தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-13048

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியாரின் உள்ளம் சரியாகும் வரை, அவருடைய ஈமான் சரியாகாது. அவருடைய நாவு சீராகும் வரை, அவருடைய உள்ளம் சரியாகாது.

எவருடைய அண்டைவீட்டார் அவரின் நாசவேலையிலிருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதர் சொர்க்கம் செல்ல முடியாது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 13048)

حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: أَخْبَرَنِي عَلِيُّ بْنُ مَسْعَدَةَ الْبَاهِلِيُّ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَسْتَقِيمُ إِيمَانُ عَبْدٍ حَتَّى يَسْتَقِيمَ قَلْبُهُ، وَلَا يَسْتَقِيمُ قَلْبُهُ حَتَّى يَسْتَقِيمَ لِسَانُهُ، وَلَا يَدْخُلُ رَجُلٌ الْجَنَّةَ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-13048.
Musnad-Ahmad-Alamiah-12575.
Musnad-Ahmad-JawamiulKalim-12799.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-30774-அலீ பின் மஸ்அதா அல்பாஹிலீ என்பவர் இடம்பெறுகிறார்.
  • இவரைப் பற்றி விமர்சனம் உள்ளது என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களும்,
  • இவர் பலவீனமானவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள் கூறியதாக ஆஜுரீ அவர்களும்,
  • இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்களும்,
  • இவரது ஹதீஸ்கள் மஹ்ஃபூல் அல்ல என்று இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்களும் கூறியுள்ளனர்.
  • இவரை பலவீனமானவர் பட்டியலில் உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள் சேர்த்துள்ளார். பலமானவர்களுக்கு ஏற்ப இவர் அறிவிப்பவை தவிர மற்ற ஹதீஸ்கள் ஆதாரமாக ஏற்கப்படாது என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரிடம் சிறிது பலவீனம் உள்ளது என்ற கருத்தில் கூறியுள்ளார்.

  • இவர் பலமானவர் என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 71
    அவர்களும்,
  • இவர் ஸாலிஹ்-ஆதாரம் கொள்ளத்தக்கவர்; (விடப்பட்டவர் அல்ல; இவர் முன்கராக சில செய்திகளை அறிவித்திருப்பது இவரிடம் தவறுதலாக ஏற்பட்டது), பஸராவாசிகளிடமிருந்து இவர் அறிவித்தால் ஏற்கலாம் என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களும் கூறியுள்ளனர்.
  • இவரிடம் தவறேதும் இல்லை-இவர் சுமாரானவர் என்ற கருத்தில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவரை ஸதூக்-நம்பகமானவர் சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்,இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். பாகம்: 7, பக்: 381)

எனவே இவர்கள் இவரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ளனர் என்று தெரிகிறது.

இவர் பற்றிய முடிவு இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவையாகும். (அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சிலர் இவரை ஹஸன் தரத்தில் கூறியுள்ளனர்). கதாதா அவர்களின் மாணவர்களில் இவர் மட்டுமே மேற்கண்ட வார்த்தையில் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


மேலும் பார்க்க: அஹ்மத்-12561 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.