தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4800

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தான் கூறுவது உண்மையாயினும் வீண் விவாதத்தைக் கைவிடுகிறாரோ, அவருக்கு சொர்க்கத்தின் ஓரத்திலே ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன்.

யார் விளையாட்டிற்காகக் கூடப் பொய் பேசுவதைக் கைவிடுகிறாரோ, அவருக்குச் சொர்க்கத்தின் நடுவிலே ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன்.

யார் தனது நற்பண்புகளை (அழகிய குணங்களை) மேம்படுத்திக் கொள்கிறாரோ, அவருக்குச் சொர்க்கத்தின் உயரிய பகுதியில் ஒரு வீடு கிடைக்க நான் பொறுப்பேற்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(அபூதாவூத்: 4800)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ أَبُو الْجَمَاهِرِ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَعْبٍ أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ السَّعْدِيُّ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ حَبِيبٍ الْمُحَارِبِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4167.
Abu-Dawood-Shamila-4800.
Abu-Dawood-Alamiah-4167.
Abu-Dawood-JawamiulKalim-4169.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்

2 . முஹம்மத் பின் உஸ்மான்-அபுல்ஜமாஹிர்

3 . அய்யூப் பின் ஸுலைமான்-அபூகஅப்

4 . ஸுலைமான் பின் ஹபீப்

5 . அபூஉமாமா (ரலி)-ஸதீ பின் அஜ்லான்


1 . இந்தச் செய்தியை அபுல்ஜமாஹிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் அவர்கள் அபூகஅப் அவர்களின் பெயரை அய்யூப் பின் முஹம்மத் என்று கூறியுள்ளார்.

2 . அபுல்ஜமாஹிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஸுர்ஆ, ஹாரூன் பின் இம்ரான், யஸீத் பின் முஹம்மத், முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான், அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபுல்அஹ்வஸ் ஆகியோர் அபூகஅப் அவர்களின் பெயரை அய்யூப் பின் மூஸா என்று கூறியுள்ளனர். இந்தப் பெயரே சரியானது என்று இப்னு அஸாகிர் அவர்கள் கூறியுள்ளார்.

3 . அபுல்ஜமாஹிர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துஸ்ஸமத் பின் அப்துல்வஹ்ஹாப் அவர்கள் மட்டும் அபூமூஸா கஅப் என்று கூறியுள்ளார்.


இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இவரின் பெயரை அய்யூப் பின் மூஸா, அய்யூப் பின் முஹம்மத், அய்யூப் பின் ஸுலைமான் என்றும் கூறப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவரிடமிருந்து (திமிஷ்க்-டமாஸ்கஸின் முக்கிய ஹதீஸ்துறை அறிஞர்) முஹம்மத் பின் உஸ்மான்-அபுல்ஜமாஹிர் அவர்கள் மட்டுமே ஹதீஸை அறிவித்துள்ளார் என்பதுடன் இவரை பலமானவர் என்று அபுல்ஜமாஹிர் அவர்களே கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-3/498, தஹ்தீபுத் தஹ்தீப்-1/208, தக்ரீபுத் தஹ்தீப்-1/161)


1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4800, …


2 . முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-16671.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.