தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-521

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தொழுகை நேரங்கள்.

பாடம்: 1

தொழுகையின் சிறப்பும் அவற்றின் நேரங்களும்.

அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன்: 4:103)

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள மவ்கூத்’ எனும் சொற்றொடரும்) மவக்கத்’ எனும் சொல்லும் தவ்கீத்’எனும் வேர்ச் சொல்-லிருந்து பிரிந்தவை யேயாகும். இதன் கருத்தாவது: நம்பிக்கையாளர்கள் மீது அவற்றிற்கான நேரத்தை அல்லாஹ் வரையுறுத்துள்ளான்.

ஸுஹ்ரி அறிவித்தார்:

உமர் இப்னு அப்தில் அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.

இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா (ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி (ரலி), அவரிடம் வந்து, ‘முகீராவே! இது என்ன? ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு இஷா தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் ‘இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது’ என்றும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?’ என்று கேட்டார்கள்.

(இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) ‘உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி (ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா?’ என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “(ஆம்) இவ்வாறுதான் பஷீர் பின் அபீ மஸ்உத் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்புச்செய்வார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 9

(புகாரி: 521)

9 – كِتَابُ مَوَاقِيتِ الصَّلاَةِ

بَابُ مَوَاقِيتِ الصَّلاَةِ وَفَضْلِهَا “

وَقَوْلِهِ: {إِنَّ الصَّلاَةَ كَانَتْ عَلَى المُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا} [النساء: 103] مُوَقَّتًا وَقَّتَهُ عَلَيْهِمْ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ: قَرَأْتُ عَلَى مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ

أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فَأَخْبَرَهُ أَنَّ المُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا وَهُوَ بِالعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ، فَقَالَ: مَا هَذَا يَا مُغِيرَةُ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ فَصَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «بِهَذَا أُمِرْتُ»، فَقَالَ عُمَرُ لِعُرْوَةَ: اعْلَمْ مَا تُحَدِّثُ، أَوَأَنَّ جِبْرِيلَ هُوَ أَقَامَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلاَةِ؟ قَالَ عُرْوَةُ: كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ،


Bukhari-Tamil-521.
Bukhari-TamilMisc-521.
Bukhari-Shamila-521.
Bukhari-Alamiah-491.
Bukhari-JawamiulKalim-493.




1 . இந்தக் கருத்தில் அபூமஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உர்வா —> பஷீர் பின் அபூமஸ்வூத் —> அபூமஸ்வூத் (ரலி),

பார்க்க: மாலிக்-001 , அஹ்மத்-17089 , 22353 , தாரிமீ-1223 , புகாரி-521 , 3221 , 4007 , முஸ்லிம்-1068 , 1069 , இப்னு மாஜா-668 , அபூதாவூத்-394 , நஸாயீ-494 ,

  • உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: மாலிக்-001 , தாரிமீ-1223 ,

2 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-149 .

more hadees…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.