அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தஹ்பீஹ் செய்வதை (அல்லாஹ்வைத் துதிக்கும் போது அதை) வலது கை விரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன்.
அறிவிப்பாளர் முஹம்மது பின் குதாமாவின் அறிவிப்பில் வலதுகை (விரல்களால்) என்று இடம்பெற்றுள்ளது.
(அபூதாவூத்: 1502)حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، وَمُحَمَّدُ بْنُ قُدَامَةَ، فِي آخَرِينَ، قَالُوا: حَدَّثَنَا عَثَّامٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ:
«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُ التَّسْبِيحَ»،
قَالَ ابْنُ قُدَامَةَ: بِيَمِينِهِ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-1502.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1286.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) அவர்கள், கூஃபாவை சேர்ந்தவர். பஸராவிற்கு இரண்டாவது முறை சென்ற பின் இறுதி காலத்தில் மூளை குழம்பியவர் என்றாலும் அஃமஷ் (ரஹ்) கூஃபாவை சேர்ந்தவர் என்பதால் , அதாஉ பின் ஸாயிப் (ரஹ்) மூளை குழம்புவதற்கு முன் செவியேற்றுள்ளார் என்பதால் இது சரியான செய்தி.
இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3411 , 3486 , நஸாயீ-1355 , குப்ரா நஸாயீ-1280 , பஸ்ஸார்-2406 , இப்னு ஹிப்பான்-843 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7035 , 8568 , ஹாகிம்-2005 , 2006 , குப்ரா பைஹகீ-3027 , 3367 , 3368 ,
இந்தக் கருத்துடன் தொடர்புடைய சரியான செய்தி பார்க்க: முஸ்லிம்-5272 .
கைகளால் தான் தஸ்பீஹ் செய்ய வேண்டும். பார்க்க: திர்மிதீ-3410 .
சமீப விமர்சனங்கள்