தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2987

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

ஸுபைர் பின் அப்துல்முத்தலிப் அவர்களின் மகள்களான உம்முல்ஹகம் (ரலி) அல்லது ளுபாஆ (ரலி) (ஆகிய இருவரில் ஒருவர்) அறிவிக்கிறார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் போரில் சிறைபிடிக்கப்பட்டவர்கள் கிடைத்தனர். நான், என் சகோதரி, நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா (ரலி) ஆகியோர் நபியவர்களிடம் சென்றோம். நாங்கள் அனுபவித்து வரும் சிரமங்களைப் பற்றி அவர்களிடம் முறையிட்டோம். மேலும், அந்தச் சிறைபிடிக்கப்பட்டவர்களிலிருந்து எங்களுக்கு உதவிக்கு யாரையாவது வழங்குமாறு கேட்டோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பத்ருப் போரில் அநாதைகளானவர்கள், உங்களை முந்திவிட்டனர். ஆனால், அதைவிடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் காட்டித் தருகிறேன்: (அது என்னவெனில்)

ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்தி மூன்று முறை ‘அல்லாஹு அக்பர்-அல்லாஹ் மிகப்பெரியவன்’ எனக் கூறுங்கள்; முப்பத்தி மூன்று முறை ‘ஸுப்ஹானல்லாஹ்-அல்லாஹ் தூயவன்’ எனக் கூறுங்கள்; முப்பத்தி மூன்று முறை ‘அல்ஹம்து லில்லாஹ்-புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே’ எனக் கூறுங்கள். மேலும் (இறுதியில்) “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக லஹு, லஹுல் முல்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்” (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று சொல்லுங்கள்” எனக் கூறினார்கள்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யாஷ் பின் உக்பா அவர்கள் கூறுகிறார்கள்:

ஸுபைர் பின் அப்துல்முத்தலிப் அவர்களின் இரு மகள்களும் நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகள்களாவர்.

(அபூதாவூத்: 2987)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَيَّاشُ بْنُ عُقْبَةَ الْحَضْرَمِيُّ، عَنِ الْفَضْلِ بْنِ الْحَسَنِ الضَّمْرِيِّ، أَنَّ أُمَّ الْحَكَمِ، أَوْ ضُبَاعَةَ ابْنَتَيِ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، حَدَّثَتْهُ عَنْ إِحْدَاهُمَا، أَنَّهَا قَالَتْ:

أَصَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْيًا، فَذَهَبْتُ أَنَا وَأُخْتِي، وَفَاطِمَةُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَكَوْنَا إِلَيْهِ مَا نَحْنُ فِيهِ، وَسَأَلْنَاهُ أَنْ يَأْمُرَ لَنَا بِشَيْءٍ مِنَ السَّبْيِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” سَبَقَكُنَّ يَتَامَى بَدْرٍ، لَكِنْ سَأَدُلُّكُنَّ عَلَى مَا هُوَ خَيْرٌ لَكُنَّ مِنْ ذَلِكَ: تُكَبِّرْنَ اللَّهَ عَلَى إِثْرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ تَكْبِيرَةً، وَثَلَاثًا وَثَلَاثِينَ تَسْبِيحَةً، وَثَلَاثًا وَثَلَاثِينَ تَحْمِيدَةً، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ “، قَالَ عَيَّاشٌ: وَهُمَا ابْنَتَا عَمِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2987.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2597.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


تحفة الأشراف بمعرفة الأطراف (13/ 76):
18314 -[د] حديث: أصاب رسول الله صلى الله عليه وسلم سبياً فذهبت أنا وأختي وفاطمة بنت رسول الله صلى الله عليه وسلم فشكونا ما نحن فيه … الحديث.
د في الخراج (والإمارة 20: 10) وفي الأدب (109: 5) عن أحمد بن صالح، عن ابن وهب، عن عياش بن عقبة الحضرمي، عن الفضل بن الحسن الضمري أن ابن أم الحكم أو ضباعة ابنتي الزبير حدثه عن إحداهما أنها قالت … فذكره.

 


இந்தக் கருத்தில் உம்முல் ஹகம் (ரலி) அல்லது ளுபாஆ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2987, 5066, ஷரஹ் மஆனில் ஆஸார்- 5417, 5418, அல்முஃஜமுல் கபீர்-, …


இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்:

பார்க்க: புகாரி-5361.


மேலும் பார்க்க: முஸ்லிம்-1044.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.