தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-423

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்: 198

சூரியன் உதயமான பின்னரும் ஃபஜ்ருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழலாம் என்பது குறித்து வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ருடைய (முன்சுன்னத்) இரண்டு ரக்அத்களைத் தொழாதவர், சூரியன் உதயமான பின்னர் அவற்றைத் தொழுது கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இந்த ஹதீஸ் இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்திருப்பதாக நாம் அறிகிறோம்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு தொழுதுள்ளதாக (அதாவது அவர்களின் செயலாக) அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். இவ்வாறே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்), அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) ஆகியோரும் கூறுகின்றனர்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் வழியாகவே தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை.


கதாதா —> நள்ர் பின் அனஸ் —> பஷீர் பின் நஹீக் —> அபூஹுரைரா (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர்தொடரில் மிகப் பரவலாக அறியப்பட்ட (மஃரூஃப் எனும் பலமான ஹதீஸ்) பின்வரும் ஹதீஸாகும்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார். 

(திர்மிதி: 423)

بَابُ مَا جَاءَ فِي إِعَادَتِهِمَا بَعْدَ طُلُوعِ الشَّمْسِ

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ العَمِّيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَيِ الفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ»، وَقَدْ رُوِيَ عَنْ ابْنِ عُمَرَ: أَنَّهُ فَعَلَهُ، «وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ، وَابْنُ المُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ»، «وَلَا نَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الحَدِيثَ عَنْ هَمَّامٍ بِهَذَا الإِسْنَادِ نَحْوَ هَذَا إِلَّا عَمْرَو بْنَ عَاصِمٍ الكِلَابِيَّ»

وَالمَعْرُوفُ مِنْ حَدِيثِ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلَاةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-388.
Tirmidhi-Shamila-423.
Tirmidhi-Alamiah-388.
Tirmidhi-JawamiulKalim-388.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . உக்பா பின் முக்ரம்-அல்அம்மீ, அல்பஸரீ,

3 . அம்ர் பின் ஆஸிம்

4 . ஹம்மாம் பின் யஹ்யா

5 . கதாதா

6 . நள்ர் பின் அனஸ்

7 . பஷீர் பின் நஹீக்

8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


ஹம்மாம் பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மிகப் பலமானவர்களான பஹ்ஸ் பின் அஸத், அப்துஸ்ஸமத், முஹம்மத் பின் ஸினான் ஆகியோர் வேறு கருத்தை அறிவித்துள்ளனர்.

(பார்க்க: அஹ்மத்-8570)

ஹம்மாம் பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் ஆஸிம் என்பவரே மேற்கண்ட கருத்தை அறிவித்துள்ளார். திர்மிதீ இமாம் அவர்களும் இதை இங்கு குறிப்பிட்டுள்ளார்.

அம்ர் பின் ஆஸிம் அவர்களை பெரும்பாலான அறிஞர்கள் சுமாரானவர் என்று கூறியுள்ளனர். இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்கள் மட்டுமே இவர் சிறிது நினைவாற்றல் சரியில்லாதவர் என்று கூறியுள்ளார்.

எனவே மிகப் பலமானவர்களுக்கு இது மாற்றமாக உள்ளதால் இது ஷாத் என்பதால் பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


 

 


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்ர் பின் ஆஸிம் —> ஹம்மாம் பின் யஹ்யா —> கதாதா —> நள்ர் பின் அனஸ் —> பஷீர் பின் நஹீக் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: திர்மிதீ-423, இப்னு குஸைமா-1117, இப்னு ஹிப்பான்-2472, தாரகுத்னீ-1436, ஹாகிம்-1015, 1153, குப்ரா பைஹகீ-4231, ஸகீர் பைஹகீ-750, 751,


பார்க்க: புகாரி-579.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-1267, புகாரி-1169,


தவறிவிட்ட ஃபஜ்ரின் முன் ஸுன்னத் இரண்டு ரக்அத்தை எப்போது தொழ வேண்டும்?

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.