இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்பது பற்றிக் கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாகும். அதற்கும் அல்லாஹ்வின் அல்அக்பர் எனும் பெயருக்கும் இடையே கண்ணின் கரு விழிக்கும் வெள்ளைப் பகுதிக்கும் இடையே உள்ள நெருக்கம் போன்ற தொடர்பு உள்ளது” என்று கூறினார்கள்.
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. ஆனால், புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதை பதிவு செய்யவில்லை.
(ஹாகிம்: 2027)حَدَّثَنِي جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، أَنْبَأَ عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ سُلَيْمَانَ الْمِصْرِيُّ، ثنا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، ثنا زَيْدُ بْنُ الْمُبَارَكِ الصَّنْعَانِيُّ، ثنا سَلَّامُ بْنُ وَهْبٍ الْجَنَدِيُّ، حَدَّثَنِي أَبِي، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ: «هُوَ اسْمٌ مِنْ أَسْمَاءِ اللَّهِ، وَمَا بَيْنَهُ، وَبَيْنَ اسْمِ اللَّهِ الْأَكْبَرِ، إِلَّا كَمَا بَيْنَ سَوَّادِ الْعَيْنِ، وَبَيَاضِهَا مِنَ الْقُرْبِ»
«هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ»
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2027.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1963.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்-முஹம்மத் பின் அப்துல்லாஹ்
2 . ஜஅஃபர் பின் முஹம்மத் பின் ஹாரிஸ்-அல்மராஃகீ
3 . அலீ பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸுலைமான்-அல்மிஸ்ரி
4 . ஜஅஃபர் பின் முஸாஃபிர்-அத்தின்னீஸீ
5 . ஸைத் பின் முபாரக்-அஸ்ஸன்ஆனீ
6 . ஸல்லாம் பின் வஹ்ப்-அல்ஜனதீ
7 . வஹ்ப்-அல்ஜனதீ
8 . தாவூஸ் பின் கைஸான்
9 . அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)-இப்னு அப்பாஸ் (ரலி)
المغني في الضعفاء (1/ 272):
2509 – سَلام بن وهب
عَن ابْن طَاوُوس بِخَبَر مَوْضُوع لَا يعرف
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17866-ஸல்லாம் பின் வஹ்ப், அவரின் தந்தை ராவீ-47855-வஹ்ப்-அல்ஜனதீ ஆகியோர் யார் என அறியப்படவில்லை.
- ஸல்லாம் பின் வஹ்ப் என்பவரிடமிருந்து ஸைத் பின் முபாரக் அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். வஹ்ப்-அல்ஜனதீ என்பவரிடமிருந்து அவரின் மகன் ஸல்லாம் பின் வஹ்ப் மட்டுமே அறிவித்துள்ளார். இந்த இருவர் பற்றி எந்த அறிஞரின் நற்சான்றும் இல்லை.
- இந்த நிலையில் உள்ளோர் அறிவிக்கும் செய்திகளை அறிஞர்கள் முன்கர் என்றும் கூறுவார்கள். இதனடிப்படையில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இந்தச் செய்தியை முன்கர் என்று கூறியுள்ளார். - உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் இவர் இந்த செய்தியை மட்டுமே அறிவித்துள்ளார். இவரைப் போன்று வேறு யாரும் அறிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இந்தச் செய்திப் பற்றி கூறும் ஸல்லாம் பின் வஹ்ப் என்பவர் இப்னு தாவூஸ் வழியாக இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிவித்துள்ளார். இவர் அறியப்படாதவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்கள்: இலலுல் ஹதீஸ்-2029, அள்ளுஅஃபாஉல் கபீர்-2/162, லிஸானுல் மீஸான்-4/103, அல்முஃக்னீ ஃபிள்ளுஅஃபா-1/272)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். மேலும் இந்தக் கருத்தில் வரும் செய்திகள் ஸல்லாம் பின் வஹ்ப் என்பவர் வழியாகவே வந்துள்ளது என்பதால் அனைத்தும் மிக பலவீனமானவை.
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தஃப்ஸீர்-இப்னு அபூஹாதிம்-5, 15301, அள்ளுஅஃபாஉல் கபீர்-2/162, ஹாகிம்-2027, ஷுஅபுல் ஈமான்-2123,
- தஃப்ஸீர் இப்னு அபூஹாதிம்-5, 15301.
تفسير ابن أبي حاتم، الأصيل – مخرجا (1/ 25)
5 – حَدَّثَنَا أَبِي، ثنا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، ثنا زَيْدُ بْنُ الْمُبَارَكِ الصَّنْعَانِيُّ، ثنا سَلَّامُ بْنُ وَهْبٍ الْجَنَدِيُّ، ثنا أَبِي، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] فَقَالَ: «هُوَ اسْمٌ مِنْ أَسْمَاءِ اللَّهِ، وَمَا بَيْنَهُ وَبَيْنَ اسْمِ اللَّهِ إِلَّا كَمَا بَيْنَ سَوَادِ الْعَيْنَيْنِ وَبَيَاضِهِمَا مِنَ الْقُرْبِ»
تفسير ابن أبي حاتم، الأصيل – مخرجا (8/ 2714)
15301 – حَدَّثَنَا أَبِي، ثنا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، ثنا زَيْدُ بْنُ الْمُبَارَكِ الصَّنْعَانِيُّ، ثنا سَلَّامُ بْنُ وَهْبٍ الْجَنَدِيُّ، ثنا أَبِي، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرَّحْمَنِ فَقَالَ: «هُوَ اسْمٌ مِنْ أَسْمَاءِ اللَّهِ وَمَا بَيْنَهُ وَبَيْنَ اسْمِ اللَّهِ الْأَكْبَرِ إِلَّا كَمَا بَيْنَ سَوَادِ الْعَيْنَيْنِ وَبَيَاضِهِمَا مِنَ الْقُرْبِ»
…
- அள்ளுஅஃபாஉல் கபீர்-2/162.
الضعفاء الكبير للعقيلي (2/ 162)
حَدَّثَنَاهُ جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ السُّوسِيُّ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْمُبَارَكِ الصَّنْعَانِيُّ قَالَ: حَدَّثَنَا سَلَّامُ بْنُ وَهْبٍ الْجَنَدِيُّ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ: بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ: «مَا بَيْنَهُ وَبَيْنَ اسْمِ اللَّهِ الْأَكْبَرِ إِلَّا كَمَا بَيْنَ سَوَادِ الْعَيْنِ وَبَيَاضِهَا مِنَ الْقُرْبِ» لَا يُتَابَعُ عَلَيْهِ وَلَا يُعْرَفُ إِلَّا بِهِ
…
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . உகைலீ-அபூஜஅஃபர்-முஹம்மத் பின் அம்ர்
2 . ஜஅஃபர் பின் முஹம்மத்-அஸ்ஸூஸீ
3 . ஜஅஃபர் பின் முஸாஃபிர்-அத்தின்னீஸீ
4 . ஸைத் பின் முபாரக்-அஸ்ஸன்ஆனீ
5 . ஸல்லாம் பின் வஹ்ப்-அல்ஜனதீ
6 . அப்துல்லாஹ் பின் தாவூஸ்
7 . தாவூஸ் பின் கைஸான்
8 . அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)-இப்னு அப்பாஸ் (ரலி)
1 . இந்தச் செய்தியை ஜஅஃபர் பின் முஸாஃபிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இமாம், அலீ பின் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அலீ பின் ஹுஸைன் ஆகியோர் ஜஅஃபர் பின் முஸாஃபிர் —> ஸைத் பின் முபாரக் —> ஸல்லாம் பின் வஹ்ப் —> வஹ்ப் —> தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
2 . ஜஅஃபர் பின் முஸாஃபிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஜஅஃபர் பின் முஹம்மத் அவர்கள் மட்டும் ஜஅஃபர் பின் முஸாஃபிர் —> ஸைத் பின் முபாரக் —> ஸல்லாம் பின் வஹ்ப் —> அப்துல்லாஹ் பின் தாவூஸ் —> தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இது தவறாக இருக்கலாம்.
அதிகமானோர் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே முன்னுரிமை பெற்றதாகும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-2736,
சமீப விமர்சனங்கள்