தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-586

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது விட்டு பிறகு அமர்ந்து சூரியன் உதயமாகும் வரை அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, சூரியன் உதித்த பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதால் ஹஜ்ஜும், உம்ராவும் செய்த நன்மையைப் போன்று அவருக்கு முழுமையான நன்மை கிடைக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

இதில் இடம்பெறும் அபூளிலால் என்பவர் பற்றி புகாரீ இமாமிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் (இவர் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும்) முகாரிபுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் என்றும்; இவரின் பெயர் ஹிலால் என்றும் கூறினார்.

(திர்மிதி: 586)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الجُمَحِيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو ظِلَالٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ صَلَّى الغَدَاةَ فِي جَمَاعَةٍ ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ»
قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَامَّةٍ تَامَّةٍ تَامَّةٍ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ” وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ: عَنْ أَبِي ظِلَالٍ؟ فَقَالَ: هُوَ مُقَارِبُ الحَدِيثِ، قَالَ مُحَمَّدٌ: وَاسْمُهُ هِلَالٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-535.
Tirmidhi-Shamila-586.
Tirmidhi-Alamiah-535.
Tirmidhi-JawamiulKalim-535.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அப்துல்லாஹ் பின் முஆவியா

3 . அப்துல்அஸீஸ் பின் முஸ்லிம்

4 . ஹிலால் பின் மைமூன்…-அபூளிலால்

5 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47376-ஹிலால் பின் மைமூன்-ஹிலால் பின் அபூஹிலால்-ஹிலால் பின் அபூமாலிக்-அபூளிலால் என்பவர் பற்றி, இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார்.
  • புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் அனஸ் (ரலி) வழியாக சில செய்திகளை முன்கராக அதாவது மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியதாக உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்களும், முகாரிபுல் ஹதீஸ்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியதாக திர்மிதீ இமாமும் அறிவித்துள்ளனர். (எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளைத் தவிர மற்றவர்கள் இவர் போன்று அறிவித்தால் இவரின் செய்திகளை துணைச் சான்றாக கூறலாம். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இதன்படி இவர் இடம்பெறும் ஒரு செய்தியை துணைச் சான்றாக கூறியுள்ளார். (பார்க்க: புகாரி-5653)
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அவர்கள், இவர் சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் கவனக்குறையுள்ளவர். அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார். எனவே இவரை எப்போதும் ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார். (இந்த விமர்சனத்தை ஹிலால் பின் அபூமாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    என்பவர் விசயத்தில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    கூறியுள்ளார். ஹிலால் பின் அபூஹிலால் என்ற பெயருடையவரை பலமான தாபிஈன்களின் பட்டியலில் கூறியுள்ளார். இருவரும் ஒருவரே என்று சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்)
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் அதிகமாக மற்ற பலமானவர்கள் அறிவிக்காத செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: அள்ளுஅஃபாஉல் கபீர்-1952, அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/73, அல்காமில்-8/425, தஹ்தீபுல் கமால்-30/350, அல்இக்மால்-12/179, அல்காஷிஃப்-4/438, தஹ்தீபுத் தஹ்தீப்-4/292, தக்ரீபுத் தஹ்தீப்-1/1028)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அபூளிலால் —> அனஸ் (ரலி)

பார்க்க: திர்மிதீ-586, ஷரஹுஸ் ஸுன்னா-710,


  • ஷரஹுஸ் ஸுன்னா-710.

شرح السنة للبغوي (3/ 221)
710 – أَخْبَرَنَا أَبُو عُثْمَانَ الضَّبِّيُّ، أَنَا أَبُو مُحَمَّدٍ الْجَرَّاحِيُّ، نَا أَبُو الْعَبَّاسِ الْمَحْبُوبِيُّ، نَا أَبُو عِيسَى، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ الْبَصْرِيُّ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، نَا أَبُو ظِلالٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى الْفَجْرَ فِي جَمَاعَةٍ، ثُمَّ قَعَدَ يَذْكُرُ اللَّهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، كَانَتْ لَهُ كَأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ»، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَامَّةٍ، تَامَّةٍ، تَامَّةٍ».
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ: وَأَبُو ظِلالٍ اسْمُهُ: هِلالٌ، وَهُوَ مُقَارِبُ الْحَدِيثِ


  • ஸவாபா பின் மஸ்ஊத் —> ஒரு மனிதர் —> அனஸ் (ரலி)

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-9304,


  • ளிரார் பின் அம்ர் —> ஸாபித் பின் அஸ்லம் —> அனஸ் (ரலி)

பார்க்க: ஷுஅபுல் ஈமான்-9305,


2 . அபூஉமாமா (ரலி), உத்பா பின் அப்த் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-317.


3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4365.


4 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5602.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1188, அபூதாவூத்-558, 3667, …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.