தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-7333

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அல்லாஹ் தன் பேரருளால் மறுமை நாளின் நீண்ட (விசாரணைக் காலத்தை) முஃமின்களுக்கு எளிதாக்குதல். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கு அது ஒரு சிறிய பகுதியாக மட்டுமே தோன்றும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமான ஒரு நாளின் அரைப் பொழுது, அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வின் முன்னால் மக்கள் (விசாரணைக்காக) நிற்பார்கள். ஆனால், இறைநம்பிக்கையாளர்களுக்கு அந்த நாள், சூரியன் மறைவதற்காகக் கீழ்நோக்கிச் சென்று மறையும் நேரம் போல் எளிதாகிவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னு ஹிப்பான்: 7333)

ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ اللَّهَ جَلَّ وَعَلَا بِتَفَضُّلِهِ يُهَوِّنُ طُولَ يَوْمِ الْقِيَامَةِ عَلَى الْمُؤْمِنِينَ حَتَّى لَا يُحِسُّوا مِنْهُ إِلَّا بِشَيْءٍ يَسِيرٍ

أَخْبَرَنَا ابْنُ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ يُهَوِّنُ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-7333.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-7492.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இமாம்-அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
பின் ஹிப்பான்

2 . அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் ஸல்ம்-இப்னு ஸல்ம்

3 . அப்துர்ரஹ்மான் பின் இப்ராஹீம்-துஹைம்

4 . வலீத் பின் முஸ்லிம்-அபுல்அப்பாஸ்

5 . அப்துர்ரஹ்மான் பின் அம்ர்-அவ்ஸாஈ இமாம்

6 . யஹ்யா பின் அபூகஸீர்

7 . அபூஸலமா

8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


மேலும் பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-6025.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.