தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-11160

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“யூதர்கள், ‘இந்த உலகத்தின் ஆயுட்காலம் 7 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஈடாக, எங்களுக்கு நரகத்தில் ஒரு நாள் மட்டுமே வேதனை அளிக்கப்படும். எனவே, (மொத்தமாக) குறிப்பிட்ட அந்த ஏழு  நாட்கள்தான் (வேதனை அளிக்கப்படும்) என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இதைப்பற்றியே கண்ணியமிக்கவனும் மகத்துவமிக்கவனுமான அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்:

குறிப்பிட்ட நாட்கள் தவிர நரகம் எங்களைத் தீண்டாது எனவும் அவர்கள் கூறினர். “அல்லாஹ்விடம் (இது பற்றி) ஏதாவது உடன்படிக்கை செய்துள்ளீர்களா? (அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக!

அவ்வாறில்லை! யாராக இருந்தாலும் தீமை செய்து, அவர்களின் குற்றம் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளுமானால் அவர்கள் நரகவாசிகளே. அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 2:80,81)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11160)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْمَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ الرَّازِيُّ، ثنا سَلَمَةُ بْنُ الْفَضْلِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَيْفِ بْنِ سُلَيْمَانَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،

” أَنَّ يَهُودَ كَانُوا يَقُولُونَ هَذِهِ الدُّنْيَا سَبْعَةُ آلَافِ سَنَةٍ، وَإِنَّمَا نُعَذَّبُ لِكُلِّ أَلْفِ سَنَةٍ يَوْمًا فِي النَّارِ وَإِنَّمَا هِي سَبْعَةُ أَيَّامٍ مَعْدُودَاتٌ، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ فِي ذَلِكَ وَقَالُوا: {لَنْ تَمَسَّنا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً} [البقرة: 80] إِلَى قَوْلِهِ {فِيهَا خَالِدُونَ} [البقرة: 81] “


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11160.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11004.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்-ஸுலைமான் பின் அஹ்மத்

2 . ஹஸன் பின் அலீ-அல்மஃமரீ

3 . முஹம்மத் பின் ஹுமைத்-அர்ராஸீ

4 . ஸலமா பின் ஃபள்ல்-அல்அப்ரஷ்

5 . முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் யஸார்

6 . ஸைஃப் பின் ஸுலைமான்

7 . முஜாஹித் பின் ஜப்ர்

8 . இப்னு அப்பாஸ் (ரலி)-அப்துல்லாஹ் பின் அப்பாஸ்


இந்தச் செய்தியின் கருத்தை முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்கள் அறிவித்துள்ளார். இவரிடமிருந்து அறிவிக்கும் வேறுசிலரும் இந்தக் கருத்தை அறிவித்துள்ளனர். முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்கள் தத்லீஸ் செய்பவர். மேற்கண்ட செய்தியில் ஸைஃப் பின் ஸுலைமான் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக குறிப்பிடவில்லை.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இந்த அறிவிப்பாளர்தொடரை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-10/246, ஷரஹ் புகாரீ-5777)


1 . முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அதிகமானோர் முஹம்மது பின் இஸ்ஹாக் —> (ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் அடிமையான) முஹம்மத் பின் அபூமுஹம்மத் —> ஸயீத் பின் ஜுபைர் அல்லது இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர். இதுதான் உண்மையாகும்.

முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து வேறுவகையான அறிவிப்பாளர்தொடரில் வரும் செய்திகள் தவறானவை.

2 . மேற்கண்ட அல்முஃஜமுல் கபீர்-11160 இன் செய்தியை முஹம்மத் பின் ஹுமைத் என்பவரிடமிருந்து அறிவிக்கும் ஹஸன் பின் அலீ அவர்கள், முஹம்மத் பின் ஹுமைத் —> ஸலமா பின் ஃபள்ல் —> முஹம்மத் பின் இஸ்ஹாக் —> ஸைஃப் பின் ஸுலைமான் —> முஜாஹித் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இது தவறாகும்.

3 . அமாலீ-இப்னு மன்தா-1/21 எனும் நூலில் முஹம்மது பின் இஸ்ஹாக் —> (ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் அடிமையான) முஹம்மத் பின் அபூமுஹம்மத் —> ஸயீத் பின் ஜுபைர் அல்லது இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் முஹம்மத் பின் அபூமுஹம்மத் என்ற பெயருக்கு பதிலாக முஹம்மத் பின் அபூபக்ர் என்று இடம்பெற்றுள்ளது. இதுவும் தவறாகும்.


  • மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38698-முஹம்மத் பின் ஹுமைத்-அர்ராஸீ என்பவரை இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    ஆகியோர் பாராட்டியிருந்தாலும் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் போன்ற மற்ற பெரும்பாலான அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்றும், முன்கருல் ஹதீஸ் என்றும், பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர் என்பதால் இவர் மிகப் பலவீனமானவர் ஆவார். எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/546, தக்ரீபுத் தஹ்தீப்-1/839)


  • இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்திகளிலும் (ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் அடிமையான) முஹம்மத் பின் அபூமுஹம்மத் இடம்பெறுகிறார்.
  • இவர் அறியப்படாதவர் என்பதால் இவை பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களாகும்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/690, தக்ரீபுத் தஹ்தீப்-1/894)


மேலும் உலகத்தின் ஆயுட்காலம் பற்றி வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனம் உள்ளன. இவைகள் பற்றி இன்ஷா அல்லாஹ் பிறகு விரிவாக பதிவு செய்யப்படும்.


1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களின் அறிவிப்புகள்:

பார்க்க: ஸீரது இப்னு ஹிஷாம்-1/538,

سيرة ابن هشام – ت السقا ورفاقه (1/ 538):
قَالَ ابْنُ إسْحَاقَ: وَحَدَّثَنِي مَوْلًى لِزَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ عِكْرِمَةَ، أَوْ عَنْ سَعِيدِ ابْن جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، وَالْيَهُودُ تَقُولُ: إنَّمَا مُدَّةُ ‌الدُّنْيَا ‌سَبْعَةُ آلَافِ سَنَةٍ، وَإِنَّمَا يُعَذِّبُ اللَّهُ النَّاسَ فِي النَّارِ بِكُلِّ أَلْفِ سَنَةٍ مِنْ أَيَّامِ الدُّنْيَا يَوْمًا وَاحِدًا فِي النَّارِ مِنْ أَيَّامِ الْآخِرَةِ، وَإِنَّمَا هِيَ سَبْعَةُ أَيَّامٍ ثُمَّ يَنْقَطِعُ الْعَذَابُ. فَأَنْزَلَ اللَّهُ فِي ذَلِكَ مِنْ قَوْلِهِمْ: وَقالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّاماً مَعْدُودَةً. قُلْ أَتَّخَذْتُمْ عِنْدَ اللَّهِ عَهْداً فَلَنْ يُخْلِفَ اللَّهُ عَهْدَهُ أَمْ تَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ. بَلى مَنْ كَسَبَ سَيِّئَةً وَأَحاطَتْ بِهِ خَطِيئَتُهُ (2: 80-81) 


  • ஸலமா பின் ஃபள்ல் —> முஹம்மத் பின் இஸ்ஹாக்

பார்க்க: தஃப்ஸீருத் தபரீ-2/175, தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-1/155,


تفسير الطبري (2/ 175):
حدَّثنا ابنُ حُمَيْدٍ، قال: ثنا سلَمةُ، قال: حدثنى محمدُ بنُ إسحاقَ، قال: حدَّثنى محمدُ بنُ أبى محمدٍ، عن سعيدِ بنِ جُبَيْرٍ، أو عكرمةَ، عن ابنِ عباسٍ، قال: قدِم رسولُ اللهِ صلى الله عليه وسلم المدينةَ ويهودُ تقولُ: إنما مدَّةُ ‌الدنيا ‌سبعة آلافِ سنةٍ، وإنما يُعَذَّبُ الناسُ في النارِ بكلِّ ألفِ سنةٍ مِن أيامِ الدنيا يومًا واحدًا في النارِ من أيامِ الآخرةِ، فإنَّما هى سَبْعةُ أيَّامٍ، ثم يَنْقَطِعُ العذابُ. فأنزَلَ اللهُ عز وجل في ذلك مِن قولِهم: {وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً} الآية


تفسير ابن أبي حاتم (1/ 155):
813 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، أَنْبَأَ أَبُو غَسَّانَ ثنا سَلَمَةُ بْنُ الْفَضْلِ قَالَ: قَالَ مُحَمَّدُ ابن إِسْحَاقَ: فِيمَا حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي مُحَمَّدٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ أَوْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ- صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَيَهُودُ تَقُولُ إِنَّمَا مُدَّةُ ‌الدُّنْيَا ‌سَبْعَةُ، آلافِ سَنَةٍ وَإِنَّمَا يُعَذَّبَ النَّاسُ بِكُلِّ أَلْفِ سَنَةٍ مِنْ أَيَّامِ الدُّنْيَا يَوْمًا وَاحِدًا فِي النَّارِ مِنْ أَيَّامِ الآخِرَةِ فَإِنَّمَا هِيَ سَبْعَةُ أَيَّامٍ ثُمَّ يَنْقَطِعُ الْعَذَابُ، فَأَنْزَلَ اللَّهُ عز وجل فِي ذَلِكَ مِنْ قَوْلِهِمْ: وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلا أَيَّامًا مَعْدُودَةً.


 


ஸியாத் பின் அப்துல்லாஹ்


  • யூனுஸ் பின் புகைர் —> முஹம்மத் பின் இஸ்ஹாக்

பார்க்க: தஃப்ஸீருத் தபரீ-2/175, அமாலீ-இப்னு மன்தா-1/21,


تفسير الطبري (2/ 175):
حدَّثنا أبو كُرَيْبٍ، قال: ثنا يونسُ بنُ بُكَيْرٍ، قال: ثنا ابنُ إسحاقَ، قال: حدَّثنى محمدُ بنُ أبى محمدٍ مولى زيدِ بنِ ثابتٍ، قال: حدَّثنى سعيدُ بنُ جُبَيْرٍ، أو عكرمةُ، عن ابنِ عباسٍ، قال: كانت يهودُ يقولون: إنما هذه ‌الدنيا ‌سبعةُ آلافِ سنةٍ، وإنما يُعَذَّبُ الناسُ يومَ القيامةِ بِكُلِّ أَلفِ سَنَةٍ من أيامِ الدنيا يومًا واحدًا مِن أيامِ الآخرةِ، [وإنما هى] سبعةُ أيامٍ. فأنزَل اللهُ في ذلك من قولِهم: {وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً} الآية.


أمالي ابن منده- رواية ابن حيويه (ص21 بترقيم الشاملة آليا):
19 – ثنا الشَّيْخُ أَبُو زَكَرِيَّا يَحْيَى بْنُ مَنْدَةَ ، إِمْلاءً مِنْ لَفْظِهِ يَوْمَ الْخَمِيسِ السَّادِسِ مِنْ رَبِيعٍ الآخِرِ سَنَةَ عَشْرٍ وَخَمْسِ مِائَةٍ ، قَالَ: ثنا وَالِدِي أَبُو عَمْرٍو عَبْدُ الْوَهَّابِ ، قَالَ: أنبا أَبِي قَالَ: أَخْبَرَنِي أَبِي ، حَدَّثَنِي أَبِي ، ثنا هَنَّادٌ ، ثنا يُونُسُ بْنُ بُكَيْرٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ ، أَوْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ: ” قَالَتِ الْيَهُودُ: إِنَّمَا الدُّنْيَا سَبْعَةُ آلافِ سَنَةٍ ، وَإِنَّمَا يُعَذَّبُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ بِكُلِّ أَلْفِ سَنَةٍ يَوْمٌ مِنْ أَيَّامِ الدُّنْيَا يَوْمًا وَاحِدًا، وَإِنَّمَا هِيَ سَبْعَةُ أَيَّامٍ ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَقَالُوا ‌لَنْ ‌تَمَسَّنَا ‌النَّارُ ‌إِلا ‌أَيَّامًا ‌مَعْدُودَةً} [البقرة: 80] .


  • ஸஃத் பின் இப்ராஹீம் —> முஹம்மத் பின் இஸ்ஹாக்

பார்க்க: அஸ்பாபுன் நுஸூல்-வாஹிதீ-1/25,

أسباب النزول ت الحميدان (ص26):
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابن أَبِي القاسم الصوفي قال: أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ أحمد العطار قال: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عبد الجبار قال: حدثني أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ سعد الزهري قال: حَدَّثَنِي أَبِي وَعَمِّي قَالَا: حَدَّثَنَا أَبِي عَنِ ابن إسحاق قال: حدثني مُحَمَّدُ بْنُ أَبِي مُحَمَّدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَدِمَ رَسُولُ الله صلى الله عليه وسلم المدينة ويهود تَقُولُ: إِنَّمَا هَذِهِ الدُّنْيَا سَبْعَةُ آلَافِ سَنَةٍ، إنما يُعَذَّبُ النَّاسُ فِي النَّارِ لِكُلِّ أَلْفِ سَنَةٍ مِنْ أيام الدنيا يوم واحد فِي النَّارِ مِنْ أَيَّامِ الْآخِرَةِ، وَإِنَّمَا هِيَ سَبْعَةُ أَيَّامٍ ثُمَّ يَنْقَطِعُ الْعَذَابُ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِي ذَلِكَ مِنْ قَوْلِهِمْ: {وَقَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَةً}


யஹ்யா பின் யஃகூப்

தாரீகுத் தபரீ-1/10, ஹாகிம்-4171,


تاريخ الطبري = تاريخ الرسل والملوك، وصلة تاريخ الطبري (1/ 10):
حَدَّثَنَا ابْنُ حُمَيْدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ وَاضِحٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْقُوبَ، عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قال: ‌الدنيا ‌جمعة ‌من ‌جمع الآخرة، سبعة آلاف سنه، فقد مضى سته آلاف سنه ومائتا سَنَةٍ، وَلَيَأْتِيَنَّ عَلَيْهَا مِئُونَ مِنْ سِنِينَ، لَيْسَ عَلَيْهَا مُوَحِّدٌ.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இவ்வுலகத்தின் மொத்த ஆயுட்காலம், மறுமை நாளின் மொத்த வெள்ளிக்கிழமைகளில் ஒரு வெள்ளிக்கிழமையின் காலத்தைப் போன்றதாகும். அந்த ஒரு வெள்ளிக்கிழமையின் அளவு 7 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். (எனவே உலகின் முழுமையான கால அளவு 7 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.) அதில் நிச்சயமாக ஆறாயிரத்து இருநூறு (6,200) ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டன.

(எஞ்சியிருக்கும்) இதன் மீது இன்னும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்து வரும். அப்போது, இப்பூமியில் ஏகத்துவவாதிகள் (எனும் அல்லாஹ்வை மட்டும் வணங்கும்) எவரும் இருக்க மாட்டார்கள்.


யூதர்கள், “நாங்கள் சிறிது காலமே நரகத்தில் இருப்போம்” என்று கூறிய தகவல் வேறு சரியான ஹதீஸ்களில் வந்துள்ளது.

பார்க்க: புகாரி-3169,


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17734,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.