அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் காலையில், “அல்லாஹும்ம இன்னீ அஸ்பஹ்து, உஷ்ஹிதுக, வ உஷ்ஹிது ஹமலத அர்ஷிக்க, வ மலாஇகதிக, வ ஜமீஅ கல்கிக, அன்னக அன்தல்லாஹு, லா இலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, வ அன்ன முஹம்மதன் அப்துக வ ரசூலுக்”
(பொருள்: ‘இறைவா! நான் காலைப் பொழுதை அடைந்துள்ளேன். உன்னையும், உனது அர்ஷைச் சுமப்பவர்களையும், உனது மலக்குகளையும், உனது படைப்புகள் அனைவரையும் சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நீயே அல்லாஹ், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை, நீ தனித்தவன், உனக்கு நிகரானவர் யாருமில்லை; மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் உனது அடியாரும் தூதரும் ஆவார்கள்’)
என்று ஒருவர் கூறினால் அவர் அந்த நாளில் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். அவர் மாலை நேரத்தில் இதைக் கூறினால், அந்த இரவில் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(அபூதாவூத்: 5078)
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ مُسْلِمٍ يَعْنِي ابْنَ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ، وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، إِلَّا غُفِرَ لَهُ مَا أَصَابَ فِي يَوْمِهِ ذَلِكَ مِنْ ذَنْبٍ، وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي غُفِرَ لَهُ مَا أَصَابَ تِلْكَ اللَّيْلَةَ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5078.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- பகிய்யது பின் வலீத் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஸியாத் —> அனஸ் (ரலி)
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-1201, அபூதாவூத்-5078, திர்மிதீ-3501, குப்ரா நஸாயீ-9753, 9754, அல்முஃஜமுல் அவ்ஸத்-7205, …
- மக்ஹூல் —> அனஸ் (ரலி)
பார்க்க: அபூதாவூத்-5069, …
2 . ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-6062.
3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
சமீப விமர்சனங்கள்