காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். பின்பு அன்னையே! எனக்கு நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களின் இரு தோழர்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் மண்ணறைகளைத் திறந்து காட்டுங்கள் என்றேன். எனவே, எனக்கு அவர்கள் மூன்று மண்ணறைகளையும் திறந்துகாட்டினார்கள். அவைகள் மிகவும் உயரமில்லாமலும், தரை மட்டமாக இல்லாமலும், அதன் மீது அர்ஸா எனும் இடத்திலிருக்கும் சிகப்பு நிற கூலாங்கற்களும் போடப்பட்டு இருந்தன.
(அபூதாவூத் இமாம் அவர்களின் மாணவர்களில் ஒருவரான) அபூஅலீ-முஹம்மத் பின் அஹ்மத் பின் அம்ர் அல்லுஃலுஈ கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்களின் மண்ணறை முதலாவதாகவும், அவர்களின் தலைக்கு அருகில் (இடதுபக்கமாக) அபூபக்ர் (ரலி) அவர்களின் மண்ணறையும், இவர்களுக்கு அடுத்ததாக (இடதுபக்கமாக) உமர் (ரலி) அவர்களின் மண்ணறையும் (நபி ஸல் அவர்களின் கால்பகுதிக்கு நேராக) ஆரம்பமாகிறது என்று கூறப்படுகிறது.
(அபூதாவூத்: 3220)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ هَانِئٍ، عَنِ الْقَاسِمِ، قَالَ:
دَخَلَتْ عَلَى عَائِشَةَ، فَقُلْتُ: يَا أُمَّهِ اكْشِفِي لِي عَنْ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَاحِبَيْهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «فَكَشَفَتْ لِي عَنْ ثَلَاثَةِ قُبُورٍ لَا مُشْرِفَةٍ، وَلَا لَاطِئَةٍ مَبْطُوحَةٍ بِبَطْحَاءِ الْعَرْصَةِ الْحَمْرَاءِ»
قَالَ أَبُو عَلِيٍّ: يُقَالُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقَدَّمٌ وَأَبُو بَكْرٍ عِنْدَ رَأْسِهِ، وَعُمَرُ عِنْدَ رِجْلَيْهِ، رَأْسُهُ عِنْدَ رِجْلَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3220.
Abu-Dawood-Alamiah-2803.
Abu-Dawood-JawamiulKalim-2805.
ஆய்வின் சட்ட சுருக்கம்:
நபி (ஸல்) அவர்களின் கப்ர் எவ்வாறு இருந்தது? என்பது பற்றி இரு வகையான செய்திகள் உள்ளன.
1 . مسطح முஸத்தஹ்-நீளவாக்கில் செவ்வகமாக இருப்பது.
அதாவது கப்ரின் தரைப் பகுதியிலிருந்து ஒரு சாண் அல்லது சில சாண் மேலே உயர்ந்து ஒரே வடிவத்தில் இருப்பது.
2 . مسنم முஸன்னம்-தற்போது நாம் காணும் வடிவத்தில் இருப்பது.
அதாவது கப்ரின் தரைப் பகுதியிலிருந்து ஒரு சாண் அல்லது சில சாண் மேலே உயர்ந்து, கீழ்ப் பகுதி அகலமாகவும்; மேல் பகுதி ஒடுக்கமாகவும் இருப்பது.
இதையே ஒட்டகத்தின் திமில் போன்றது என்றும், பிரமிட் வடிவத்தில் இருப்பது என்றும் குறிப்பிடுகிறார்கள்.
3 . நபி (ஸல்) அவர்கள், تسوية தஸ்வியத் முறையில் அதாவது கப்ரை தரைமட்டமாக ஆக்கவேண்டும் என்று கட்டளையிட்டதாக சரியான ஹதீஸ்கள் உள்ளன.
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ (ரஹ்), நூல்: முஸ்லிம்-1764 .
காஸிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட செய்தியின் மூலம் நபி (ஸல்) அவர்களின் கப்ர் நீளவாக்கில் செவ்வகமாக இருந்துள்ளது என்றுத் தெரிகிறது. இப்படி இருந்தால் தான் கூலாங்கற்கள் அதன் மீது போடப்பட்டு இருந்தன என்று கூறமுடியும்.
ஸுஃப்யான் அத்தம்மார் (ரஹ்) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் கப்ர் முஸன்னம் வடிவத்தில் இருந்ததை தான் பார்த்ததாக அறிவித்துள்ளார்.
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம் அவர்கள் இந்த இரண்டு வகையான செய்திகளையும் இணைத்து கூறியுள்ள விளக்கம்:
நபி (ஸல்) அவர்களின் கப்ர் ஆரம்பத்தில், காஸிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றுத்தான் இருந்துள்ளது. பிறகு வலீத் பின் அப்துல்மலிக்கின் ஆட்சியின் போது நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதை சரிசெய்த போது முஸன்னம் வடிவத்தில் மாற்றப்பட்டது. இதைத்தான் ஸுஃப்யான் அத்தம்மார் (ரஹ்) அவர்கள் பார்த்து அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
கப்ரை பூசக்கூடாது; கப்ரின் மீது கட்டிடம் எழுப்பக்கூடாது போன்ற ஹதீஸ்களின் அடிப்படையில் கப்ரிலிருந்து எடுத்த மண்ணைவிட கூடுதலான மண்ணை சேர்க்கக் கூடாது என்ற விசயத்தில் பல அறிஞர்கள் ஒன்றுப் பட்டுள்ளனர்.
எனவே மய்யிதைக் கப்ரில் வைக்கும்போது அதனுடன் கட்டைகள், பாய் போன்ற பொருட்களையும் வைத்து அடக்கம் செய்யும் போது கப்ர் தரையை விட்டு சற்று உயர்வாக இருக்கும்.
எனவே தான், அலீ (ரலி) அவர்கள் வழியாக வரும், “கப்ரை தரைமட்டமாக ஆக்கவேண்டும்” என்ற ஹதீஸுக்கு நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் போன்ற அறிஞர்கள் “மற்ற சாதாரண கப்ருகள் இருக்கும் நிலைக்கு சமப்படுத்த வேண்டும்” என்று பொருள் கூறியுள்ளனர்.
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
இமாம் அவர்கள், கப்ரை முஸத்தஹ் வடிவத்தில் அமைப்பது பித்அத்வாதிகளின் வழமையாகிவிட்டது என்பதால் நாம் முஸன்னம் வடிவத்தில் அமைப்பதையே நல்லது என்று கருதுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(பார்க்க: குப்ரா பைஹகீ-6761)
சில அறிஞர்கள் கப்ரை முஸத்தஹ் அமைப்பில் வைப்பதே சிறந்தது என்றும் வேறு சில அறிஞர்கள் முஸன்னம் அமைப்பில் வைப்பதே சிறந்தது என்றும் கூறியுள்ளனர்.
உஹதுப் போரில் ஷஹீதானவர்களின் கப்ருகளும், சில நபித்தோழர்களின் கப்ருகளும் முஸன்னம் வடிவத்தில் இருந்தன என்ற தகவலும் உள்ளது என்பதால் சில அறிஞர்கள், அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில் இருவகை அமைப்புகளும் சரியானதே என்று கூறியுள்ளனர்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ்
3 . முஹம்மத் பின் அபூஃபுதைக்
4 . அம்ர் பின் உஸ்மான் பின் ஹானிஃ
5 . காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)
6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32442-அம்ர் பின் உஸ்மான் பின் ஹானிஃ என்பவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். - இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
இறப்பு ஹிஜ்ரி 230
வயது: 62
அவர்கள், இவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் அடிமை. இவரிடமிருந்து கூஃபாவாசிகள் அறிவித்துள்ளனர் என்ற தகவலை மட்டுமே கூறியுள்ளார். - முஹம்மத் பின் உஸ்மான் பின் அபூஷைபா பிறப்பு ஹிஜ்ரி 156
இறப்பு ஹிஜ்ரி 239
வயது: 83
அவர்களும் இவரை மதீனாவாசிகளின் பட்டியலில் கூறியுள்ளார். - புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
ஆகியோர் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. - (இவரிடமிருந்து சுமார் 5 பேர் அறிவித்துள்ளதால்) தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவர் ஸதூக் தரத்தில் உள்ளவர் போன்றவாராவார் என்று கூறியுள்ளார். - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மஸ்தூர்-நிலை அறியப்படாதவர் எனும் தரத்தில் கூறியுள்ளார். - ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள், இவரை ஹஸன் தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-3/527, அல்இக்மால்-10/231, தஹ்தீபுத் தஹ்தீப்-3/292, தக்ரீபுத் தஹ்தீப்-1/741)
1 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-3220 , முஸ்னத் அபீ யஃலா-4571 , ஹாகிம்-1368 , குப்ரா பைஹகீ-6758 , பைஹகீ-தலாஇலுன் நுபுவ்வஹ்-3240 ,
2 . ஸுஃப்யான் அத்தம்மார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: குப்ரா பைஹகீ-6761 .
3 . ஸாலிஹ் பின் அபுல்அக்ளர் என்பவர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்மராஸீல்-லிஅபீதாவூத்-421.
المراسيل لأبي داود (ص303):
421 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَيَّاشٍ، حَدَّثَهُمْ حَدَّثَنَا صَالِحُ بْنُ أَبِي الْأَخْضَرِ، قَالَ: «رَأَيْتُ قَبْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم شِبْرًا أَوْ نَحْوًا مِنْ شِبْرٍ»
…
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19432-ஸாலிஹ் பின் அபுல்அக்ளர் பலவீனமானவர் என்று பலரும் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-5/111, தஹ்தீபுத் தஹ்தீப்-2/195, தக்ரீபுத் தஹ்தீப்-1/446)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
4 . ஷஅபீ பிறப்பு ஹிஜ்ரி 21
இறப்பு ஹிஜ்ரி 103 / 106
(ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11736 .
5 . பெயர் கூறப்படாத ஒருவர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-11737 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1761 ,
சமீப விமர்சனங்கள்