேளையில் “நான் இப்போது மன்னிப்புக் கேட்கிறேன்” எனக் கூறுவோருக்கும், (ஏகஇறைவனை) மறுப்போராகவே மரணித்தோருக்கும் மன்னிப்பு இல்லை. அவர்களுக்காகவே துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம். (அல்குர்ஆன்: 4:18)

“இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும்போது “இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று கூறினான்.

இப்போதுதானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். (அல்குர்ஆன்: 10:90-91)


1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-6160 , 6408 , இப்னு மாஜா-4253 , திர்மிதீ-3537 , இப்னு ஹிப்பான்-628 , ஹாகிம்-7659 ,


2 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


3 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


5 . உபாதா பின் ஸாமித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

6 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

7 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.