அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கோ பிறருக்கோ தீங்கு இழைத்துக் கொள்வதும் இல்லை, (பதிலுக்குப்) பிறருக்குத் தீங்கு விளைவிப்பதும் இல்லை. எவர் (பிறருக்கு) தீங்கு செய்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் தீங்கிழைப்பான் (தண்டிப்பான்). எவர் (பிறரை) சிரமப்படுத்துகிறாரோ, அல்லாஹ் அவரைச் சிரமத்திற்குள்ளாக்குவான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் இமாம் முஸ்லிம் அவர்களின் நிபந்தனைக்கு ஏற்ப, சரியான அறிவிப்பாளர்தொடரைக் கொண்டதாகும். ஆனால், (புகாரீ, முஸ்லிம் அறிஞர்களான) அவ்விருவரும் இதனை தங்களது நூல்களில் பதிவு செய்யவில்லை.
(ஹாகிம்: 2345)حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ، ثنا عُثْمَانُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ بْنِ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ، مَنْ ضَارَّ ضَارَّهُ اللَّهُ، وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ»
هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ عَلَى شَرْطِ مُسْلِمٍ وَلَمْ يُخَرِّجَاهُ “
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2345.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்