தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-7960

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள், நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(musannaf-abdur-razzaq-7960: 7960)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَرَّرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ:

«عَقَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَفْسِهِ بَعْدَ مَا بُعِثَ بِالنُّبُوَّةِ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-7960.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-7746.




இந்தச் செய்தியை சிலர், மவ்லூத் விருந்துக்கு ஆதாரமாக கூறுகின்றனர். இது பல காரணங்களால் தவறான வாதமாகும்.

இந்தச் செய்தி சரியானது என்று கருதினாலும் இதன் மூலம் மவ்லூத் விருந்து தரலாம் என்று சட்டம் எடுக்கமுடியாது. ஏனெனில் அகீகா என்பது குழந்தை பிறந்த 7 ஆம் நாள் தரவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி என்பதில் அடங்கும். மேலும் இது ஒரே ஒரு தடவை தரவேண்டும் என்பதே நபிவழியாகும்.

நபி (ஸல்) அவர்கள் ஏற்கனவே தனக்காக அகீகா தந்துவிட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும், அல்லது அவர்களுக்காக அகீகா தரப்படவில்லை என்று வைத்துக் கொண்டாலும் மற்றவர்கள் அவர்களுக்காக அகீகா தரவேண்டும் என்ற சட்டமும் இல்லை. அதை ஒவ்வொரு வருடமும் தரவேண்டும் என்ற சட்டமும் இல்லை.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்

2 . அப்துல்லாஹ் பின் முஹர்ரர்

3 . கதாதா

4 . அனஸ் (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25406-அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் பற்றி அனைத்து ஹதீஸ்கலை அறிஞர்களும் இவர் மிக பலவீனமானவர் என்ற கருத்தில் விமர்சித்துள்ளனர்.

  • இவரைப் பற்றி நல்மதிப்பு வைத்திருந்த இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    அவர்கள், இவரின் செய்திகளை அறிந்தப்பின் இவர் என்னுடைய பார்வையில் ஒரு ஆட்டு புழுக்கையை விட மதிப்பற்றவர் என்று கூறியுள்ளார்.
  • இந்தச் செய்தியை பதிவு செய்துள்ள அப்துர்ரஸ்ஸாக் அவர்கள், இவர் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியினால் தான் இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் கைவிட்டுவிட்டனர் என்று கூறியதாக பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் இவரைப் பற்றி ஃபள்ல் பின் துகைன், இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாம், ஜவ்ஸஜானீ, ஃபல்லாஸ், புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஸுர்ஆ, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அல்ஃபஸவீ, ஹிலால் பின் அலாஃ, பஸ்ஸார், நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஸாஜீ போன்ற பலரும் இவர் பலவீனமானவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் மிக பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் நல்ல வணக்கசாலியாக இருந்தாலும் தன்னை அறியாமல் பொய் சொல்பவராக இருந்தார். விளங்காமல் அறிவிப்பாளர்தொடரை புரட்டக்கூடியவராக இருந்தார் என்று கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் விடப்பட்டவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/176, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/213, தஹ்தீபுல் கமால்-16/29, அல்இக்மால்-8/164, அல்காஷிஃப்-3/185, தஹ்தீபுத் தஹ்தீப்-2/418, தக்ரீபுத் தஹ்தீப்-1/540,  லிஸானுல் மீஸான்-4/518)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


இந்தச் செய்தியை பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்ற அறிஞர்கள் கூறும் விமர்சனங்களைக் குறிப்பிட்ட அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் அப்துல்லாஹ் பின் முஸன்னா —> ஸுமாமா பின் அப்துல்லாஹ் பின் அனஸ் —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தி வந்துள்ளது என்பதால் இதை ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். காரணம் இவரைப் போன்று இஸ்மாயீல் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
என்பவரும் கதாதா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார் என்று கூறி மற்ற அறிஞர்களின் விமர்சனத்திற்கு பதில் கூறியுள்ளார்.

(நூல்:அஸ்ஸஹீஹா-2726)


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • 1 . அப்துல்லாஹ் பின் முஹர்ரர் —> கதாதா —> அனஸ் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7960, முஸ்னத் பஸ்ஸார்-7281, முஸ்னத் ரூயானீ-1371, குப்ரா பைஹகீ-19273, கஷ்ஃபுல் அஸ்தார்-1237,


  • முஸ்னத் ரூயானீ-1371.

مسند الروياني (2/ 386)
1371 – نَا ابْنُ إِسْحَاقَ , نَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، نَا عَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَرَّرٍ , عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَمَا بَعَثَهُ اللَّهُ نَبِيًّا»


  • கஷ்ஃபுல் அஸ்தார்-1237.

كشف الأستار عن زوائد البزار (2/ 74)
1237 – حَدَّثَنَا سُهَيْلُ بْنُ إِبْرَاهِيمَ الْجَارُودِيُّ أَبُو الْخَطَّابِ، ثنا عَوْفُ بْنُ مُحَمَّدٍ الْمُرَادِيُّ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُحَرَّرِ، عَنْ قَتَادَةَ، عَنْ أنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ مَا بُعِثَ نَبِيًّا.
قَالَ الْبَزَّارُ: تَفَرَّدَ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ الْمُحَرَّرِ، وَهُوَ ضَعِيفٌ جِدًّا، إِنَّمَا يُكْتَبُ عَنْهُ مَا لا [يُوجَدُ] عِنْدَ غَيْرِهِ.

மேற்கண்ட செய்திகள் அனைத்திலும் அப்துல்லாஹ் பின் முஹர்ரர் இடம்பெறுவதால் இவை பலவீனமானவைகளாகும்.


  • 2 . அபூகதாதா அல்ஹர்ரானீ (அப்துல்லாஹ் பின் வாகித்) —> அப்துல்லாஹ் அல்ஜுரஷீ (ஹிஷாம் பின் ஃகாஸ்) —> கதாதா —> அனஸ் (ரலி)

பார்க்க: அல்காமிஸ் மினல் அஃப்ராத்-இப்னு ஷாஹீன்-3.

الخامس من الأفراد لابن شاهين (ص: 194)
3- حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ إِسْمَاعِيلَ الْمَحَامِلِيُّ قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ قَالَ حَدَّثَنَا أَبُو قَتَادَةَ الْحَرَّانِيُّ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ الْجُرَشِيُّ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَمَا أُنْزِلَتِ الْنُبُوَّةُ.
وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ وَلا أَعْرِفُ لِعَبْدِ اللَّهِ الْجُرَشِيِّ غَيْرَ هَذَا الْحَدِيثِ عَنْ قَتَادَةَ وَقَالَ الْقَاسِمُ عَنِ الْفَضْلِ قَالَ: قَالَ أَبُو قَتَادَةَ: هَذَا أَفَادَنَاهُ شُعْبَةُ عَنْ هَذَا الشَّيْخِ وَقَالَ: لَيْسَ يَرْوِي هَذَا الْحَدِيثَ أَحَدٌ غَيْرُهُ.

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26193-அபூகதாதா அல்ஹர்ரானீ-அப்துல்லாஹ் பின் வாகித் என்பவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர்…

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


  • 3 . அப்துல்லாஹ் பின் முஸன்னா —> ஸுமாமா பின் அப்துல்லாஹ் பின் அனஸ் —> அனஸ் (ரலி)

பார்க்க: அன்னஃபகது அலல்இயால்-66, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-1053, 1054, அல்முஃஜமுல் அவ்ஸத்-994, அல்முஹல்லா-6/239, அல்அஹாதீஸுல் முக்தாரா-1832, 1833,


  • அன்னஃபகது அலல்இயால்-66.

النفقة على العيال لابن أبي الدنيا (1/ 208)
66 – حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى بْنِ أَنَسٍ، حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَمَا جَاءَتْهُ النُّبُوَّةُ»

قَالَ: وَرُبَّمَا قَالَ: حَدَّثَنِيهِ رَجُلٌ مِنْ آلِ أَنَسٍ، عَنْ أَنَسٍ


  • அல்முஹல்லா-6/239.

المحلى بالآثار (6/ 239)
وَقَدْ رُوِّينَا مِنْ طَرِيقِ ابْنِ أَيْمَنَ نَا إبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ السَّرَّاجُ نَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ أَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ نَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى بْنِ أَنَسٍ نَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسٍ «أَنَّ رَسُولَ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ – عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَمَا جَاءَتْهُ النُّبُوَّةُ»


  • அல்அஹாதீஸுல் முக்தாரா-1832 , 1833.

الأحاديث المختارة = المستخرج من الأحاديث المختارة مما لم يخرجه البخاري ومسلم في صحيحيهما (5/ 204)
1832 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ نَصْرٍ بِأَصْبَهَانَ أَنَّ الْحَسَنَ بْنَ أَحْمَدَ الْحَدَّادَ أَخْبَرَهُمْ وَهُوَ حَاضِرٌ أبنا أَبُو نُعَيْمٍ أبنا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ الطَّبَرَانِيُّ ثَنَا أَحْمَدُ بْنُ مَسْعُودٍ هُوَ الْمَقْدِسِيُّ قثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ قثنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ ص عق عَن نَفسه بَعْدَمَا بعث نَبيا إِسْنَاده صَحِيح

இதன் அறிவிப்பாளர்தொடர் சரியானது என்று ளியாவுத்தீன் அல்மக்திஸீ அவர்கள் கூறியுள்ளார்.


الأحاديث المختارة = المستخرج من الأحاديث المختارة مما لم يخرجه البخاري ومسلم في صحيحيهما (5/ 205)
1833 – وَأَخْبَرَنَا أَبُو الْهَيْصَمِ شَذْرَةُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي الْعَلاءِ الْمَدِينِيُّ الْخَيَّاطُ بِمَدِينَةِ أَصْبَهَانَ أَنَّ أَبَا الْخَيْرِ مُحَمَّدَ بْنَ أَحْمَدَ بْنِ مُحَمَّدٍ الباغبان أخْبرهُم قِرَاءَة عَلَيْهِ أبنا أَبُو عَمْرٍو عَبْدُ الْوَهَّابِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ بْنِ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ مَنْدَهْ أنبا أَبُو مُحَمَّدٍ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ بْنِ يُوسُفَ بْنِ يُوهْ قِرَاءَةً عَلَيْهِ قثنا أَبُو عَمْرٍو أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ حَكِيمٍ الْمَدِينِيُّ إِمْلاءً ثَنَا أَبُو حَاتِمٍ هُوَ مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الرَّازِيُّ ثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ ثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ نَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى بْنِ أَنَسٍ الأَنْصَارِيُّ حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَمَا جَاءَتْهُ النُّبُوَّةُ

இதில் இடம்பெறும் ராவீ-19092-ஷத்ரா பின் முஹம்மத், ராவீ-12459-ஹஸன் பின் யூஹ் ஆகியோரின் நிலை அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


  • 4 . அப்துல்லாஹ் பின் முஸன்னா —> அனஸ் (ரலி) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் —> அனஸ் (ரலி)

பார்க்க: அன்னஃபகது அலல்இயால்-66, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-1054,

இதில் இடம்பெறும் அனஸ் (ரலி) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பவர், யாரென இதில் கூறப்படவில்லை. என்றாலும் வேறு அறிவிப்பாளர்தொடரில் ஸுமாமா பின் அப்துல்லாஹ் என்று இடம்பெற்றுள்ளது.


மேற்கண்ட செய்திகளில் வரும் ராவீ-24117-அப்துல்லாஹ் பின் முஸன்னா அவர்கள் பற்றி சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

இவரைப் பற்றி பாராட்டியவர்கள்:

  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இவர் இடம்பெறும் சில செய்திகளை பதிவு செய்துள்ளார்.
  • இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    திர்மிதீ ஆகியோர் இவரை பலமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ ஆகியோர் இவர் சுமாரானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார். (இதன் கருத்து இவர் பார்வையில் சுமாரானவர் என்பதாகும்.)
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவர் செய்திகளை ஏற்கலாம் என்பதே இறுதிமுடிவு என்ற கருத்தை தரும் صح – ஸஹ்ஹ எனும் அடையாளத்தை தனது லிஸானுல் மீஸானில் கூறியுள்ளார். (தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களின் இந்த தகவல் சிலர் விசயத்தில் தவறாகவும் உள்ளது)

இவரைப் பற்றி விமர்சித்தவர்கள்:

  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவரின் செய்திகளை நான் பதிவு செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.
  • உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    ஸாஜீ ஆகியோர் இவர் அதிகமான செய்திகளை தனித்து அறிவித்துள்ளார். எனவே பலவீனமானவர்; முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளனர்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவரை பலமானவர் என்று கூறியதாக சிலர் கூறியுள்ளனர். பலவீனமானவர் என்று கூறியதாக சிலர் கூறியுள்ளனர். (இவ்வாறு இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களிடமிருந்து இருவகையான தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது)
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் ஸதூக் தரத்தில் உள்ளவர்; என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று தனது தக்ரீபில் கூறியுள்ளார்.
  • தக்ரீபை ஆய்வு செய்த அறிஞர்கள் இந்தக் கருத்தை மறுத்து இவரை ஹஸன் தரத்தில் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/177, தஹ்தீபுல் கமால்-16/25, அல்இக்மால்-8/162, அல்காஷிஃப்-3/185, லிஸானுல் மீஸான்-9/345, தஹ்தீபுத் தஹ்தீப்-2/417, தக்ரீபுத் தஹ்தீப்-1/540, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/263, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-3571, 2/260)

இவருக்கு ஸுமாமா பின் அப்துல்லாஹ் பின் அனஸ் அவர்கள் தந்தையின் சகோதரர் ஆவார். அப்துல்லாஹ் பின் முஸன்னாவை சிலர் விமர்சித்திருந்தாலும் இவர் ஸுமாமிடமிருந்து அனஸ் (ரலி) அவர்களின் செய்தியாக அறிவித்த செய்திகளை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் ஆதாரமாக ஏற்றுள்ளார். இவர் இடம்பெற்ற செய்திகளை 22 இடங்களில் கூறியுள்ளார்.

(பார்க்க: புகாரி-94, 95, 1010, 1453, 6281,…)

இவரைப் பற்றிய ஆய்வில் இவர் தனது குடும்பத்தாரிடமிருந்து அறிவிக்கும் செய்திகளில் தவறு இல்லை என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறியுள்ளனர். இதனடிப்படையில் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற சிலர் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளனர்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5471, நஸாயீ-4220, …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.