தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-2195

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

உயர்ந்தோனான அல்லாஹ்வை கனவில் பார்த்தல்.

அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் … அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் (நேரடியாக) செவியுற்றேன்:

நான், என் இறைவனை மிக அழகான வடிவில் கண்டேன். அப்போது அவன், “‘(வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினர் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு நான், “என் இறைவா! நீயே மிக அறிந்தவன்” என்று கூறினேன்.

உடனே அவன் தன்னுடைய கரத்தை என் இரு தோள்களுக்கிடையே வைத்தான். அதன் குளிர்ச்சியை என் இரு நெஞ்சங்களுக்கிடையே உணர்ந்தேன். அதன் மூலம் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை நான் அறிந்தேன்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள், “உறுதியான நம்பிக்கையாளராக இப்ராஹீம் ஆவதற்காக அவருக்கு வானங்கள் மற்றும் பூமியின் சான்றுகளை இவ்வாறே காட்டினோம்.” (அல்குர்ஆன்: 6:75) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

(ஸுனன் தாரிமீ: 2195)

بَابٌ فِي رُؤْيَةِ الرَّبِّ تَعَالَى فِي النَّوْمِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنِي ابْنُ جَابِرٍ، عَنْ خَالِدِ بْنِ اللَّجْلَاجِ، وَسَأَلَهُ، مَكْحُولٌ أَنْ يُحَدِّثَهُ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَائِشٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«رَأَيْتُ رَبِّي فِي أَحْسَنِ صُورَةٍ» قَالَ: فِيمَ يَخْتَصِمُ الْمَلَأُ الْأَعْلَى؟ فَقُلْتُ: «أَنْتَ أَعْلَمُ يَا رَبِّ»، قَالَ: ” فَوَضَعَ كَفَّهُ بَيْنَ كَتِفَيَّ فَوَجَدْتُ بَرْدَهَا بَيْنَ ثَدْيَيَّ، فَعَلِمْتُ مَا فِي السَّمَوَاتِ وَالْأَرْضِ، وَتَلَا {وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ}


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-2056.
Darimi-Shamila-2195.
Darimi-Alamiah-2056.
Darimi-JawamiulKalim-2085.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தாரிமி இமாம்

2 . முஹம்மத் பின் முபாரக்

3 . வலீத் பின் முஸ்லிம்

4 . அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர்-(இப்னு ஜாபிர்)

5 . காலித் பின் லஜ்லாஜ்

6 . அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ்


இந்தச் செய்தியை இந்த அறிவிப்பாளர்தொடரில் அறிவிப்பவர்களில் சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


1 . இந்தச் செய்தியை இப்னு ஜாபிர் அவர்களிடமிருந்து வலீத் பின் முஸ்லிம் மட்டும் தனித்து அறிவித்துள்ளார் என்பதாலும், அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் இதை மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் யுகாமிர் —> முஆத் பின் ஜபல் (ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருப்பதாலும் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
திர்மிதீ, இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
போன்ற பல அறிஞர்கள் இதை தவறு என்று விமர்சித்துள்ளனர்.


2 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், வேறு சிலரும் இவ்வாறு இப்னு ஜாபிர் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்…

1 . ஹம்மாத் பின் மாலிக்

 


2 . வலீத் பின் மஸ்யத்

تهذيب الكمال في أسماء الرجال (31/ 84):
وَقَال النَّسَائي: ‌الْوَلِيد ‌بْن ‌مزيد ‌أحب إلينا فِي الأَوزاعِيّ من الْوَلِيد بْن مسلم، ‌لا ‌يخطئ ‌ولا ‌يدلس.


3 . உமாரா பின் பிஷ்ர்

 


4 . முஹம்மத் பின் ஷுஐப்

பார்க்க: ஹாகிம்-1912.


5 . அவ்ஸாஈ


3 . இப்னு ஜாபிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸதகா பின் காலித், பிஷ்ர் பின் பக்ர் ஆகியோர் ஸிமாஃவை குறிப்பிடும் விசயத்தில் முரண்பட்டு அறிவித்துள்ளனர்.

1 . ஸதகா பின் காலித்

2 . பிஷ்ர் பின் பக்ர்

பார்க்க: திர்மிதீ-3235.

இவற்றில் ஸிமாஃவை குறிப்பிடாத பிஷ்ர் பின் பக்ர் அவர்களின் செய்திக்கு திர்மிதீ இமாம் முன்னுரிமை கொடுத்துள்ளார்.


4 . ஸுஹைர் பின் முஹம்மத், இதை யஸீத் பின் யஸீத் பின் ஜாபிர் —> காலித் பின் லஜ்லாஜ் —> அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் —> ஒரு நபித்தோழர் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க:

ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து பஸராவாசிகள் அறிவிப்பது சரியானவை என்றிருந்தாலும் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்ற விமர்சனம் உள்ளது.


5 . காலித் பின் லஜ்லாஜ் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் இதை பலவாறு அறிவித்துள்ளனர்…

1 . கதாதா அவர்கள் இதை அபூகிலாபா —> காலித் பின் லஜ்லாஜ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-26)

2 . அய்யூப் ஸக்தானீ அவர்களும் இவ்வாறு அறிவித்துள்ளார்.

அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இதை விமர்சித்துள்ளனர்.

3 . மஃமர் அவர்கள், அய்யூப் ஸக்தானீ —> பூகிலாபா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இதில் காலித் என்பவரை குறிப்பிடவில்லை.


6 . யஹ்யா பின் அபூகஸீர் அவர்களின் அறிவிப்புகள்:

யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஜஹ்ளம் பின் அப்துல்லாஹ், யஹ்யா பின் அபூகஸீர் —> ஸைத் பின் ஸல்லாம் —> மம்தூர் —> அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் —> மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் யுகாமிர் —> முஆத் பின் ஜபல் (ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

(பார்க்க: திர்மிதீ-3235)

இப்னு ஜாபிர் அவர்களின் செய்தியை விட இதற்கே புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
திர்மிதீ, இப்னு குஸைமா பிறப்பு ஹிஜ்ரி 223
இறப்பு ஹிஜ்ரி 311
வயது: 88
ஆகியோர் முன்னுரிமை தந்துள்ளனர்.

யஹ்யா பின் அபூகஸீர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மூஸா பின் கலஃப் அவர்கள் யஹ்யா பின் அபூகஸீர் —> ஸைத் பின் ஸல்லாம் —> மம்தூர் —> அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸக்ஸகீ —> மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் யுகாமிர் —> முஆத் பின் ஜபல் (ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். 

இந்த வகை அறிவிப்பாளர்தொடருக்கு அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் முன்னுரிமை தந்துள்ளனர்.


الإصابة في تمييز الصحابة (4/ 273):
… قلت: فإن كان الأمر كذلك فإنما روى هذا الحديث عن مالك بن عامر أبو عبد الرحمن السّكسكي لا عبد الرحمن بن عائش، ويكون للحديث سندان: ابن جابر عن خالد، عن عبد الرحمن بن عائش، ويحيى عن زيد، عن أبي سلام، عن أبي عبد الرحمن، عن مالك، عن معاذ.
ويقوّي ذلك اختلاف السياق بين الروايتين …

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், யஹ்யா பின் கஸீர் வழியாக வரும் செய்தி பற்றி கூறும் போது இதற்கு இரு அறிவிப்பாளர்தொடர் உள்ளன.

1 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
பின் யுகாமிர் அவர்களிடமிருந்து அறிவித்தவர் அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸக்ஸகீ என்பவர் ஆவார். இது ஒரு அறிவிப்பாளர்தொடராகும். அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் அல்ல.

2 . இப்னு ஜாபிர் வழியாக வரும் செய்தியில் தான் அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் இடம்பெற்றுள்ளார்.

எனவே முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்தியும், அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் அறிவிக்கும் மேற்கண்ட தாரிமீ செய்தியும் வெவ்வேறு அறிவிப்பாளர்தொடரில் உள்ள சரியான செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இஸாபா-4/270-273)


 


2 . இந்தக் கருத்தில் அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் வழியாக வரும் செய்திகள்:

  • வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> அப்துர்ரஹ்மான் பின் யஸீத் பின் ஜாபிர் —> காலித் பின் லஜ்லாஜ் —> அப்துர்ரஹ்மான் பின் ஆயிஷ் —> நபி (ஸல்) 

பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னு இம்ரான்-115, தாரிமீ-2195, அல்ஆஹாத்-2585, அஸ்ஸுன்னா-388, 467, 468, இலலுல் கபீர்-660, அத்தவ்ஹீத்-இப்னுகுஸைமா-54, அஷ்ஷரீஆ-ஆஜுரீ-3/1549, முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-597, ருஃயதுல்லாஹ்-தார_குத்னீ-233, 234, 235, 236, 237, 239, 240, …


(நூல்: இலலுல் ஹதீஸ்-26)


மேலும் பார்க்க: திர்மிதீ-3235.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.