Author: Farook

Bukhari-5951

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5951. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என (இடித்து)க் கூறப்படும்.

என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book :77


إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ


Bukhari-5950

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 89

உருவங்களைப் படைப்போருக்கு மறுமை நாளில் கிடைக்கும் வேதனை.

5950. முஸ்லிம் இப்னு ஸுபைஹ் (ரஹ்) அறிவித்தார்:

நாங்கள் மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்) அவர்களுடன் யஸார் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களின் இல்லத்தில் இருந்தோம். அப்போது யஸார் (ரஹ்) அவர்களின் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை மஸ்ரூக் (ரஹ்) கண்டார்கள்.

உடனே ‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியேற்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) கூற கேட்டேன்’ என்று மஸ்ரூக் (ரஹ்) கூறினார்கள்.

Book : 77


كُنَّا مَعَ مَسْرُوقٍ، فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ، فَقَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ»


Bukhari-5949

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 88

உருவப் படங்கள்.

5949. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயும் (சிலைகள் முதலான) உருவப் படங்களும் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.132

என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 77


«لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَصَاوِيرُ»

وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ: سَمِعَ ابْنَ عَبَّاسٍ: سَمِعْتُ أَبَا طَلْحَةَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-5948

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5948. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்:

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தின் முடியை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயல்பான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக்கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டுள்ளது.131

Book :77


«لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ»

مَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ


Bukhari-5946

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 87

பச்சை குத்திக்கொள்ளும் பெண்.

5946. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:

பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரலி), ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: பச்சை குத்துவதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ஏதேனும்) செவியுற்றவர் (எவரேனும் உங்களில்) இருக்கிறாரா?’ என்று (எங்களிடம்) கேட்டார்கள்.

நான் எழுந்து, ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நான் செவியுற்றிருக்கிறேன்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘என்ன செவியுற்றீர்கள்?’ என்று கேட்க, ‘(பெண்களே! பிறருக்குப்) பச்சை குத்திவிடாதீர்கள்; நீங்களும் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல செவியுற்றேன் எனக் கூறினேன்.

Book : 77


أُتِيَ عُمَرُ بِامْرَأَةٍ تَشِمُ، فَقَامَ فَقَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ، مَنْ سَمِعَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الوَشْمِ؟

فَقَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُمْتُ فَقُلْتُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ أَنَا سَمِعْتُ، قَالَ: مَا سَمِعْتَ؟ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَشِمْنَ وَلاَ تَسْتَوْشِمْنَ»


Bukhari-5945

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5945. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா (ரஹ்) அறிவித்தார்:

என் தந்தை (அபூ ஜுஹைஃபா (ரலி) குருதி உறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டடேன்.

அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும், நாய் விற்ற காசையும் (பெறக் கூடாதெனத்) தடை செய்தார்கள். மேலும், வட்டி உண்பவனையும் அதை உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் (சபித்தார்கள்.)130

Book :77


«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الكَلْبِ، وَآكِلِ الرِّبَا وَمُوكِلِهِ، وَالوَاشِمَةِ وَالمُسْتَوْشِمَةِ»


Bukhari-5944

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 86

பச்சை குத்திவிடும் பெண்.

5944. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்’ என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.129

…இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 77


«العَيْنُ حَقٌّ» وَنَهَى عَنِ الوَشْمِ

حَدَّثَنِي ابْنُ بَشَّارٍ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: ذَكَرْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، حَدِيثَ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، فَقَالَ: سَمِعْتُهُ مِنْ أُمِّ يَعْقُوبَ، عَنْ عَبْدِ اللَّهِ، مِثْلَ حَدِيثِ مَنْصُورٍ


Bukhari-5943

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5943. அல்கமா (ரஹ்) அறிவித்தார்:

‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) கூறிவிட்டு, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே’ என்று கூறினார்கள்.128

Book :77


«لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ» مَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ


Bukhari-5942

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5942. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

பச்சை குத்துபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டு முடி வைத்துக் கொள்பவளையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

Book :77


«الوَاشِمَةُ وَالمُوتَشِمَةُ، وَالوَاصِلَةُ وَالمُسْتَوْصِلَةُ» يَعْنِي: لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Next Page » « Previous Page