தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1075

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஜனாஸாவை விரைவாக அடக்கம் செய்தல்.

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “அலீயே! தொழுகையை அதன் நேரம் வந்ததும்; ஜனாஸா தயாராகி விட்டதும்; துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான வரனை நீர் கண்டதும்” (ஆகிய) இந்த மூன்று காரியங்களைத் தள்ளிப் போடாதீர்” என்று என்னிடம் கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ‘கரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடர் ‘முத்தஸில்-சங்கிலித் தொடராக’ நான் கருதவில்லை.

(திர்மிதி: 1075)

بَابُ مَا جَاءَ فِي تَعْجِيلِ الجَنَازَةِ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الجُهَنِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: ” يَا عَلِيُّ، ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا: الصَّلَاةُ إِذَا أَتَتْ، وَالجَنَازَةُ إِذَا حَضَرَتْ، وَالأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْئًا

هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَمَا أَرَى إِسْنَادَهُ بِمُتَّصِلٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-995.
Tirmidhi-Shamila-1075.
Tirmidhi-Alamiah-995.
Tirmidhi-JawamiulKalim-993.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா

2 . குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ

3 . அப்துல்லாஹ் பின் வஹ்ப்-அல்குரஷீ

4 . ஸயீத் பின் அப்துல்லாஹ்-அல்ஜுஹனீ

5 . முஹம்மத் பின் உமர் பின் அலீ-அபூஅப்துல்லாஹ்

6 . உமர் பின் அலீ பின் அபூதாலிப்

7 . அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

1 . இந்தச் செய்தியை சிலர் பலமானது என்றும்,

2 . வேறு சிலர் ஹஸன் தரம் என்றும்,

3 . வேறு சிலர் அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் இருப்பதால் பலவீனமானது என்றும்,

4 . வேறு சிலர் அறிவிப்பாளர்தொடரிலும், கருத்திலும் விமர்சனம் இருப்பதால் பலவீனமானது என்றும் கூறியுள்ளனர்.


1 . பலமானது என்று கூறுவோரின் ஆதாரங்கள்:

திர்மிதீ இமாம் அவர்கள் இதை முத்தஸில் அல்ல-அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்தி என்று கூறியுள்ளார் என்பதை வைத்து சில அறிஞர்கள் இதை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

ஆனால் இந்தக் கருத்தை துஹ்ஃபதுல் அஹ்வதீ எனும் நூலின் ஆசிரியர் அப்துர்ரஹ்மான் முபாரக்பூரீ அவர்களும், அவரின் மாணவர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் முபாரக்பூரீ அவர்களும், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர், முஹம்மத் பின் அப்துல்கரீம் போன்றோரும் திர்மிதீ பிரதிகளில் உள்ள கருத்துவேறுபாடுகளின் அடிப்படையில் இந்த வாக்கியம் இல்லை என்று கூறி இந்த ஹதீஸை சரியானது என்று கூறியுள்ளனர்.

مرعاة المفاتيح شرح مشكاة المصابيح (2/ 314):
قال الترمذي: هذا حديث غريب حسن. على ما في النسخة المصرية المطبوعة بتعليق العلامة الشيخ أحمد محمد شاكر. وقد نقل هذا الحديث الزيلعي في نصب الراية (ج1: ص244) عن الترمذي، ونقل أنه قال: حديث غريب، وما أرى إسناده بمتصل. وهكذا نقل الحافظ في التلخيص (ص96) أيضاً. قال صاحب التعليق المذكور: ليس في شيء من النسخ التي معي من الترمذي عبارة “وما أرى إسناده بمتصل”، وكذلك قال شيخنا في شرح الترمذي: إن هذه العبارة ليست في النسخ المطبوعة والقلمية الموجودة عندنا. قال صاحب التعليق: وأنا أظن أن الحافظ الزيلعي انتقل نظره حين الكتابة إلى كلام الترمذي على حديث عائشة الآتي، وأن الحافظ ابن حجر ‌نقل ‌منه ‌تقليداً ‌له ‌فقط – انتهى. وقال الحافظ في الدراية: أخرجه الترمذي والحاكم بإسناد ضعيف. قلت: الظاهر أن هذا الحديث لا ينحط عن درجة الحسن، وأن سنده متصل،

உபைதுல்லாஹ் முபாரக்பூரீ அவர்களின் ‘மிர்ஆதுல் மஃபாதீஹ் ஷரஹ் மிஷ்காதுல் மஸாபீஹ் (2/ 314)’ எனும் நூலில் இடம் பெற்றுள்ள விளக்கத்தின் தமிழாக்கம் பின்வருமாறு:

திர்மிதீ இமாம் அவர்கள் இந்தச் செய்திக்கு குறிப்பிட்ட அடிக்குறிப்பு பற்றிய விளக்கம்:

(அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
முஹம்மது ஷாகிர் அவர்களின் குறிப்புரையுடன் இடம்பெற்றுள்ள எகிப்தில் அச்சிடப்பட்ட திர்மிதீ நூல் பிரதியில் உள்ள தகவல்படி) திர்மிதீ இமாம் இந்த ஹதீஸ் “ஃகரீப் ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும் என்று கூறியுள்ளார்.

அறிஞர்களின் மாறுபட்ட பதிவுகள்:

ஸைலஈ அவர்கள் தமது ‘நஸ்புர் ராயா’ (பாகம் 1, பக்கம் 244) நூலில் திர்மிதீ அவர்களை மேற்கோள் காட்டி, “இது ‘ஃகரீப்’ ஆன ஹதீஸ்; இதன் அறிவிப்பாளர்தொடரை முத்தஸிலாக நான் கருதவில்லை” என்று திர்மிதீ இமாம் கூறியதாகப் பதிவு செய்துள்ளார்.

ஸைலஈ அவர்களைப் பின்பற்றி இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களும் தமது ‘அத்தல்கீஸ்’ (பக்கம் 96) நூலில் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்.

எகிப்து பிரதியின் குறிப்புரையாளர் (அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர்) பின்வருமாறு கூறுகிறார்:

“என்னிடம் உள்ள திர்மிதீ அவர்களின் எந்தப் பிரதியிலும் ‘இதன் அறிவிப்பாளர் தொடர் முத்தஸிலாக நான் கருதவில்லை’ என்ற வாசகம் இடம் பெறவில்லை. அதேபோல், எமது ஆசிரியர் அவர்களும் ‘திர்மிதீ விரிவுரையில், ‘எங்களிடம் உள்ள அச்சுப் பிரதிகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் இந்த வாசகம் இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர் கூறுகிறார்:

ஸைலஈ அவர்கள், இதற்கு அடுத்து வரும் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸைப் பற்றி திர்மிதீ இமாம் அவர்கள் கூறிய கருத்தை, தவறுதலாக இந்த ஹதீஸிற்கு எழுதிவிட்டார்கள் என நான் கருதுகிறேன். (பார்க்க: திர்மிதீ-174) இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களும் ஆய்வு செய்யாமல் ஸைலஈ அவர்களை பின்பற்றி அவ்வாறு எழுதிவிட்டார்.

மேலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் தமது ‘அத்திராயா’ எனும் நூலில், “திர்மிதீ, ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
ஆகியோர் பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் இதை பதிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த ஹதீஸ் ‘ஹஸன்’ என்ற தரத்தை விட்டு குறைந்து விடாது என்பதும், இதன் அறிவிப்பாளர்தொடர் முத்தஸில்-இடைமுறிவு ஏற்படாதது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.


تخريج الأحاديث المرفوعة المسندة في كتاب التاريخ الكبير (1/ 481):
… غير أنه وقع في رواية الترمذي: عن محمد بن عمر بن علي بن أبي طالب، عن أبيه، وسقط عنده عن جده، وقد ورد في بعض النسخ في الموضع الأول قول الترمذي عن الحديث أنه غريب حسن، وقال في الموضع الثاني: غريب وما أرى إِسناده بمنصل، وقد نقل هذا الحكم عنه الزيلعي في نصب الراية (3/ 197)، والحافظ ابن حجر في التلخيص (1/ 186)، وذكر الشيخ المباركفوري في التحفة (1/ 155) وتبعه الشيخ أحمد شاكر، أن عبارة الترمذي الأخيرة ليست في النسخ المطبوعة والخطوطة، وأضاف الشيخ أحمد شاكر أن الزيلعي انتقل نظره حين الكتابة إلى حديث آخر، وأن الحافظ ابن حجر نقل منه تقليدا له فقط، وقال: هذا الحديث إِسناده صحيح ورواته ثقات.
قلت: عبارة الترمذي ثابتة كما نقلها الزيلعي وابن حجر، وهي في كتاب الجنائز كما تقدم، ويبدو أن الخطأ فديم، حصل في نسخة الترمذي نفسه ويدل لذلك وروده في الموضعين، فسقط من الإِسناد رجل، فحكم الترمذي حسب ما ظهر له، أن إِسناده ليس بمتصل، وهو كذلك في نسخته وقد راجعت نسخ التاريخ الكبير للبخاري، والحديث فيها ثابت من رواية محمد بن عمر بن علي، عن أبيه، عن جده، وكذا هو عند غير الترمذي. فأخرجه الإِمام أحمد في المسند (1/ 105) من طريق: هارون بن معروف، وكذلك رواه ابنه عبد الله عن هارون، عن ابن وهب به مثله. وابن ماجة في السنن (1/ 476) -كتاب الجنائز -باب ما جاء في الجنازة لا تؤخر- من طريق: حرملة بن يحيى، عن ابن وهب به مثله، بشان الجنازة فحسب.

புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் தாரீகுல் கபீரில் இடம்பெற்ற மர்ஃபூவான ஹதீஸ்களின் தக்ரீஜ் நூலில் இடம் பெற்றுள்ள இந்த ஆய்வின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது:

திர்மிதீ அவர்களின் குறிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்:

திர்மிதீ அவர்களின் பதிப்பில் இந்த அறிவிப்பாளர்தொடரில் விடுபடல் ஏற்பட்டுள்ளது. அதாவது முஹம்மத் பின் உமர் அலீ பின் அபூதாலிப் அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிப்பதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. இதில் ‘அவரது பாட்டனார் (அலீ-ரலி) அவர்களிடமிருந்து’ என்ற வாசகம் விடுபட்டுள்ளது. இதன் விவரம்:

திர்மிதீ அவர்களின் இரண்டு விதமான தீர்ப்புகள்:

சில பிரதிகளில், முதலிடத்தில் இந்த ஹதீஸைப் பற்றி திர்மிதீ அவர்கள் ‘ஃகரீப் ஹஸன்’ என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில், “இது ‘கரீப்’ ஆகும்; இதன் அறிவிப்பாளர்தொடரை முத்தஸிலாக நான் கருதவில்லை” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டாவது கருத்தையே ஸைலஈ அவர்கள் ‘நஸ்புர் ராயா’விலும் (3/ 197), இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் ‘அத்தல்கீஸ்’ எனும் நூலிலும் (1/ 186) பதிவு செய்துள்ளனர்.

அறிஞர்களின் விமர்சனம்:

முபாரக்பூரி அவர்கள் ‘துஹ்ஃபதுல் அஹ்வதீ’ (1/ 155) நூலிலும், அவரைப் பின்பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர் அவர்களும் பின்வருமாறு விளக்குகிறார்கள்:

“திர்மிதீ இமாம் அவர்கள் கூறியதாகச் சொல்லப்படும் ‘இந்த அறிவிப்பாளர்தொடர் முத்தஸில் அல்ல’ என்ற வாசகம் சில அச்சுப் பிரதிகளிலோ, கையெழுத்துப் பிரதிகளிலோ காணப்படவில்லை. ஸைலஈ அவர்கள் வேறொரு ஹதீஸைப் பற்றிய கருத்தை இங்குக் கவனக் குறைவாகக் குறிப்பிட்டுவிட்டார்கள். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் ஆய்வு செய்யாமல் அவரைப் பின்பற்றி அப்படியே எழுதிவிட்டார்கள்.

உண்மையில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது; இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பிக்கைக்குரியவர்கள்.

இதன் ஆய்வாளர் முஹம்மத் பின் அப்துல்கரீம் கூறுகிறார்:

அறிவிப்பாளர்தொடரில் பாட்டனார் விடுபட்டது பற்றி:

ஸைலஈ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் குறிப்பிட்ட திர்மிதியின் அந்த வாசகம் (ஜனாஸா பாடத்தில்) உள்ளது. இந்தத் தவறு ஆரம்பத்திலே ஏற்பட்டுள்ளது. அதாவது திர்மிதீ அவர்களிடமிருந்த பிரதியிலேயே இந்தத் தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளது.

(அஸலில் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர் أَنَّ مُحَمَّدَ بْنَ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ – என்று உள்ளதாகும்) இதில் திர்மிதீ அவர்களின் பதிப்பில் ஆரம்பத்தில் عَنْ جَدِّهِ என்பது விடுபட்டுள்ளது. எனவே தான் திர்மிதீ அவர்கள் இதன் ‘அறிவிப்பாளர்தொடர் முத்தஸில் அல்ல’ என்று கூறியுள்ளார்.

இதே போன்ற அறிவிப்பாளர்தொடர் அமைப்பில் தான் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் ‘தாரீகுல் கபீர்’ பிரதிகளில் இந்த ஹதீஸ் ‘முஹம்மத் பின் உமர் பின் அலீ —>  அவரது தந்தை —> அவரது பாட்டனார் (அலீ-ரலி)’ என்று முழுமையாக இடம்பெற்றுள்ளது.

التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل (1/ 177):
وَقَالَ لنا قُتَيبَة: حدَّثنا ابْنُ وَهْبٍ، عَنْ سَعِيد بْنِ عَبد اللهِ الجُهَنِيّ، عَنْ مُحَمد بْنِ عُمَر بْنِ عَلِيِّ بْن أَبي طالب، عَنْ أَبيه، عَنْ جَدِّه؛ أَنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال لَهُ: يَا عَلِيُّ، ثَلَاثٌ ‌لَا ‌تُؤَخِّرها: الصَّلَاةُ إِذا آنَت، والجَِنازَةُ إِذا حَضَرَت، والأَيِّمُ إِذا وجَدتَ لَها كُفؤًا.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களின் ‘அஹ்மத்-828’ (1/ 105) நூலிலும், இப்னு மாஜா அவர்களின் ‘இப்னு மாஜா-1486’ (1/ 476) நூலிலும் இப்னு வஹ்ப் வழியாக இதே போன்ற அமைப்பில் عن جده என்று அறிவிப்பாளர்தொடர் உள்ளது.

(நூல்: தக்ரீஜ்-தாரீகுல் புகாரீ-1/481)

(பிறகு நூல்களை பதிப்பில் கொண்டுவந்தவர்கள் திர்மிதீ நூலிலும், மற்றவற்றிலும் عن جده என்பதற்கு பின்பு عَلِيِّ بْن أَبي طالب – அலீ பின் அபூதாலிப் என்று சேர்த்துள்ளனர் எனத் தெரிகிறது)

இதனடிப்படையில் திர்மிதீ நூலின் விரிவுரையான துஹ்ஃபதுல் அஹ்வதீ எனும் நூலின் ஆசிரியரும்,  அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
ஷாகிர் அவர்களும் வேறு சிலரும் இதை சரியான ஹதீஸ் என்று கூறியுள்ளனர்.

இதைச் சரியான செய்தி என்று கூறக்கூடியவர்கள் மற்ற ஹதீஸ்களை இணைத்து இதில் இடம்பெறும் தடை வார்த்தைக்கு இவற்றை தாமதப்படுத்துவதை விட விரைவுப்படுத்துவது நல்லது, சிறந்தது என்று விளக்கம் அளிக்கின்றனர். (இதற்கான காரணம் குர்ஆன், ஹதீஸ்களில் வரும் கட்டளை வார்த்தைகள், தடை வார்த்தைகளை எவ்வாறு புரிந்துக் கொள்ளவேண்டும் என்று மார்க்க சட்ட அறிஞர்களிடம் சில விதிமுறைகள் உள்ளன.)

الأم للإمام الشافعي (7/ 305 ط الفكر):
(قال الشافعي – رحمه الله تعالى -): أصل النهي من رسول الله صلى الله عليه وسلم ‌أن ‌كل ‌ما ‌نهى ‌عنه فهو محرم حتى تأتي عنه دلالة تدل على أنه إنما نهى عنه لمعنى غير التحريم إما أراد به نهيا عن بعض الأمور دون بعض وإما أراد به النهي للتنزيه عن المنهي والأدب والاختيار

ஷாஃபிஈ இமாம் கூறுகிறார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒன்றைத்) தடுத்தால், அதன் அசல் சட்டம் அது ‘ஹராம்-தடுக்கப்பட்டது’ என்பதாகும். அந்தத் தடை ஹராம் அல்லாத வேறொரு கருத்திற்காகத்தான் விதிக்கப்பட்டது என்பதற்கு வேறொரு சான்று வரும் வரை அது ஹராமாகவே கருதப்படும்.

(அத்தகைய சான்றுகள் வரும்போது) அந்தத் தடை சில காரியங்களுக்கு மட்டும் உரியதாகவும், சிலவற்றுக்கு விலக்களிப்பதாகவும் இருக்கலாம்; அல்லது அது ஒரு காரியத்தைத் தடுத்தது பேணுதலுக்காகவோ (தன்ஸீஹ்), ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதற்காகவோ அல்லது சிறந்ததைத் தேர்ந்தெடுப்பதற்காகவோ இருக்கலாம்.

(நூல்: அல்உம்மு-7/305)

இந்தச் செய்தி மற்ற செய்திகளுக்கு முரண்படவில்லை என்று கூறுவோர் கூறும் விளக்கம்:

1 . தடுக்கப்பட்ட நேரத்தில் தொழுவது “சிறந்தது அல்ல” என்ற கருத்தில் கூறப்பட்டது என்பதற்கு ஆதாரம். (ஜனாஸா)

பார்க்க: புகாரி-579,

2 . சில தொழுகைகளை சில காரணங்களால் தாமதப்படுத்தலாம் என்று வேறு ஹதீஸ்களில் இருப்பதால் இதில் உள்ள نهي தடை வார்த்தைக்கு தஹ்ரீம்-ஹராம் என்று எடுத்துக் கொள்ளாமல் ஆரம்ப நேரத்தில் தொழுவது நல்லது என்று பொருள் கொள்ள வேண்டும் என்றும், இதற்கு சான்றாக பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ஆரம்ப நேரத்தில் தான் தொழுதனர் என்றும் கூறுகின்றனர்.

3 . பெண்ணுக்கு பொருத்தமான வரன்.

இதன் கருத்து முஸ்லிமாக, நல்ல மனிதராக இருப்பது என்பதுடன் வேறு ஹதீஸ்களின் அடிப்படையில் மணப்பெண்ணின் சம்மதமும் தேவை என்பதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். (புகாரி-5090…இந்தச் செய்தியின் கருத்தை தனியாக புரிந்துக் கொள்ளமாட்டோம்)


2 . வேறு சில அறிஞர்களான ஈராக்கீ போன்றோர் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

تخريج أحاديث الإحياء = المغني عن حمل الأسفار (ص449):
وَالتِّرْمِذِيّ من حَدِيث عَلّي» ثَلَاثَة لَا تؤخرها: الصَّلَاة إِذا أَتَت ‌والجنازة ‌إِذا ‌حضرت والأيم إِذا وجدت كُفؤًا” وَسَنَده حسن.

(நூல்: தக்ரீஜு அஹாதீஸுல் இஹ்யா-1/449)


3 . அறிவிப்பாளர்தொடரில் விமர்சனம் இருப்பதால் பலவீனமானது என்று கூறுவோர்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17437-ஸயீத் பின் அப்துல்லாஹ் அல்ஜுஹனீ என்பவரிடமிருந்து அப்துல்லாஹ் பின் வஹ்ப் மட்டுமே அறிவித்துள்ளதால் இவர் அறியப்படாதவர் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-4/37)

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், இவரை தனது தக்ரீபில் மக்பூல் எனும் தரத்திலும், தனது தல்கீஸுல் ஹபீரில் அறியப்படாதவர் என்றும் கூறியுள்ளார்.

(நூல்கள்: தக்ரீபுத் தஹ்தீப்-1/382, தல்கீஸ்-1/475)

இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்றோர் இதில் இடம்பெறும் ஸயீத் பின் அப்துல்லாஹ் அறியப்படாதவர் என்பதாலும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இது வேறு சில செய்திக்கு முரண்படுகிறது என்பதாலும் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்…

التلخيص الحبير (2/ 520 ط أضواء السلف):
… لكن يعارضه:
[879]- ما رواه مسلم (6) من حديث عقبة بن عامر الجهني: ثلاث ساعات كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن، وأن نقبر فيهن موتانا حين تطلع الشمس بازغة … الحديث.
وحمله بعضهم على الدفن فقط، لكن في “الجنائز” لابن شاهين بلفظ: أن نصلي فيهن على موتانا. لكن فيه خارجة بن مصعب وهو ضعيف. وقال البَيهقيّ (7): ‌أمثل ‌ما ‌ورد ‌في ‌اعتبار ‌الكفاءة حديث على هذا.

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் கூறுகிறார்:

மேற்கண்ட செய்திக்கு மாற்றமாக பின்வரும் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
செய்தி அமைந்துள்ளது:

உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம்; அல்லது இறந்தவர்களைப் புதைக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துவந்தார்கள்.

1 . சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும்வரை.

2 . ஒருவர்உச்சிப் பொழுதில் நிற்கும்போது நிழல் விழாது போகும்) நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் (மேற்கு) சாயும்வரை.

3 . சூரியன் அஸ்தமிக்கத் தலைப்பட்டதிலிருந்து நன்கு மறையும்வரை.

(நூல்: முஸ்லிம்-1511)

சில அறிஞர்கள் ஹதீஸில் வந்துள்ள இந்தத் தடை ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு (دفن) மட்டும்தான் பொருந்தும் என்று கருதுகின்றனர். (அதாவது ஜனாஸா தொழுைக்கு இந்த தடை இல்லை என்று கூறியுள்ளனர்). இருப்பினும், இப்னு ஷாஹீன் பிறப்பு ஹிஜ்ரி 298
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 87
அவர்களின் ‘அல்ஜனாஇஸ்’ நூலில், “அந்த நேரங்களில் எங்களின் இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவதற்கு தடை விதித்தார்கள்” என்ற வாசகத்துடன் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் ‘காரிஜா பின் முஸ்அப்’ பலவீனமானவர் ஆவார்.

“திருமணப் பொருத்தம் குறித்து வந்துள்ள செய்திகளில் இதுவே சிறந்தது” என்று பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/28, தல்கீஸுல் ஹபீர்-2/520, குப்ரா பைஹகீ-13756, 13757)


ஸயீத் பின் அப்துல்லாஹ் அல்ஜுஹனீ பற்றி வேறு சில அறிஞர்களின் நற்சான்று:

ஸயீத் பின் அப்துல்லாஹ் அல்ஜுஹனீ என்பவர் பற்றி இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் தனது ஸிகாத் எனும் நூலில் பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இவ்வாறே இப்னு கல்ஃபூன் பிறப்பு ஹிஜ்ரி 555
இறப்பு ஹிஜ்ரி 636
வயது: 81
அவர்களும் பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.

الثقات للعجلي ت البستوي (1/ 401):
604 – ‌سعيد ‌بن ‌عبد ‌الله ‌الْجُهَنِيّ مصري ثِقَة

ஸயீத் பின் அப்துல்லாஹ் அல்ஜுஹனீ என்பவர் எகிப்தைச் சேர்ந்தவர். பலமானவர்.

(நூல்: அஸ்ஸிகாத்-இஜ்லீ-1/401)


تقريب تقريب التهذيب (1/ 569):
* [2341] ‌سعيد ‌بن ‌عبد ‌الله ‌الجهني حجازي مقبول من السابعة ت عس ق
قلت: حسن الحديث: ذكره البخاري في تاريخه الكبير (3/ 489 رقم 1630) وابن حبان في الثقات وقال العجلي “ثقة” وروى عنه عبد الله بن وهب (تهذيب التهذيب 4/ 52). وأخرج له الحاكم في مستدركه (2/ 176 رقم 2686) وقال “هذا حديث غريب صحيح” ووافقه الذهبي. ولم يرد فيه جرح. وأما قول أبو حاتم “مجهول” فقد وثقه العجلي وترجم له البخاري وابن حبان.

தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீபின் நூலாசிரியர் தனது ஆய்வின்படி இவரை ஹஸன் தரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-2341)


4 . அறிஞர் பி.ஜே போன்றவர்கள் திர்மிதீ இமாம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் கூறியுள்ள தகவல்படியும், இந்தச் செய்தியின் வெளிப்படையான கருத்து வேறு பலமான செய்திகளுக்கு மாற்றமாக உள்ளது என்பதாலும் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்.

பார்க்க:

1 . மூன்று காரியங்களை பிற்படுத்த கூடாது என்பது தொடர்பான ஹதீஸின் நிலை என்ன?.

2 . மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது விரிவான ஆய்வு.


திர்மிதீ அவர்களின் அடிக்குறிப்பை ஏற்பவர்கள், உமர் பின் அலீ, தனது தந்தை அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா? இல்லையா? என்பதால் தான் திர்மிதீ இமாம் இப்படி கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுவிட்டு புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், உமர் பின் அலீ அவர்கள் தனது தந்தையின் சில செயல்களை அறிவித்திருப்பதை வைத்து அவரை சந்தித்துள்ளார்; அவரிடம் ஹதீஸைக் கேட்கும் பருவத்தில் இருந்துள்ளார் என்றும், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களும் உமர் பின் அலீ அவர்கள் தனது தந்தையிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளதை வைத்தும் இது முன்கதிஃ அல்ல. முத்தஸிலான செய்தி தான் என்று கூறுகின்றனர்.

التاريخ الكبير للبخاري (7/ 216 ت الدباسي والنحال):
‌‌[8073] عُمرُ بنُ عَلِيِّ بنِ أَبِي طَالبٍ، الهَاشِميُّ، القُرَشِيُّ .
قَالَ إسْحَاقُ: أَنبأَ عِيسَى بنُ يُونسَ، ثنا ابنُ يَسارٍ، ثنا مُحمَّدُ بنُ عُمَرَ بنِ عَلِيٍّ، عَن أَبيهِ؛ رَأَى عَلِيًّا يَشرَبُ قَائِمًا. حَديثُهُ في أَهلِ المدِينَةِ.
وقالَ ابنُ مُنذِرٍ: ثنا ابنُ أَبي فُدَيكٍ، عنْ عَبدِ اللَّهِ بنِ مُحمَّدِ بنِ عُمَرَ بنِ عَلِيِّ بنِ أَبي طَالبٍ، عَنْ أَبيهِ، عنْ جدِّهِ.


التاريخ الكبير للبخاري (6/ 179 ت المعلمي اليماني):
2096 – عُمَر بْن عَلِيّ بْن أَبِي طالب الَهاشمي القرشى، اسحاق اخ.
عِيسَى بْن يونس حَدَّثَنَا ابْن يسار حَدَّثَنَا مُحَمَّد بْن عُمَر بْن عَلِيّ عَنْ أَبِيه: رأى عليا رضى الله عَنْهُ شرب قائما، حديثه فِي أهل المدينة، ابن منذر حدثنا ابن أَبِي فديك عَنْ عَبْد اللَّه بْن مُحَمَّد بْن عُمَر بْن عَلِيّ بْن أَبِي طَالِبٍ رضى الله عَنْهُ عَنْ أَبِيهِ عَنْ جده: ‌مشى ‌عَلِيّ رضى الله عَنْهُ فِي نعل.

புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் கூறுகிறார்:

8073. உமர் பின் அலீ பின் அபூதாலிப் அல்ஹாஷிமீ அல்குரஷீ.

இஸ்ஹாக் பின் மன்ஸூர் அவர்கள், ஈஸா பின் யூனுஸ் —> இப்னு யஸார் —> முஹம்மத் பின் உமர் பின் அலீ —> உமர் பின் அலீ என்ற அறிவிப்பாளர்தொடரில், “அலீ (ரலி) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை உமர் பின் அலீ அவர்கள் பார்த்தார்” என்று அறிவித்தார்.

இவருடைய ஹதீஸ்கள் மதீனாவாசிகளிடம் புழக்கத்தில் இருந்தன.

இப்னு முன்திர் அவர்கள், இப்னு அபூ ஃபுதைக் —> அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் உமர் —> முஹம்மத் பின் உமர் பின் அலீ —> உமர் பின் அலீ என்ற அறிவிப்பாளர்தொடரில், “அலீ (ரலி) அவர்கள் செருப்பு அணிந்த நிலையில் நடந்தார்கள்” என்று அறிவித்தார்.

(நூல்: தாரீகுல் கபீர்-8073, 2096)

الجرح والتعديل – ابن أبي حاتم (6/ 124):
676 – عمر بن علي بن أبي طالب سمع اباه روى عنه ابنه محمد سمعت ابى يقول ذلك.

அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், உமர் பின் அலீ அவர்களைப் பற்றிய குறிப்பில் இவர் தனது தந்தை அலீ (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்றும் இவரிடமிருந்து இவர் மகன் முஹம்மது பின் உமர் ஹதீஸை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/124)

سؤالات البرقاني للدارقطني ت القشقري (ص22):
85- قلت له: الحسين بن زيد بن علي بن الحسين عن عبد الله بن محمد ابن عمر بن علي ‌عن ‌أبيه ‌عن ‌جده ‌عن ‌علي. فقال كلهم ثقات

மேலும் வேறு ஒரு அறிவிப்பாளர்தொடர் குறித்து தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களிடம் கேட்கப்பட்டது போது அதில் இடம்பெறும் உமர் பின் அலீ —> அலீ பின் அபூதாலிப் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றவர்களை தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் பலமானவர்கள் என்று கூறியுள்ளார். (இதில் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் உமர் பின் அலீ அவர்கள் தனது தந்தை அலீ (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று மறுக்கவில்லை) (ஸுஆலாதுல் பர்க்கானீ-1/22)

(கூடுதல் விவரம் பார்க்க: ஃபள்லுர் ரஹீமுல் வதூத்-5/255-257)

ஹதீஸை செவியேற்பதற்கான வயது வரம்பு:

فتح المغيث بشرح ألفية الحديث (2/ 145):
قال ابن الصلاح: ‌وعليه ‌استقر ‌عمل ‌أهل ‌الحديث ‌المتأخرين، ‌فيكتبون ‌لابن ‌خمس ‌فصاعدا ” سمع “، ولمن لم يبلغها ” حضر أو أحضر “.

இப்னு ஸலாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

பிற்கால ஹதீஸ் கலை அறிஞர்களிடம் நடைமுறையில் உள்ள ஒரு விஷயம் என்னவென்றால், ஐந்து வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு (அவர்கள் சபையில் பங்கேற்றால்) ‘ஸமிஅ’ (செவியேற்றார்) என்று எழுதுவார்கள். ஐந்து வயதை அடையாத சிறுவர்களுக்கு ‘ஹலர’ ஆஜரானார்-பங்கேற்றார் அல்லது ‘உஹ்ளிர’ (அழைத்து வரப்பட்டார்) என்று எழுதுவார்கள்.

(நூல்: பத்ஹுல் முஃகீஸ்-2/145)


الباعث الحثيث شرح اختصار علوم الحديث ط ابن الجوزي (ص240):
قال النووي وابن الصلاح [2] “والصواب اعتبار التمييز، فإن فهم الخطاب ورد الجواب كان مميزاً صحيح السماع، وإن لم يبلغ خمساً، وإلا فلا”.وهذا ظاهر. ولا حجة فيما احتجوا به من رواية محمود بن الربيع، لأن الناس يختلفون في قوة الذاكرة،
ولعل غير محمود بن الربيع لا يذكر ما حصل له وهو ابن عشر سنين، وأيضا فان ذكره مجة وهو ابن خمس سنين لا يدل علي أنه يذكر كُلَّ ما رأي أو سمع، والحق أن العبرة في هذا بأن يميز الصبي ما يراه ويسمعه، وأن يفهم الخطاب ويرد الجواب. وعلى هذا يحمل ما روي عن موسى بن هارون الحمّال، فإنه سئل: “متى يسمع الصبي الحديث؟ ” فقال “إذا فرّق بين البقرة والحمار”. وكذلك ما روي عن أحمد بن حنبل فإنه سئل عن ذلك؟ فقال “إذا عقل وضبط”، فذُكر له عن رجل أنه قال: لا يجوز سماعه حتى يكون له خمس عشرة سنه؟ فأنكر قوله هذا وقال: بئس القول! فكيف يصنع بسفيان ووكيع ونحوهما [3]؟ ! “

நவவீ,பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இப்னு ஸலாஹ் ஆகியோர் கூறுகிறார்கள்:

“சிறுவன் நல்ல விவரம் உள்ளவனாக இருப்பதே சரியான அளவுகோலாகும். உரையாடல்களைப் புரிந்து கொண்டு, கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் திறன் ஒரு சிறுவனுக்கு இருக்குமேயானால், அவன் ஐந்து வயதை அடையாவிட்டாலும் அவனது செவியேற்பு (ஸமாஃ) சரியானதாகும். இல்லையெனில் அது சரியாகாது. இதுவே வெளிப்படையான உண்மையாகும்.

மஹ்மூத் பின் அர்ரபீஃ (ரலி) அவர்கள் (நபியவர்கள் வாயிலிருந்து நீரை உமிழ்ந்ததை ஐந்து வயதில் நினைவில் வைத்திருந்தது) தொடர்பாக முன்வைக்கப்படும் வாதங்கள் ஆதாரமாகக் கொள்ளப்படமாட்டாது. ஏனெனில், மக்களின் நினைவாற்றல் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்.

மஹ்மூத் பின் அர்ரரபீஃ (ரலி) அவர்கள் அல்லாத பிற சிறுவர்கள் பத்து வயதில் நடந்ததைக் கூட நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். மேலும், மஹ்மூத் பின் அர்ரரபீஃ (ரலி) அவர்கள் தனது ஐந்து வயதில் நடந்த ஒரு நிகழ்வை நினைவில் வைத்திருப்பது என்பது, அவர் பார்த்த அல்லது கேட்ட அனைத்தையும் நினைவில் வைத்திருப்பார் என்பதற்கு ஆதாரமாகாது.

எனவே, சிறுவன் தான் காண்பவற்றையும் கேட்பவற்றையும் பிரித்தறியும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்; பேசுவதைப் புரிந்து பதில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும் என்பதே சரியான கருத்தாகும்.

மூஸா பின் ஹாரூன் அல்ஹம்மால் (ரஹ்) அவர்களின் கூற்றும் இதை நோக்கியே அமைகிறது. “ஒரு சிறுவன் எப்போது ஹதீஸைச் செவியேற்கலாம்?” என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, “அவன் பசுவிற்கும் கழுதைக்கும் இடையில் வித்தியாசம் காணும் போது” என்று பதிலளித்தார்.

அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல் அவர்களிடமும் இது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவன் புரிந்து கொள்ளும் திறனையும், மனனம் செய்யும் திறனை அடையும் போது” என்று பதிலளித்தார்கள். அப்போது அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களிடம், ஒரு மனிதர் “சிறுவனுக்கு பதினைந்து வயதாகும் வரை அவன் ஹதீஸை செவியேற்பது கூடாது” என்று கூறுகிறாரே என்று சொல்லப்பட்டது. இதை மறுத்த இமாம் அவர்கள், “இது மிகவும் மோசமான கூற்று! அப்படியானால் ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
வகீஃ போன்றோர் விஷயத்தில் அவர் என்ன சொல்லப் போகிறார்?” (ஏனெனில் இவர்கள் மிகச் சிறிய வயதிலேயே ஹதீஸைக் கற்கத் தொடங்கிவிட்டனர்) எனக் கூறினார்கள்.

(நூல்: அல்பாயிஸுல் ஹஸீஸ்-இக்திஸாரு உலூமில் ஹதீஸின் விரிவுரை-1/240)


ஆய்வுக்காக: صحة حديث: ثلاث لا يؤخرن


1 . இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: … அஹ்மத்-828, இப்னு மாஜா-1486, திர்மிதீ-1075, 171, ஹாகிம்-2686, குப்ரா பைஹகீ-13757, ஸகீர் பைஹகீ-2409, 2410,  …


 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: …

2 comments on Tirmidhi-1075

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.