தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-21457

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அய்லா கிளையைச் சேர்ந்தவரான, ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைக் கடந்து சென்றபோது, அவர்கள் (என்னைப் பற்றி), “எவ்வளவு சிறந்த வாலிபர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களுடன் இருந்தவர்களில் ஒருவர் என்னைப் பின்தொடர்ந்து வந்து, “என் சகோதரரின் மகனே! அல்லாஹ்விடம் எனக்காக நல்லதை துஆ செய்யுங்கள்” என்று கூறினார்.

நான், “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக! நீங்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நான் நபி (ஸல்) அவர்களின் தோழர் அபூதர் (ரலி)” என்று பதிலளித்தார். நான், “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! நான் உங்களுக்கு துஆ செய்வதை விட, நீங்கள்தான் எனக்கு துஆ செய்ய மிகவும் தகுதியானவர்” என்று கூறினேன்.

அப்போது அபூதர் (ரலி) அவர்கள், “என் சகோதரரின் மகனே! நான் சற்றுமுன் நீங்கள் என்னைக் கடந்து சென்றபோது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், ‘எவ்வளவு சிறந்த வாலிபர்!’ என்று கூறியதை நான் கேட்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக அல்லாஹ் உண்மையை உமரின் நாவில் வைத்துள்ளான்; அவர் உண்மை பேசுவார்’ என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

(முஸ்னது அஹ்மத்: 21457)

حَدَّثَنَا يَزِيدُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، رَجُلٍ مِنْ أَيْلَةَ، قَالَ:

مَرَرْتُ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ، فَقَالَ: نِعْمَ الْغُلَامُ. فَاتَّبَعَنِي رَجُلٌ مِمَّنْ كَانَ عِنْدَهُ، فَقَالَ: يَا ابْنَ أَخِي، ادْعُ اللَّهَ لِي بِخَيْرٍ. قَالَ: قُلْتُ: وَمَنْ أَنْتَ رَحِمَكَ اللَّهُ؟ قَالَ: أَنَا أَبُو ذَرٍّ، صَاحِبُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقُلْتُ: غَفَرَ اللَّهُ لَكَ، أَنْتَ أَحَقُّ أَنْ تَدْعُوَ لِي مِنِّي لَكَ قَالَ: يَا ابْنَ أَخِي، إِنِّي سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ حِينَ مَرَرْتُ بِهِ آنِفًا يَقُولُ: نِعْمَ الْغُلَامُ، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ يَقُولُ بِهِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-21457.
Musnad-Ahmad-Alamiah-20484.
Musnad-Ahmad-JawamiulKalim-20931.




இந்தச் செய்தியை சிலர் சுருக்கமாகவும், வேறு சிலர் மேற்கண்ட நிகழ்வை கூறி விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


ஆய்வின் சுருக்கம்:

இந்தச் செய்தி அபூதர் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி), ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) ஆகியோர் வழியாக ஹஸன் தர அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.

அபூதர் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகளை சிலர் பலமான செய்தி என்றும் முடிவு செய்கின்றனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

2 . யஸீத் பின் ஹாரூன்

3 . முஹம்மத் பின் இஸ்ஹாக்

4 . மக்ஹூல்

5 . ஃகுளைஃப் பின் ஹாரிஸ் (ரலி)

6 . அபூதர் (ரலி)


1 . இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36907-முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யஸார் பற்றி சிலர் விமர்சித்திருந்தாலும் இவர் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث ஆவார்.

பார்க்க: முஹம்மத் பின் இஸ்ஹாக்.

இவர் தத்லீஸ் செய்பவர் என்ற விமர்சனம் உள்ளது. இந்தச் செய்தியில் தனது ஆசிரியர் மக்ஹூல் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார்.

(பார்க்க: அல்மஃரிஃபது வத்தாரீக்-1/461)


2 . மேலும் இதில் வரும் ராவீ-33220-ஃகுளைஃப் பின் ஹாரிஸ் அவர்களை சிலர் நபித்தோழர் என்றும், வேறு சிலர் தாபிஈ என்றும் கூறியுள்ளனர்.

இவரைப் பற்றிய ஆய்வில் இவர் சிறிய வயது நபித்தோழர் என்பதே சரியானதாகும்.

(நூல்: அர்ருவாதுல் முக்தலஃபு ஃபீ ஸுஹ்பதிஹிம்-114, 10/1168)


علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (6/ 258)
1116- وَسُئِلَ عَنْ حَدِيثِ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ وَضَعَ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ، وَيَقُولُ بِهِ.
فَقَالَ: يَرْوِيهِ مَكْحُولٌ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ مَكْحُولٍ، عَنْ غُضَيْفٍ، عَنْ أَبِي ذَرٍّ.
وَرَوَاهُ أَبُو خَالِدٍ الْأَحْمَرُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، وَمُحَمَّدُ بْنُ عَجْلَانَ، وَهِشَامُ بْنُ الْغَازِ، عَنْ مَكْحُولٍ، عَنْ غُضَيْفٍ، عَنْ أَبِي ذَرٍّ.

وَأَحْسَبُ أبَا خَالِدٍ حَمَلَ حَدِيثَ هِشَامِ بْنِ الْغَازِ، وَابْنَ عَجْلَانَ عَلَى حَدِيثِ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، فَجَوَّدَ إِسْنَادَهُ، لِأَنَّ غَيْرَهُ يَرْوِيهِ عَنْ هِشَامِ بْنِ الْغَازِ، وَعَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ، عَنْ مَكْحُولٍ مُرْسَلًا، عَنْ أَبِي ذَرٍّ.
وَكَذَلِكَ رَوَاهُ عُقَيْلُ بْنُ خَالِدٍ، وَابْنُ أَبِي حُسَيْنٍ الْمَكِّيُّ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي ذَرٍّ مُرْسَلًا، وَقَالَ وَكِيعٌ: عَنْ هِشَامِ بْنِ الْغَازِ، عَنْ مَكْحُولٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمْ يَذْكُرْ أبَا ذَرٍّ.
وَرَوَاهُ بَرْدُ بْنُ سِنَانٍ، عَنْ عُبَادَةَ بْنِ نُسَيٍّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي ذَرٍّ، وَرَوَى مِسْعَرٌ، عَنْ وَبْرَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ غُضَيْفٍ، عَنْ أَبِي ذَرٍّ.
وَلَا يَثْبُتُ عَنْ مِسْعَرٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، أَقَامَ إِسْنَادَهُ عَنْ مَكْحُولٍ.

இந்தக் கருத்தில் மக்ஹூல் வழியாக வரும் அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களே முத்தஸிலான-சரியான அறிவிப்பாளர்தொடரைக் கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1116)


1 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மத் பின் இஸ்ஹாக் —> மக்ஹூல் —> ஃகுளைஃப் (ரலி) —> அபூதர் (ரலி)

பார்க்க: … முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- 31968, அஹ்மத்-21457, 21542, இப்னு மாஜா-108, அபூதாவூத்-2962, அல்மஃரிஃபது வத்தாரீக்-1/461, …


  • அல்மஃரிஃபது வத்தாரீக்-1/461.

المعرفة والتاريخ – ت العمري – ط العراق (1/ 461):
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي مَكْحُولٌ عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ:سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: إِنَّ اللَّهَ ‌تَعَالَى ‌وَضَعَ ‌الْحَقَّ ‌عَلَى ‌لِسَانِ ‌عُمَرَ ‌يَقُولُ ‌بِهِ


உபாதா பின் நுஸை, —> ஃகுளைஃப் —> அபூதர் (ரலி)

பார்க்க: அஹ்மத்-21295, …


2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-5145.


3 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


4 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-32011,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.