பாடம்:
(தனக்கு) கிடைத்த ஒரு பொருளுக்கு ஒரு வருடம் கடக்கும் வரை ஸகாத் இல்லை என்பது குறித்து வந்துள்ளவை.
631. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு அல்லாஹ்விடம் ஜகாத் இல்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி, ஸர்ராஃ பின்த் நப்ஹான் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
بَابُ مَا جَاءَ لَا زَكَاةَ عَلَى المَالِ المُسْتَفَادِ حَتَّى يَحُولَ عَلَيْهِ الحَوْلُ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا هَارُونُ بْنُ صَالِحٍ الطَّلْحِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ اسْتَفَادَ مَالًا فَلَا زَكَاةَ عَلَيْهِ، حَتَّى يَحُولَ عَلَيْهِ الحَوْلُ عِنْدَ رَبِّهِ»
وَفِي البَابِ عَنْ سَرَّاءَ بِنْتِ نَبْهَانَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-572.
Tirmidhi-Shamila-631.
Tirmidhi-Alamiah-572.
Tirmidhi-JawamiulKalim-572.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்.
2 . யஹ்யா பின் மூஸா.
3 . ஹாரூன் பின் ஸாலிஹ்.
4 . அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம்.
5 . ஸைத் பின் அஸ்லம்.
6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21745-அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் பற்றி, இவர் தனது தந்தையிடமிருந்து நூஹ் (அலை) அவர்கள் வரைக்கும்கூட அறிவிப்பாளர்தொடரைக் கூறுவார் என்று விமர்சித்துள்ளார்கள்.
- இவர் என்ன கூறுகிறார் என்பது இவருக்கே தெரியாது என்ற கருத்தில் அப்துல்அஸீஸ் பின் முஹம்மத், மஃன் பின் ஈஸா ஆகியோர் கூறியுள்ளனர்.
- இப்னுல் மதீனீ,பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
ஆகியோர் இவர் மிக பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இப்ராஹீம் பின் யஃகூப் அல்ஜோஸ்ஜானீ, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, திர்மிதீ, நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற பலரும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - இவர் தனது தந்தையிடமிருந்து இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார் என ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் விமர்சித்துள்ளார். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் மட்டுமே இவரை சிலர் உண்மையாளர் என்று கூறியுள்ளனர். இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளலாம் என்ற கூறி இவரை ஹஸன் தரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/441, அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/233, தஹ்தீபுல் கமால்-17/114, அல்காஷிஃப்-3/253, தஹ்தீபுத் தஹ்தீப்-2/507, தக்ரீபுத் தஹ்தீப்-1/578)
அதிகமானவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தச் செய்தியை இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களின் சொல்லாகத்தான் பலமான அறிவிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்…
2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துர்ரஹ்மான் பின் ஸைத் —> ஸைத் பின் அஸ்லம் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: திர்மிதீ-631 , தாரகுத்னீ-1888 , குப்ரா பைஹகீ-7323 ,
- நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: மாலிக்-657 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, திர்மிதீ-632 , தாரகுத்னீ-1887 , 1894 , 1895 , குப்ரா பைஹகீ-,
மேலும் பார்க்க: இப்னு மாஜா-1792 .
இந்த ஹதீஸின் நம்பகத்தன்மை பற்றி கூறவும்
Tirmidhi-631