பாடம்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் என்னக் கூறவேண்டும்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் (தஷஹ்ஹுத்) அறிவிப்பை கேட்கக்கூடியவர், “வ அன அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பா, வபி முஹம்மதிர் ரஸூலா, வபில் இஸ்லாமி தீனா” என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நானும் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதை லைஸ் பின் ஸஃத் —> ஹுகைம் பின் அப்துல்லாஹ் பின் கைஸ் என்ற அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.
(திர்மிதி: 210)بَابُ مَا يَقُولُ إِذَا أَذَّنَ المُؤَذِّنُ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ الحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مَنْ قَالَ حِينَ يَسْمَعُ المُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالإِسْلَامِ دِينًا، غُفِرَ لَهُ ذَنْبُهُ
وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، عَنْ حُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-194.
Tirmidhi-Shamila-210.
Tirmidhi-Alamiah-194.
Tirmidhi-JawamiulKalim-194.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . குதைபா பின் ஸஃத்
3 . லைஸ் பின் ஸஃத்
4 . ஹுகைம் பின் அப்துல்லாஹ் பின் கைஸ்
5 . ஆமிர் பின் ஸஃத்
6 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
இந்தச் செய்தியை லைஸ் பின் ஸஃத் அவர்களிடமிருந்து அறிவிப்பவர்கள் சிறிது வார்த்தை வித்தியாசத்துடன் அறிவித்துள்ளனர்.
“வ அன அஷ்ஹது” என்ற வார்த்தையை, பாங்கு சொல்பவர் “அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ்” என்று கூறும் போது சொல்வது தான் பொருத்தமானது என்பதால் சில அறிஞர்கள் இந்த பிரார்த்தனையை அப்போது தான் கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
சிலர், இதை “பாங்கின் இறுதியில் கூறவேண்டும்” என்றும்; வேறு சிலர் “பாங்கின் சத்தம் முதலில் கேட்கும் போது கூறவேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- லைஸ் பின் ஸஃத் —> ஹுகைம் பின் அப்துல்லாஹ் —> ஆமிர் பின் ஸஃத் —> ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29249, அஹ்மத்-1565, … முஸ்லிம்-630, இப்னு மாஜா-721, அபூதாவூத்-525, திர்மிதீ-210, முஸ்னத் பஸ்ஸார்- 1130 , குப்ரா நஸாயீ- 1655, 9818, நஸாயீ-679, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு குஸைமா-421, 422, …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
1 . ரளீத்து பில்லாஹி ரப்பன்.
பார்க்க: முஸ்லிம்-3829, 56,
2 . பாங்குடன் தொடர்புடைய துஆக்கள்.
பார்க்க: முஸ்லிம்-628,
சமீப விமர்சனங்கள்